search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் காயம்"

    • கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன்
    • கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 34). டிரைவர். சம்பவத்தன்று காராமணி குப்பத்திலிருந்து சுந்தரவாண்டி வழியாக கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த பெரிய அளவிலான மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பலத்த சத்தத்துடன் எதிர்பாராமல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மின்கம்பம் முறிந்து டிரான்ஸ்பார்மர் கார் மீது விழுந்தது.இந்த விபத்து காரணமாக உடனடியாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரில் இருந்த டிரைவர் சுந்தர் ராமனுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து சுந்தர்ராமனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தை அகற்றி மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அமெரிக்காவின் கென்டக்கியை சேர்ந்தவர் 48 வயதான பெண் கோபாஸ். இவர் டெக்சாசில் உள்ள தனது காதலனை பார்க்க சென்றார். அங்கு ஓரு சூதாட்ட விடுதியில் காதலன் இருந்தார். இதனால் உபெர் வாடகை காரை கோபாஸ் புக் செய்து பயணம் செய்தார்.

    அப்போது ஜுவாரெஸ் மெக்சிகோவுக்கான நெடுஞ்சாலை பலகையை பார்த்து விட்டு தன்னை டிரைவர் மெக்சிகோவுக்கு கடத்தி செல்வதாக நினைத்தார்.

    இதனால் தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தன்னை கடத்தி செல்வதாக கோபாஸ் தவறாக நினைத்து டிரைவரை துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது.

    அவர் மீது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்திய கொடூரமான தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டேனியலின் மனைவி கூறும்போது, தனது கணவர் உபெர் செயலியில் காட்டிய வழியைதான் பின் தொடர்ந்தார் என்றார்.

    • பின்னால் வந்த சரக்கு லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காரிமங்கலம்,

    சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வாழகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (44). லாரி டிரைவர். இவர் லாரியில் பெருந்துறையில் இருந்து இரும்பு பாரம் ஏற்றி கொண்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது இவரது லாரி பழுதாகியது. பின்னர் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு பழுது பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் இருந்த வைக்கோலை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தார்.
    • ராஜ் என்பவருக்கு லேசான தீக்காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 50). இவர் வளர்க்கும் மாடு களுக்கு வைக்கோல் தேவைப்படு வதால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் இருந்த வைக்கோலை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தார். இந்த ஈச்சர் வாகனத்தை தண்ட லை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் பாண்டி யன்குப்பம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக் கொட்டாய் செல்லும் சாலையில் ஈச்சர் வாகனம் சென்று கொண்டிருந்த போது, மேலே சென்ற மின்சார கம்பி மீது எதிர் பாராத விதமாக வைக்கோல் உரசியது. இதில் திடீரென தீ பற்றி வைக்கோல் எரிந்தது.

    இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்த னர். வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் என கூறப்படுகிறது.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்த தால் ஈச்சர் வாகனம் அதிக சேதம் இல்லாமல் தப்பித்தது. இதில் வாக னத்தை ஓட்டி வந்த செல்வ ராஜ் என்பவருக்கு லேசான தீக்காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். பின்னர் அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×