லாரி மோதி டிரைவர் காயம்

பின்னால் வந்த சரக்கு லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லாரி மோதி டிரைவர் காயம்
Published on

காரிமங்கலம்,

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வாழகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (44). லாரி டிரைவர். இவர் லாரியில் பெருந்துறையில் இருந்து இரும்பு பாரம் ஏற்றி கொண்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது இவரது லாரி பழுதாகியது. பின்னர் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு பழுது பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com