என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 234004"

    • தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது.
    • காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலைப்பேட்டை போடி பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ‘சிகரெட்‘ கேட்ட 2 பேர் கைவரிசை - மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சரக்கல்விளை, வலியாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் வேதக்கண். இவரது மனைவி சரசம் (வயது 67) இவர்கள் வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவு 7 மணி அளவில் சரசம் மட்டும் கடையில் இருந்த போது 2 மர்ம நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து சிகரெட் கேட்டார்கள். சரசம் சிகரெட் எடுத்து திரும்பும் போது அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அந்த வாலிபர்கள் பறித்தனர். அதனை எதிர்பாராத சரசம் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    வாலிபர்கள் பறித்த செயினில் இருந்த டாலர் கீழே விழுந்தது. இதனை அவசரத்தில் விட்டு சென்று விட்டார்கள். நகையின் மதிப்பு ரூ 1 லட்சம் 30 ஆயிரம் ஆகும். சரசத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள்.

    அவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். உடனே இதுகுறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் சரசம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிவிடி காமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.

    • 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    முட்டம் தூய குழந்தைஏசு தெருவைச் சேர்ந்தவர் ஆண்றோ சகாயராஜ்.

    இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2-வது மகன் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வந்தார். வீட்டில் பவுலின் மேரியும் அவரது தாயார் திரேசம்மாளும் வசித்து வந்தனர்.

    கடந்த 6-ந்தேதி பவுலின் மேரி, திரேசம்மாள் ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மங்கி குல்லா மற்றும் முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதன் அடிப்படையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் கொலைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வட மாநில வாலிபர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

    குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் வழக்கு கிடப்பில் கிடக்கிறது.கொலை நடந்து 14 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இந்த வழக்கில் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    ×