search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "books"

    • ஒரு நிமிடத்திற்கு ஒரு புத்தகத்தை வைத்து சுத்தம் செய்யலாம்.
    • கண்காட்சி அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது.

    அபுதாபி:

    அபுதாபி ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல் கலாசார அடையாளமாக விளங்கி வருகிறது. இந்த வளாகத்தில் அமீரக பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இங்குள்ள அல் ஜாமி நூலகத்தில் விலைமதிப்பில்லா லட்சக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மதிப்புமிக்க புத்தகங்களை நீண்ட நாட்கள் சேதமடையாமல் பாதுகாக்க நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் புத்தகங்களை பாதுகாக்க நவீன 'ஃபிரிட்ஜ்' (குளிர்சாதன பெட்டி) ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டி என்பது வெப்பநிலையை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவை பாதுகாக்க பயன்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதுபோன்ற அமைப்புள்ள நவீன 'ஃபிரிட்ஜ்' தற்போது ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் நூலகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது புக் ஸ்டெரிலைசர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

    இதன் உள்ளே புத்தகங்கள் வைக்கப்படும்போது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், தூசு மற்றும் அசுத்தங்கள் நீக்கப்படுகிறது. இதன் மூலம் பூஞ்சைகள், பூச்சிகள் அரிக்காமல் நீண்ட நாட்கள் புத்தகங்களை அப்படியே பராமரிக்க முடியும். இதன் உள்ளே காற்றாடி அமைப்பு அனைத்து பக்கங்களையும் புரட்டுகிறது. இதில் புற ஊதா கதிர்களை பாய்ச்சும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் புத்தகம் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.

    ஒரு நிமிடத்திற்கு ஒரு புத்தகத்தை வைத்து சுத்தம் செய்யலாம். விரைவாக வேண்டுமென்றால் 30 வினாடிகளில் சுத்தம் செய்யும் வசதியும் உள்ளது. இதன் செயல்பாடுகளை சிறிய கண்ணாடி மூலம் வெளியில் இருந்து காணமுடியும். இந்த சாதனம் தற்போது அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    • நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் வே. சின்னராசு, ராசேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பள்ளி நூலகத்தில் தமிழ் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தேன் சிட்டு சிறார் இதழ் மூலம் வாசிப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    மாணவர்கள் படித்து பயன் பெறும் வகையில் பள்ளி நூலகத்திற்கு திருப்பூர் தமிழினி அமைப்பின் சார்பில் தமிழ் அறிவோம் என்னும் இலக்கண நூல்களின் தொகுப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நூல்களை கவிஞர் நா. மகுடேஸ்வரன் வழங்கியுள்ளார். பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா நூல்களை வழங்க நூலகப் பொறுப்பாசிரியர் மரகதம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் வே. சின்னராசு ,ராசேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • புத்தக திருவிழாவில் மொத்தம் 1.25 லட்சம் போ் வருகை தந்தனா்.
    • தஞ்சாவூா் மாவட்டத்தை சாா்ந்த 60 எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.

    இதில், முன்னணி பதிப்பகங்கள், நூல் விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டன.

    இதில், நாள்தோறும் சுமார் 11 ஆயிரம் பேர் வருகை தந்தனா்.

    இந்நிலையில், இந்தப் புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

    நிறைவு நாளில் நடைபெற்ற சிந்தனை அரங்கத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:

    கடந்த 11 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் 50 ஆயிரம் பேரும், கல்லூரி மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 50 ஆயிரம் பேரும் என மொத்தம் 1.25 லட்சம் போ் வருகை தந்தனா்.

    இந்த விழாவில் மொத்தம் ரூ. 1.50 கோடி அளவில் நூல்கள் விற்பனையாகின. உணவு அரங்கில் ரூ. 15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    நிகழாண்டு புத்தகத் திருவிழாவில் தஞ்சாவூா் படைப்பாளா்களுக்காகத் தனி அரங்கம் அமைக்க ப்பட்டது.

    இந்த அரங்கில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த 60 எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றன.

    காலையில் நடைபெற்ற இலக்கிய அரங்கத்தில் உள்ளூரைச் சோ்ந்த 31 அறிஞா்கள் பங்கேற்றனா்.

    அஞ்சல் சேவை மூலம் ஏறத்தாழ 50 நூல்கள் அனுப்பப்பட்டன.

    சிறைவாசிகளுக்கான புத்தக தானம் திட்டத்தில் 3 ஆயிரம் நூல்களை பொதுமக்கள் அளித்தனா்.

    அரசுப் பள்ளிகள், இல்லங்களுக்கு ஆயிரத்து 500 நூல்கள் தானம் செய்யப்பட்டது.

    பல்வேறு போட்டிகளில் சுமாா் ஆயிரத்து 500 மாணவா்கள் பங்கேற்றனா்.

    தென்னகப் பண்பாட்டு மையம், கலை பண்பாட்டு துறை ஆதரவுடன் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சுமார் 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    இந்த விழாவுக்கு உணவு அரங்கமும், பண்பாட்டு அரங்கமும் மேலும் பெருமை சோ்த்தது.

    தஞ்சாவூா் மக்களின் மாபெரும் ஆதரவால் இந்த புத்தகத் திருவிழா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவா் சிவராமன் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் கோபால கிருஷ்ணன், தாமரை பன்னாட்டுப் பள்ளி தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.

    இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராம ரிக்கப்படும் பதிவேடுகள், புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்ப டுத்திட வாரம் ஒரு முறை நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி காலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்ப டையில் சிறு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இதில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 6-ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.
    • படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6ஆம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.

    வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெறும்.

    காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் புத்தக திருவிழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புத்தக படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தனியாக ஒரு அரங்கம் ஏற்படுத்த கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.

    இந்த அரங்கம் தஞ்சை மாநகராட்சி சார்பில் நிர்வகிக்கப்படும்.

    இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • 1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் தரமான கல்வி பெற பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சீருடை, காலணி, புத்த கப்பை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், வண்ணக்கிரையான்கள், சதுரங்கப்பலகை, கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி மற்றும் மடிக்கணினி போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 1,117 அரசுப்பள்ளிகள் மற்றும் 234 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,351 பள்ளிகள் உள்ளன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1லட்சத்து 49 ஆயிரத்து 681 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • பல்லடம் வட்டாரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 12ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன்படி பல்லடம் வட்டாரத்தில் உள்ள 85 பள்ளிகளில், 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், உள்ளிட்ட 5 புத்தகங்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்டவைகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 12-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
    • ஒரு ஸ்கூல் பேக் தலா ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு குழந்தைகளுக்கு புதிய நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் சீருடைகள் வாங்கும் பணியில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் குழந்தைகளுடன் கோவையில் உள்ள கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கூட்டம் அலை மோதி வருகிறது.

    கோவை கடைவீதிகளில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், தண்ணீர் பாட் டில்கள், டிபன் பாக்ஸ், லஞ்ச் பேக் ஆகியவை விற்பனைக்கு தயாராக உள்ளன. அடுத்தபடியாக வணிக வளாகங்களில் மாணவர்களுக்கான ஸ்கூல் பேக் விதம்விதமான ரகம், தினுசுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இங்கு சோட்டாபீம், ஸ்பைடர்மேன், ஆங்கி ரிபேர்ட்ஸ் உள்ளிட்ட கார்ட் டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பல்வேறு ரகம்-டிசைன்களில், குழந்தைகளை கவரும் வகையில் ஸ்கூல்பேக் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    ஒரு ஸ்கூல் பேக் தலா ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்கப்பட்டு வருகிறது. எனவே நடுத்தர குடும் பத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் விற்பனையாகும் ஸ்கூல் பேக்குகளை ரூ.300 முதல் ரூ.600 வரை மலிவான விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    இன்னொருபுறம் ஜவுளிக்கடைகளிலும் சீருடைகள் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கோவையின் அனைத்து பள்ளிகளுக்கு மான சீருடை துணிகள் பல்வேறு நிறம்-டிசைன்க ளில் விற்பனைக்கு வைக்கப் பட்டு உள்ளன.

    அங்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளுக்கான சீருடைகளை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. அடுத்தபடியாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தையல் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.

    இங்கு உள்ள டெய்லர்கள் மாணவர்களுக்கு சரியாக அளவெடுத்து சீருடைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை கடைவீதியில் உள்ள சாலையோரங்களில் ஸ்கூல் பேக் விற்கும் வியாபாரிகள் கூறியதாவது:-

    பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்க இருப்பதால் ஸ்கூல் பேக் விற்பனை களைகட்டி உள்ளது. இங்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சமாக ரூ.800 வரை புத்தகப்பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களில் ஒரு சிலர் ஆன்லைன் மூலம் ஸ்கூல் பேக்குகளை வாங்கு கின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் ஓரளவு பாதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் பெரும்பா லானோர் புத்தகப்பை வாங்குவதற்காக கடை வீதிக்கு வருவதால், இங்கு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
    • இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பள்ளி, கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் மாண வர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், கைடுகள் மற்றும் எழுதுப் பொருட்கள், புத்தகப் பை, டிபன் கேரியர்கள் போன்றவை விற்பனையும் களை கட்ட தொடங்கி யுள்ளன.

    சேலத்தில் உள்ள ஸ்டேஷ னரி கடைகளில் சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நோட்டு புத்தகங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நோட்டு புத்தகங்கள் மட்டு மின்றி உரைநடை (கைடு) புத்தகங்கள் விலையும் உயர்ந்துள்ளது. விலை குறைவாக உள்ள உரைநடை நூல்கள், நோட்டு புத்தகங்களில் உள்ள தாள்களின் தரம் சற்று குறைவாகவே இருப்பதால் பெற்றோர்கள் விலை அதிகம் உள்ள நோட்டு புத்தகங்கள், கைடுகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர்.
    • பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    கோவை:

    கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண பிரபாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணமோ, பொருளோ தர வேண்டாம். அதற்கு மாற்றாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என அச்சடித்து அழைப்பிதழ் கொடுத்தார்.

    கடந்த புதன்கிழமை மாலை ராம்நகரில் உள்ள மண்டபத்தில் ஜவகர் சுப்பிரமணியத்தின் மகள் சுவர்ண பிரபா- விக்ரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தில் புத்தகம் பெறுவதற்கு என தனியாக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர். மேலும் பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    இந்த புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள், கவிதை, இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த புத்தகங்களை ஜவகர் சுப்பிரமணியம் கலெக்டரின் அனுமதி பெற்று ஆனைகட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

    பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா புத்ககம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கி ழமை பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா புத்ககம் உள்ளிட்டஉபகர ணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட ப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் மாண வர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்ப்பட்டது. அப்போது உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், தேசிய மாணவர் படை அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.

    ராயபுரம் பள்ளியில் புத்தகங்கள் இறக்கிவைக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது

    திருப்பூர்:

    1 முதல் 10-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-- தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் தயாராக உள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்1 முதல் பிளஸ் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் பாட புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், திருப்பூரில், உயர்நிலை பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளிக்கும், பிற வகுப்புகளுக்கு தாராபுரம், உடுமலை, பல்லடம், திருப்பூர் இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 சதவீத புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன.

    தொடக்க வகுப்புகளுக்கான புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அருகில் உள்ள பள்ளியில் இருப்பு வைத்து பிற பள்ளி மாணவர்களுக்கு வினியோகிப்பர். ராயபுரம் பள்ளியில் புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது. பள்ளி திறந்ததும் வினியோகிக்கப்படும் என்றார்.

    ×