search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள்-அமைச்சர் தகவல்
    X

    மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெகடர் ஆஷா அஜீத் உள்பட பலர் உள்ளனர்.





     



     



     


    1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள்-அமைச்சர் தகவல்

    • 1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் தரமான கல்வி பெற பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சீருடை, காலணி, புத்த கப்பை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், வண்ணக்கிரையான்கள், சதுரங்கப்பலகை, கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி மற்றும் மடிக்கணினி போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 1,117 அரசுப்பள்ளிகள் மற்றும் 234 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,351 பள்ளிகள் உள்ளன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1லட்சத்து 49 ஆயிரத்து 681 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×