search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணமக்கள்"

    • திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
    • ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செஞ்சி:

    திருமணம் நடந்த இடத்திலேயே ரத்த தான முகாம் நடத்தி மணமக்களும் ரத்த தானம் வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.

    செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியா ஆகியோருக்கு நேற்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய ரத்த தான முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் ஸ்ரீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமணம் மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் ரத்த தானம் வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

    • அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.
    • மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    பேராவூரணி:

    பொதுவாகவே திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும், ஜானவாச காரிலும், மணமக்களை ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம். ஆனால், இங்கு மணமக்கள் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இந்த சுவாரஸ்யமான நிகழ்வை பற்றி இங்கு காண்போம்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்- பழனியம்மாள் தம்பதியின் மகன் வெங்கடேசுக்கும், நடுவிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாதகுமார்- விஜயராணி தம்பதியின் மகள் நாகஜோதிக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் நேற்று ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    மணமகனான வெங்கடேஷ் சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்தையொட்டி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் தான் விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என நினைத்தார்.

    அதற்காக, விவசாய குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளும் தனது திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என வெங்கடேஷ் அவரது நண்பர்களிடம் கூறினார்.

    அதன்படி, அவரது நண்பர்கள் வெங்கடேஷின் திருமணத்தில் மாடுகளை வைத்து வெகு விமர்சையாக ஊர்வலம் நடத்த வேண்டும் என திட்டமிட்டனர்.

    அதன்படி, திருமணம் முடிந்ததும் ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோவில் வெளியே தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரேக்ளா மாட்டு வண்டியில் மணமக்கள் இருவரும் ஏறினர். பின்னர், மணக்கோலத்தில் மணமகன் மாட்டுவண்டியை ஓட்ட அருகில் மணப்பெண் புண்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.

    தொடர்ந்து, மாட்டு வண்டியானது சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று பேராவூரணி அண்ணாசிலை அருகில் உள்ள திருமண மண்டபத்தை வந்தடைந்தது. வரும் வழி எல்லாம் அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    • வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர்.
    • மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ். இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் பட்டயப்படிப்பு முடித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    இவருக்கும் செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்த மாசான முத்து மகள் கலையரசிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற்றது. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மோகன்ராஜ் தனது திருமணத்திற்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மணமகள் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். ஊர்வலத்தில் செண்டை மேளத்துடன், உற்சாகமாக ஆட்டம், பாட்டத்துடன் காயாமொழியில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். மணமக்கள் மாட்டுவண்டியில் வந்து இறங்கியதும் மணமகன் வீட்டார் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    அப்போது மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார். மேலும் மக்கள் விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருவதாகவும் கூறிய மணமகன் காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்ததாக தெரிவித்தார்.

    • உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
    • பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    பாலக்காடு :

    திருமண பந்தம் என்பது...

    மனித வாழ்க்கையின் புதிய அத்தியாயம்...

    இதுவே....ஒருமனமாய்...உலாவந்த மனங்களை இருமனமாய் இணைய வைக்கிறது. இணை பிரியாமல் வாழையடி வாழையாய்...வாழ்க்கையை வரலாறாக மாற்றுகிறது...

    ஆம்...திருமணத்தன்று...அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது வழக்கம். அம்மி மிதிப்பது என்பது ஒரு சடங்கு. மணமகன் என்பவர், மணமகளின் வலக்கால் கட்டை விரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைத்து, இந்த கல்லைப்போல் உறுதியாக மனம் கலங்காமல் இருக்க வேண்டும் என்பதே இதற்கான ஐதீகம்.

    சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாக திகழ்கின்றனர் என்பது ஐதீகம்...

    இதில்....வசிஷ்டர் என்கிற நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்கிற கருத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி.

    இந்த சடங்குகள் எல்லாம் ஐதீகம் என்கிற முறையில் நடைமுறையில் இருக்கின்றது...

    ஆனால் அம்மி...அருந்ததியை தாண்டி...இருமனங்களாய்... ஓட்டிக்கொண்ட தம்பதிகளுக்கு வினோத முறையில் ஒரு சடங்கு நடந்தது.

    ஆம்...புதுமண தம்பதிகள் இருவரது தலைகளையும் முட்ட வைக்கும் வினோத சடங்கு ஒன்று நடந்துள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பல்லசேனாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. பின்னர் உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு புகுந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக, மணமக்களை வாசல்படி அருகே நிற்குமாறு கூறினர். அப்போது உறவினர் ஒருவர் சச்சின், ஜலஷா இருவரது தலையை பிடித்து முட்ட வைத்தார். இதில் வலி தாங்க முடியாமல் மணமகள் அழுதார். அதன் பின்னர் மணமக்களை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.

    இவ்வாறு செய்வது புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என நம்புவதாகவும், அதனால் தான் மணமகளை அழ வைத்து வீட்டுக்குள் அனுப்புகிறோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கிராமத்தில் திருமணமான பின்னர் இதுபோன்ற வினோத சடங்கு இருப்பதாக வயதானவர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது எனக்கே தெரியாது என மணமகன் சச்சின் தெரிவித்தார்.

    முதன் முதலாக மணமகன் வீட்டுக்கு வரும் மணமகள் அழுதபடி வருவதால் குடும்பம் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    கேரளாவில் 98 சதவீதம் பேர் படித்தவர்கள். அப்படி இருக்க, 21-ம் நூற்றாண்டிலும் பழைய சம்பிரதாயம் தொடர்ந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார், மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர்.
    • பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    கோவை:

    கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண பிரபாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணமோ, பொருளோ தர வேண்டாம். அதற்கு மாற்றாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என அச்சடித்து அழைப்பிதழ் கொடுத்தார்.

    கடந்த புதன்கிழமை மாலை ராம்நகரில் உள்ள மண்டபத்தில் ஜவகர் சுப்பிரமணியத்தின் மகள் சுவர்ண பிரபா- விக்ரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தில் புத்தகம் பெறுவதற்கு என தனியாக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர். மேலும் பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.

    இந்த புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள், கவிதை, இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த புத்தகங்களை ஜவகர் சுப்பிரமணியம் கலெக்டரின் அனுமதி பெற்று ஆனைகட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

    • அகமுடையார் சங்க துணைத்தலைவர் இல்ல திருமண விழா நடந்தது.
    • நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார் நடத்தி வைத்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த தமிழக தலைமை அகமுடையார் சங்க மாநில துணைத் தலைவர் நாராயண மூர்த்தி-மகேஷ்வரி ஆகியோர் மகன் தாமு என்ற தாமோதர முத்துவுக்கும், மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த ராதாகிருஷ்ணன்-மல்லிகா தேவி தம்பதியின் மகள் அஸ்விந்ரா தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டி ருந்தது. இவர்களது திருமணம் நேற்று கமுதியில் உள்ள நடராஜன் வேலம்மாள் மகாலில் நடந்தது.

    திருமணத்தை தமிழக தலைமை அகமுடையார் சங்க நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார்-செந்தாமரை ஆகியோர் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர். விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம், மதுரை சரவணா ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர்.சரவணன், கரந்தை அ.தி.மு.க. செயலாளர் அறிவுடை நம்பி, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவர், தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் கணேச தேவர்.

    கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல்வகாப் சஹாராணி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், திருக்கோவிலூர் முரளி, பா.ஜ.க. பொருளாளர் பிரிவு மாநில செயலாளர் எவரெஸ்ட் கார்த்திக், தர்மர் எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சுந்தர்ராஜன், முதுகுளத்தூர் முருகவேல், மலேசியா பாண்டியன், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட பேரவை செயலாளர் மருதுபாண்டியன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி நாகராஜன், முன்னாள் யூனியன் சேர்மன் கிருஷ்ணன்.

    கமுதி ஒன்றிய சேர்மன் தமிழ்செல்வி போஸ், துணை சேர்மன் அய்யனார், அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை தலைவர் ஜெயமணி, வீரகுல அமர இயக்க தலைவர் முருகன், சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சேங்கைமாறன், தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இன்பாரகு, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் சிவராம சந்திரன், அகமுடை யார் அரண் ஒருங்கிணைப் பாளர் பாலமுருகன், அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுரேந்தி ரன், மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ராமசாமி சேவை, கமுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பெரியசாமி, முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்

    • இயற்கையான முறையில் நடத்தப்பட்ட இந்த வில் அம்பு சாஸ்திர திருமண விழாவின்போது மணமகன் மற்றும் மணமகள் தங்கள் முன்னோர்களை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
    • மற்றொரு திருமணத்தில் அர்ஜ் நேர்குட்டன்-ஆஸ்வினி சின் ஆகிய தம்பதிகளும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    ஊட்டி:

    மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர், பணியர், கோத்தர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பூர்வகுடி இன மக்களான இவர்கள் திருமண விழாக்களும், கோவில் நிகழ்ச்சிகளும் இன்றும் பழமை மாறாமல் தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய வழிகாட்டுதலின் முறைப்படி நடத்தி வருகின்றனர்.

    இவர்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் பல நூற்றாண்டை கடந்து இன்றும் பாரம்பரியமாக திருமண விழாக்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள கார்டன் மந்து பகுதியில் தோடர் இனத்தை சேர்ந்த நார் நஷ்குட்டன்-கிர்ந்தனா சின் ஆகியோர் தங்கள் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    இயற்கையான முறையில் நடத்தப்பட்ட இந்த வில் அம்பு சாஸ்திர திருமண விழாவின்போது மணமகன் மற்றும் மணமகள் தங்கள் முன்னோர்களை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து மணமகன் அடர்ந்த வனப்பகுதிக்குள் தங்களது முன்னோர்களுடன் நடந்து சென்று, வனத்திற்குள் இருந்த பூர்ஸ் என்ற சங்கரா பூ செடியில் உள்ள தண்டுகளை எடுத்து அதில் வில் அம்பை உருவாக்கி எடுத்து வந்தார்.

    பின்னர் அதனை நாவல் மரத்தின் அடியில் தனது வருகைக்காக காத்திருந்த மனைவியிடம் கொடுத்தார்.

    அப்போது மணமகள் அதை ஏற்றுக்கொண்டு நாவல் மரத்தின் அடியில் வைத்து நெய் தீப விளக்கேற்றி வில் அம்பினை வணங்கி அவரை தனது கணவனாக ஏற்று கொள்கிறாள்.

    இதேபோன்று மற்றொரு திருமணத்தில் அர்ஜ் நேர்குட்டன்-ஆஸ்வினி சின் ஆகிய தம்பதிகளும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கார்டன் மந்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் தோடர் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனம் ஆடி திருமண நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பூங்காவிற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தோடர் பழங்குடியினரின் வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சியை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர்.

    • நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் என்னும் பாடலை பாடினார்.
    • கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

    விழாவிற்கு சங்கதலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

    மாவட்ட அவை இணைப்பொருளாளர் சாய்செந்தில், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் நீலகண்டன், மாவட்டத் தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    3 ஜோடிகளுக்கு திருமணத்தை மாவட்ட ஆளுனர் டாக்டர் சேது சுப்பிரமணியன், தாசில்தார் சுகுமார், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    லயன்ஸ் சங்கத்தினர் அனைவரும் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி மண மக்களை வாழ்த்தி நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் என்னும் திரைப்பட பாடல் பாடியது அனைவரையும் கவர்ந்தது.

    கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் மற்றும் பலர் வரவேற்றனர்.

    • திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்- லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பொங்கலூர் அருகே உள்ள சாந்தி திருமண மகாலில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். பின்னர் மணமக்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடாஎஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், விஜயகுமார் எம்.எல்.ஏ., பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் அ.நடராஜன், பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் நீதிராஜன், வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பழனிவேல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தனியரசு உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் , தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஜெயபிரபா- அழகர் ஜூவல்லர்ஸ் இல்ல திருமணம் மதுரையில் நாளை நடக்கிறது
    • திருமண விழா ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் சேர்மன் கே.வி.கே.ஆர். பிரபாகரனின் சகோதரர், கே.வி.கே.ஆர். காவேரி கிருஷ்ணன் என்ற தனசேகரன் மகள் டாக்டர். நந்தினிக்கும், தூத்துகுடி அழகர் ஜூவல்லர்ஸ் சேர்மன் வி.எஸ்.ஏ. ஜெயராமனின் சகோதரர் வி.எஸ்.ஜி. பத்மநாபன் மகன் என்ஜினீயர் ஸ்ரீராம் கோவிந்துக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட உள்ளது.

    இந்த திருமணம் நாளை (5-ந் தேதி) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மதுரை அனுப்பானடி ரிங்ரோடு வேலம்மாள் மருத்துவமனை அருகில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமண விழா ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் சார்பில் கே.வி.கே.ஆர். பிரபாகரன்- ஜெயந்தி, கே.வி.கே.ஆர். காவேரி கிருஷ்ணன் என்ற தனசேகரன்- பவித்ரா, டாக்டர் வி.ஆர். தனசேகரன்- கமலவேணி, வி. பாலாஜி- சங்கரதேவி, ஆர். பாலாஜி- நிவேதிதா, வி.தாமோதரன்- பிரீத்தா, சுஜிதா- பிரபாகரன், டாக்டர் ஸ்ரீநிதி காவேரி கிருஷ்ணன், கே.வி.கே.ஆர்.பி. நரேன் ராஜேந்திர பிரபு, மணமகன் வீட்டார் சார்பில் வி.எஸ்.ஏ. ஜெயராமன்- பத்மாவதி, வி.எஸ்.ஜி. பத்மநாபன்- செண்பகவல்லி, ஜெ. விஷ்ணுரமணா-ஸ்ரீநிதி, நாகராஜ், பாஸ்கர், ஹரீஷ்குமார், ராஜ்குமார் ஆகிேயார் செய்து வருகின்றனர்.

    ×