என் மலர்
நீங்கள் தேடியது "ராட்சத பலூன்"
- உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன.
- திருமணத்துக்கு முந்தைய சடங்கில் மணமக்கள் ராட்சத பலூனை கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கருதப்படுகிறது. எனவே இதனை ஒவ்வொருவரும் திருவிழா போல கொண்டாடுகின்றனர். இதனால் உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன. அதிலும் இளைய தலைமுறையினர் தற்போது விதவிதமாக திருமண கொண்டாட்டத்தை நடத்த விரும்புகின்றனர்.
அந்தவகையில், திருமணத்துக்கு முந்தைய சடங்கில் மணமக்கள் ராட்சத பலூனை கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்றனர். பின்னர் விளையாட்டு துப்பாக்கியால் நண்பர்கள் அதனை சுட்டனர். அப்போது அந்த பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. இதில் மணமக்கள் காயம் அடைந்தனர். இதனால் மகிழ்ச்சி நிறைந்த திருமண கொண்டாட்டம் சோகத்துடன் முடிந்தது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பலூனின் ஒரு பக்க கயிற்றை பிடித்தபடி தரையில் நின்றுகொண்டிருந்தார்.
- பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதும் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தின் 35வது ஆண்டு நிறுவன விழா கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டது.
நிறைவு விழாவான நேற்று ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வு காலை 7 மணியளவில் நடக்க இருந்தது. பலூனை இயக்கும் நிறுவனத்தின் ஊழியர் வாசுதேவ் காத்ரி(40 வயது) பலூனின் ஒரு பக்க கயிற்றை பிடித்தபடி தரையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ராச்சத பலூன் வான் நோக்கி பறக்க தொடங்கியது. இதில் கயிற்றுடன் அவர் மேலே சுமார் 100 அடி உயரத்திற்கு காற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். பின் கயிறு அறுந்து அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தின்போது அவர் மேலே இழுத்துச்செல்லப்பட்டு கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதும் வாசுதேவ் காத்ரியின் எதிர்பாராத மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது.
- காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு பறக்கவிடப்படும். இதனை காணவும், பலூனில் ஏறி பயணிக்கவும் அங்கு ஏராளமானோர் கூடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது. இந்த முறை பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை ராட்சத பலூன்களில் வெப்பக்காற்றை நிரப்பி பிரேத்யக பைலட்டுகள் மூலம் வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த பலூன்கள் சில கிலோமீட்டர் தூரம் பறந்து சென்றன. இதில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து வெப்ப பலூன்கள் நிலைநிறுத்தப்படுகிறது. அந்த பலூன்களில் பொதுமக்கள் ஏறி பறக்கலாம். சுமார் 500 அடி உயரத்துக்கு இந்த பலூன்கள் பறக்கவிடப்படும். இந்த பலூனில் வானில் பறந்தபடி பொள்ளாச்சி நகரையும், அருகே பச்சை பசேலென காட்சி அளிக்கும் இயற்கை அழகையும் ரசிக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் யானை, வாத்து, தவளை உருவங்களை கொண்ட பலூன்கள் உள்ளன. இந்த பலூன்களில் பறக்க ஒரு நபருக்கு ரூ.1,500 வசூலிக்கப்படுகிறது.

பலூன் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் ஏராளமானோர் இன்று காலை முதலே பொள்ளாச்சியில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் வானில் பறக்கும் பலூன்களையும், ஒளி வெள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலூன்களையும் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த பலூன் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடர்ந்து நடக்கிறது.
இதுதவிர பொதுமக்களை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்த 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடிப்போர் பலூனில் இலவசமாக பறக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சுற்றுலா ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த ஹெலிகாப்டரில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம். ஹெலிகாப்டரில் பறந்தபடி பொள்ளாச்சி நகரை பொதுமக்கள் ரசிக்கலாம்.
- தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜ் சாலை கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில், 'நான் வாக்களிப்பேன் , நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற வார்த்தைகள் பொறி க்கப்பட்ட ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கிருத்திகா விஜயன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தென் கொரியா, வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
- குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.
தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு குப்பைகள் நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியது.

இந்த நிலையில் தென் கொரியாவுக்குள் மீண்டும் குப்பை பலூன் ஏவப்பட்டது. இந்த பலூன் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் விழுந்தது. அந்த குப்பையில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்று தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகொரிய பலூன் தரையிறங்கும் போது அதிபர் யூன் சுக் இயோல் அந்த வளாகத்தில் இருந்தாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.
வட கொரியா ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலூன்களை மிகவும் துல்லியமாக உத்தேசித்துள்ள இடங்களில் தரையிறக்க தொடங்கியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.






