search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood donate"

    • திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
    • ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செஞ்சி:

    திருமணம் நடந்த இடத்திலேயே ரத்த தான முகாம் நடத்தி மணமக்களும் ரத்த தானம் வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.

    செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியா ஆகியோருக்கு நேற்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய ரத்த தான முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் ஸ்ரீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமணம் மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் ரத்த தானம் வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

    • கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் இணைந்து கண் தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
    • கோவில்பட்டி, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து தொடங்கிய பேரணி கோவில்பட்டி செயின்ட் எஸ்.ஐ. ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

    கோவில்பட்டி:

    இருவார தேசியக் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை நாடெங்கும் நடைபெறுகிறது. இதன் ஒரு அங்கமாக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை, கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் இணை ந்து கண் தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    கோவில்பட்டி, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து தொடங்கிய பேரணியை கோவில்பட்டி, நேஷனல் எஞ்சினீயரிங் கல்லூரி டீன் பி.பரமசிவன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவர் மீனாட்சி, கோவில்பட்டி, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஹரிணி கிருஷ்ணா, விநாயகா ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பேரணி கோவில்பட்டி செயின்ட் எஸ்.ஐ. ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

    இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் கண் தானம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முக வேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படி, கோவில்பட்டி கண்தான இயக்க ஜெயராஜ், கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை மேலாளர் ஜோசப் அந்தோணிசாமி, நெல்லை அரவிந்த் கண் வங்கி ஒருங்கிணைப்பாளர் சாரதா மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது.

    சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் அவர்களும் இரத்த தானம் செய்ய விரும்புவார்கள். அப்படி நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா? இந்த கேள்வி பலரிடமும் இருப்பதால் இதை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் போன்ற தன்னலமற்ற செயலை தாராளமாக செய்யலாம். கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது. அவை:

    1) ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள்,

    2) சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்,

    3) இன்சுலின் ஊசி் செலுத்தி கொள்பவர்கள்,

    4) உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள்,

    5) வயது 18-க்கும் குறைவானவர்கள்,

    6) ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள்,

    7) ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கும் குறைவாக உள்ளவர்கள்,

    8) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,

    9) காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு கடந்த 15 நாட்களுக்குள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள்,

    10) கடந்த 3 மாதங்களுக்குள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,

    11) ஹெபடைட்டிஸ் பி அல்லது சி, மற்றும் எச்.ஐ.வி நோய் தொற்றுள்ளவர்கள்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது. மேலும் நீரிழிவு நோயாளிகள் 56 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானமும், 7 நாட்களுக்கு ஒரு முறையும் பிளேட்ளட் தானமும் செய்யலாம். அதேபோல் இதய நோய் அல்லது பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. இரத்த தானம் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்த பிறகு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
    • ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல்.

    தானங்களில் சிறந்த தானமாக 'ரத்த தான'த்தை மருத்துவத்துறை முன்னிறுத்துகிறது. ஏனெனில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளின் போதும், ஒரு மருத்துவ நோயாளிக்கு தேவைப்படும் முக்கியமான, முதன்மையான விஷயமாக ரத்தம் இருக்கிறது. ரத்தத்தில் ஏ, பி, ஓ, என்று சில பிரிவுகளும் இருப்பதால், எல்லாராலும் எல்லாருக்கும் ரத்தத்தை அளித்து விட முடியாது.

    ஒருவருக்கு தேவைப்படும் சமயத்தில், அவருக்குரிய ரத்த வகையாளரைத் தேடிக் கொண்டுவருவது சிரமம். எனவேதான், ரத்த தானம் என்ற பெயரில், விருப்பப்பட்டு வழங்கும் நபர்களிடம் இருந்து ரத்தம் தானமாகப் பெறப்பட்டு மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிகளில் இருப்பு வைக்கப்படுகிறது. இப்படி ரத்ததானம் அளிப்பவர்களின் தினமாக உலகம் முழுவதும் ஜூன் 14-ந்தேதியை 'உலக ரத்த நன்கொடையாளர்கள் தினம்' என்று அனுசரித்து வருகிறோம்.

    ரத்தத்தில் ஏ, பி, ஓ ரத்த வகையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யான கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினத்தில்தான், நாம் இந்த நாளை கடைப்பிடித்து வருகிறோம். ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

    ரத்தம் பெறுபவர்கள் மட்டுமல்ல, ரத்தம் அளிப்பவர்களின் உடலும் பல நன்மைகளைப் பெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல் என்பதால், இந்த நாளில் அனைவரும் ரத்த தானம் செய்ய உறுதியேற்போம்.

    ரத்தம் கிடைக்காமல் பல சமயங்களில் ஏற்படும் மரணங்களை தவிர்க்க அ.தி.மு.க. சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் இலவசமாக ரத்த தானம் பெறலாம். #ADMK
    சென்னை:

    எம்.ஜி.ஆர், அ.தி.மு.க.வை தொடங்கி 46 ஆண்டுகள் முடிந்து 47 வது ஆண்டு தொடங்கியுள்ளதை கொண்டாடும் வகையில் இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலான ரத்தத்தின் ரத்தமே என்கிற பெயரிலான ஆப்பை தொடங்கி வைத்தனர்.

    விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் உள்ளிட்ட பலருக்கு தக்க சமயத்திலான ரத்ததானம் என்பது உயிர்தானத்திற்கு ஈடானது.

    ரத்தம் கிடைக்காமல் சமயங்களில் மரணங்களும் நேர்ந்துவிடுகின்றன. இந்த அவலங்களை தவிர்க்க அ.தி.மு.க. சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆப் மூலம் இலவசமாக ரத்த தானம் பெறலாம்.

    முதலில் இந்த ஆப்பில் குருதிக்கொடையளிக்க விரும்புபவர்கள் உலகில் எங்கிருந்தாலும் தங்களது பெயர், ரத்தப்பிரிவு, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை பதிந்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அவசரமாக ரத்ததானம் பெற விரும்புவோர், நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், முதலில் தங்களது பெயர், தேவைப்படும் ரத்தப்பிரிவு, முதலியவற்றை இதே ஆப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


    பதிவு செய்த சில வினாடிகளில், ரத்தம் தேவைப்படுவோரின் முகவரிக்கு சுமார் 10 கிமீ அருகாமையில் இருக்கும் ரத்தகொடையாளிகளுக்கு அந்த விபரம் சென்றடையும். இதனையடுத்து கொடையாளிகளின் தொலைபேசி எண், அவரது இருப்பிடம் உள்ளிட்ட விபரமும் ரத்தம் தேவைபடுபவருக்கு சென்றடையும்.

    ரத்தம் தேவைப்படுபவர்கள், தங்கள் இருப்பிடம் அல்லது நோயாளி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ரத்த கொடையாளிகளுடன் உடனடியாக தொலைபேசியில் பேசி, சூழலுக்கு ஏற்றாற்போல் ஒருவரிடமோ அல்லது பலரிடமோ ரத்த கொடையை பெறமுடியும்.

    அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளரான அஸ்பயர். கே சுவாமிநாதன் வடிவமைத்துள்ள இந்த ஆப், ரத்த தேவையை எதிர்நோக்கி உலகில் எந்த முலையில் யார் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அவருக்கு உயிர் கொடுத்து வாழ்வளிக்கும்.

    உலகளாவிய ரத்த கொடையாளிகள், ரத்த தேவையாளர்களுக்கு இடையே ஒரு பாலமாகத் திகழும் இந்த ஆப் முற்றிலும் இலவசமானது. இந்த ஆப்பை Google play store-ல் RR-Blood AIADMK என்று தேடி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.  #ADMK
    தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த ரத்ததான முகாமில் ஆயுதப்படை போலீசார், பயிற்சி போலீசார் என மொத்தம் 152 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ், அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி, ரத்தவங்கி டாக்டர் அறிவழகன், போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் ஆயுதப்படை போலீசார், பயிற்சி போலீசார் என மொத்தம் 152 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து இந்த முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.

    ஒவ்வொரு போலீசாரிடம் இருந்தும் 1 யூனிட் வீதம் மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் எடுக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் ரத்தம் அனைத்தும் பாதுகாப்பாக அரசு ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிறது.

    இதுபற்றி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் ரத்த பரிமாற்ற குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாளை சுமார் 20,000 போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து தாமாகவே முன்வந்து ரத்த தானம் கொடுக்க உள்ளனர்.

    நமது மாநிலத்தில் ஆண்டிற்கு 8,00,000 யூனிட்ஸ் ரத்தம் தேவையுள்ளது, இதில் சுமார் 50 சதவீதம் ரத்தம் ( 4 லட்சம் யூனிட்ஸ்) 89 அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது மீதமுள்ள 50 சதவீதம் ரத்தம் (4 லட்சம் யூனிட்ஸ்) தனியார் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை தேவைப்படுகிற ரத்தம், 89 அரசு ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் நம் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

    மே மாதத்தில் பொதுவாக கல்லூரி விடுமுறையாக இருப்பதாலும், கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைவாக இருப்பதாலும் ஜூன் மாதத்தில் ரத்தம் அதிகமாக தேவைப்படும்.

    எனவே, ஜூன் மாதத்தில் காவல் துறையால் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    மேலும், சராசரியாக ஒருமாத பயன்பாட்டிற்கு தேவைப்படுகிற 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை ரத்தத்திற்கு, 29.06.2018 அன்று காவல்துறையால் திட்டமிடப்பட்ட ரத்த தான முகாமில் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை. இந்த ரத்தம் ஏழை எளியவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்பட உள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×