search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness Rally"

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறை சார்ந்த அலுவலர்களால் களநீர் பரிசோதனை செய்முறை விளக்கம் செய்து காட்டப்ப்பட்டது
    • இதனை கலெக்டர் லட்சுமிபதி பார்வையிட்டு அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரத்தில் வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு வாகன பிரசாரமும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் புனித மரியன்னை பள்ளியை சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறை சார்ந்த அலுவலர்களால் களநீர் பரிசோதனை செய்முறை விளக்கம் செய்து காட்டப்ப்பட்டது. இதனை கலெக்டர் லட்சுமிபதி பார்வையிட்டு அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தினையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்க ளையும் வெளியிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜா, உதவி நிர்வாக பொறியாளர் ஜான் செல்வம், இளநிலை குடிநீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியஜோசப் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • தொடர்ந்து மாவட்ட மன நல மருத்துவர் ஜோனா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று மாவட்ட மன நல திட்டம் சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை இணை இயக்குனர் (பொறுப்பு) நலப்பணிகள் அகத்தியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிலைய மருத்துவ அலுவலர் சுதா, மாவட்ட மன நல மருத்துவர் ஜோனா, ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன நல உளவியலாளர் சேது வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாணவிகள் அனைவரும் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்த நடைபெற்ற பேரணியில் மாணவிகள் கையில் பதாதைகள் ஏந்தியும், விழிப்புணர்பு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். பேரணியானது புது ரோடு வழியாக ரெயில் நிலையம் சென்று கோவில் பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

    தொடர்ந்து மாவட்ட மன நல மருத்துவர் ஜோனா தலைமையில் கருத்தரங்கம் நடை பெற்றது. மாணவிகளுக்கு தற்கொலை தடுப்பு சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்,

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி பேராசிரியர்கள் கற்குவேல் ராஜா, ஜெயா, ஸ்ரீ ராம ஜெயா, மருத்துவமனை கணினி தரவு உதவியாளர் செல்வ குமாரி, ஆக்டிவ் மைண்ட்ஸ் மேற்பர்வையாளர்கள் மாடசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மன நல திட்ட சமூக பணியாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

    • பேரணியை பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
    • சைக்கிள் பேரணி நெல்லை அரசு மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவிலிருந்து ஆரம்பித்து அண்ணா விளையாட்டு திடல், தனியார் மருத்துவ மனை வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்தடைந்தது.

    நெல்லை:

    கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை தேசிய கண்தான இரு வார விழா கொண்டாடப்படு கிறது.

    அதன்படி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் கண்தான விழிப்பு ணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பால சுப்ர மணியம், துணை முதல்வர் சுரேஷ் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் ராமலட்சுமி வரவேற்று பேசினார்.

    பேரணியில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ- மாணவிகள் சென்றனர். பேரணியில் மருத்துவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துணை மருத்துவக் கண்கா ணிப்பாளர் ஆறுமுகம், கண் சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் ஆனந்தி, டாக்டர் ரீட்டா, உதவி மருத்துவர்கள் உமா, கவிதா மற்றும் செவிலியர்கள், முதுநிலை கண் மருத்துவப் பயிற்சி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் கண் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் ராமலெட்சுமி பேசியபோது, இந்த ஆண்டு 38-வது தேசிய கண் தான விழிப்புணர்வு விழாவாகும். கண் தானத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்கு உறுப்பு தானத்திற்கு தமிழக அரசு அளித்து வரும் ஊக்கமும் முக்கிய காரணமாகும். மேலும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு எல்லோ ருக்கும் போய் சேரும் வகையில் இந்த கண்தான இரு வார விழாவை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், துயர்நிலை ஆலோ சகர் மற்றும் உடல் உறுப்புதான மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கி ணைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சைக்கிள் பேரணி நெல்லை அரசு மருத்துவ மனையின் கண் சிகிச்சை பிரிவிலிருந்து ஆரம்பித்து அண்ணா விளையாட்டு திடல், தனியார் மருத்துவ மனை வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்த டைந்தது. முடிவில் செவிலி யர் பயிற்றுநர் செல்வன் நன்றி கூறினார்.

    • கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் இணைந்து கண் தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
    • கோவில்பட்டி, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து தொடங்கிய பேரணி கோவில்பட்டி செயின்ட் எஸ்.ஐ. ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

    கோவில்பட்டி:

    இருவார தேசியக் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை நாடெங்கும் நடைபெறுகிறது. இதன் ஒரு அங்கமாக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை, கோவில்பட்டி கண் தான இயக்கம் மற்றும் கே.ஆர்.கல்வி நிறுவனங்கள் இணை ந்து கண் தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    கோவில்பட்டி, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து தொடங்கிய பேரணியை கோவில்பட்டி, நேஷனல் எஞ்சினீயரிங் கல்லூரி டீன் பி.பரமசிவன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவர் மீனாட்சி, கோவில்பட்டி, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஹரிணி கிருஷ்ணா, விநாயகா ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பேரணி கோவில்பட்டி செயின்ட் எஸ்.ஐ. ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவுற்றது.

    இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் கண் தானம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முக வேல், கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படி, கோவில்பட்டி கண்தான இயக்க ஜெயராஜ், கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை மேலாளர் ஜோசப் அந்தோணிசாமி, நெல்லை அரவிந்த் கண் வங்கி ஒருங்கிணைப்பாளர் சாரதா மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • பேரணியின் போது மாணவ- மாணவிகள் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் சுற்று சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியவதி பிளாரன்ஸ் தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படை அதிகாரி சகாய வியாகம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் சுபேதார் தசரதன், உதவி தலைமை ஆசிரியர் சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், வேளாண்மை உதவி இயக்குநர் ஜாஸ்மின்லதா, வேளாண்மை உதவி தொழில் நுட்ப மேலாளர் சரிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    • பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    நெல்லை:

    பாளையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

    பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக் நாட்டின் அழிவுக்கும், மக்களின் மரணத்துக்கும் காரணமாகும். பிளாஸ்டிக்கை வாங்காதீர்கள், துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மற்றும் துணிப்பைகளை மாணவர்கள் கொடுத்தனர்.

    இந்த பேரணி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மாவட்ட நூலகம், தலைமை தபால் அலுவலகம், தெற்கு பஜார், ஜான்ஸ் கல்லூரி வழியாக சென்று மீண்டும் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது. ஏற்பாடுகளை இந்திய ராணுவ சுபேதார்கள் ஜஹாங்கீர், சிவன், ஹவில்தார்கள் மணி, ஹரி, செந்தில்குமார், என்.சி.சி. அலுவலர் அருள்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
    • வள்ளியூர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் பெட் கல்வியியல் கல்லூரி சார்பாக உலக சுற்றுச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வள்ளியூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

    பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் காஜா முகைதீன், பொருளாளர் ஜமாலுதீன் ஆகியோா முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பெபிலா ஜோஸ்பின் பேரணி குறித்து விளக்க உரையாற்றினார்.

    வள்ளியூர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியப் பயிற்சி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதத்தில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    • பேரணி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன அலுவலகத்திலிருந்து தொடங்கியது.
    • பிளாஸ்டிக்கை எரிக்காதே கேன்சரை பெருக்காதே என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தியவாறு பேரணி சென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சமூக நல செவிலியர் துறை மற்றும் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு, 4-ம் ஆண்டு மாணவிகளால் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது.

    இப்பேரணி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன அலுவலகத்திலிருந்து தொடங்கியது.

    இப்பேரணியை திருச்செந்தூர் நகராட்சி தலைவி சிவஆனந்தி தலைமையில், ஆணையாளர் வேலவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்பேரணி பகத்சிங் பஸ்நிலையம் வழியாக காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி, கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேலரதவீதி வழியாக சென்று மீண்டும் ஆதித்தனார் கல்வி நிறுவன வளாகத்தில் நிறைவு பெற்றது.

    இப்பேரணியில், தவிர்ப்போம் தவிர்ப்போம் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், நம் பூமியை காப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மனிதவளம் காப்போம், உருவாக்குவோம் உருவாக்குவோம்,

    பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்குவோம், பிளாஸ்டிக் என்பது விஷமாகும் அதை ஒழிப்பது நம் கடமையாகும், பிளாஸ்டிக்கை எரிக்காதே கேன்சரை பெருக்காதே, பிளாஸ்டிக் புகை உயிருக்கு பகை, ஒருமுறை பிளாஸ்டிக் பயன்பாடு தருமே நமக்கு பெரும்பாடு, பிளாஸ்டிக்கை விடு துணிப்பை எடு, வேண்டாம் வேண்டாம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் வேண்டாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர்.

    பேரணியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், செயலாளர் நாராயணராஜன், கல்லூரி முதல்வர் என்.கலைக்குரு செல்வி, கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இப்பேரணியை சமூக நல செவிலியர் துறை பிரிவு இணை பேராசிரியை சங்கீதா ஒருங்கிணைத்து நடத்தினார். இதை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் முதல்வர் கலைக்குருசெல்வி மரக்கன்றுகள் நட்டினார்.

    • தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டும்.
    • நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணியாக சென்றனர்.

    திருப்பூர் :

    தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டும். அதே போல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது .அந்த வகையில் திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்.நிலைப்பள்ளியில் துவங்கிய.பேரணியை கலெக்டர் வினீத் கொடி அசைத்து.துவக்கி வைத்தார்.

    பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணியாக சென்றனர்.

    • தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை டாக்டர் எம்.செபஸ்டின் ஆனந்த் கொடி அசைத்து பேரணியினை தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமையில், கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை டாக்டர் எம்.செபஸ்டின் ஆனந்த் கொடி அசைத்து பேரணியினை தொடங்கி வைத்தார்.

    போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி முழக்கம் எழுப்பியபடி பேரணி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை நடைபெற்றது. இதில் என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஹரிகோவிந்தராஜ், ராஜேந்திரன் ரவிக்குமார், மதியரசி, கிரிஜா, சவரிராயம்மாள், கோகிலவாணி மற்றும் வக்கீல் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஹரி கிருஷ்ணன், பேராசிரியை ராஜ ராஜேஸ்வரி, இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பிருந்தா மற்றும் கல்லூரி ஐ.கியூ.ஓ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர். வள்ளியூர் காவல் துறை சார்பில் பாதுபாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    • மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நெல்லை மாநகர பகுதியில் 10 புதிய நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2017-ல் இருந்து இந்த ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், ஊன தடுப்பு முகாம், தோல் நோய் முகாம், பயிற்சிகள், தொழிற்சாலைகளின் பரிசோதனை, களப்பணி நோய் கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் ஆந்திராவில் உள்ளனர். தமிழ்நாட்டில் சராசரியாக 5 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் 9 வட்டாரங்கள் மற்றும் நெல்லை நகர்புற பகுதிகளில் தொழுநோய் ஒழிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021-2022-ம் ஆண்டில் 38 பேருக்கும், நடப்பு ஆண்டில் கடந்த மாதம் வரை 51 பேரும் புதிய நோயாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டு நவீன கூட்டுமருந்து சிகிச்சை மூலம் குணமடைந்து வருகின்றனர்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பு முகாம் மூலம் நெல்லை மாநகர பகுதியில் 10 புதிய நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

    நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாத்தில் உள்ள மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) அலுவலகம் மூலம் வேறு உதவிகள், உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு உதவித்தொகை போன்றவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தகுதியுள்ள நோயாளிகள் 191 பேர் மாதந்திர உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் பெற்று வருகின்றனர். உதவி தேவைப்படுவோர் அல்லது நோய் பற்றிய தாக்கம் உள்ளவர்கள் இந்த அலுவலகத்தை திங்கட்கிழமை தோறும் நேரில் சென்று தெரிந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) அலார் சாந்தி, இணை இயக்குநர் (பொறுப்பு) நலப்பணிகள் ராமநாதன், துணை இயக்குநர் மருத்துவபணிகள் (காசநோய்) வெள்ளைசாமி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ராஜேந்திரன், அரசு மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், துணைஇயக்குநர் (தொழு நோய்) பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை தவறவிட்ட, கல்வி அறிவு பெறாத முதியவர்களுக்கு எழுத்தறிவை புகட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    வண்ணார்பேட்டை புதிய மாநகராட்சி பள்ளியில் தொடங்கிய வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் கஸ்தூரி பாய், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பகதேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வீரராகவன், எஸ்தர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×