search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddha Day"

    • நெல்லை சித்தா கல்லூரி சார்பில் சித்தா விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
    • சித்த மருத்துவ விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சித்தமருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் அகத்தியர் பிறந்த நடசத்திரமான மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திரத்தில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 6-வது தேசிய சித்தா தினம் நாளை கொண்டாப்படுகிறது.

    விழிப்புணர்வு பேரணி

    இதை முன்னிட்டு நெல்லை சித்தா கல்லூரி சார்பில் சித்தா விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி இன்று நடைபெற்றது. சித்தமருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா மரியா தலைமை தாங்கினார். போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணரவு ஓட்டமானது பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வ.உ.சி. மைதானம், எல்.ஐ.சி அலுவலகம், லூர்து நாதர் சிலைவழியாக சென்று சித்த மருத்துவக் கல்லூரியில் முடிவடைந்தது.

    துண்டுபிரசுரம்

    தொடர்ந்து மனித சங்கிலி பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் நடந்தது. சித்த மருத்துவ விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    சித்தர்கள் சொன்ன சித்த மருத்துவக் கோட்பாடு, தத்துவங்கள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு வாசகங்கள் அச்சிட்ட தகவல் பலகைகளை மாணவ- மாணவிகள் கையிலேந்தி சென்றனர்.

    பாளை சித்த மருத்துவக் கல்லூரியின் உறைவிட மருத்துவர் ராமசாமி, மருத்துவர்கள் வனிதா, பூமாதேவி, ருக்மணி, நடராஜன் , ராஜாசங்கர் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் அப்துல்காதர் ஜெயலானி, ராஜராஜேஸ்வரி, ராஜகுமாரி, மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

    ×