பெட் கல்வியியல் கல்லூரி சார்பாக சுற்றுச்சூழல் - உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். வள்ளியூர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி நடந்தபோது எடுத்த படம்.
பேரணி நடந்தபோது எடுத்த படம்.
Published on

வள்ளியூர்:

வள்ளியூர் பெட் கல்வியியல் கல்லூரி சார்பாக உலக சுற்றுச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வள்ளியூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் காஜா முகைதீன், பொருளாளர் ஜமாலுதீன் ஆகியோா முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பெபிலா ஜோஸ்பின் பேரணி குறித்து விளக்க உரையாற்றினார்.

வள்ளியூர் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியப் பயிற்சி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதத்தில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com