என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி
  X

  மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.

  நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது
  • பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர்.

  நெல்லை:

  பெண்களை அதிகமாக பாதிக்ககூடிய புற்றுநோய் களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது.

  பிங்க் மாதம்

  எனவே உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதம் என்று அறிவிக்கப்பட்டு அதன் அறிகுறிகள் முதல் மீண்டு வருவது வரை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிமுறைகளை வலியுறுத்தி வருவதே இம்மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

  இதனையொட்டி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வழிகாட்டு தலின்படி, புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

  கலந்துரையாடல்

  பேரணியை மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர். தொடர்ந்து புற்றுநோயை வென்றவர்களின் சாதனை கூட்டத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரை யாடலும் நடைபெற்றது.

  புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றி, மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

  மார்பக புற்று நோயிலிருந்து விடுபட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகள் கொரோனா காலம் தொட்டு இன்றுவரை தாங்கள் பயணித்து வந்த உணர்வு பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது கேட்போரை கண் கலங்க செய்தது.

  தொடர்ந்து, அவர்கள் கூறுகையில், இங்கு எங்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் மருத்துவமனைகளில் இலவசமாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகளும் பெற்று வருகிறோம். அனைவரின் சார்பிலும் மருத்துவமனை நிர்வாகத்தி ற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நமது அரசாங்கத்திற்கும் நன்றி கூறுவது மிகவும் பெருமையாக கருதுகிறோம் என்றனர்.

  நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. முன்னதாக செவிலியர்கள் கலந்து கொண்ட மார்பக புற்றுநோய் குறித்த பட்டி மன்றம் நடந்தது.

  தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கவிதை, ஓவிய போட்டி மற்றும் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன.‌

  நிகழ்ச்சியில் கதிரியக்க துறைத் தலைவர் தெய்வநாயகம், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பியூலா, தலைமை செவிலி யர் கண்காணிப்பாளர் திருமால் தாய், செவிலியர் போதகர் ஆயிரத்தம்மாள் மற்றும் பல்வேறு மருத்துவத் துறையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

  மேலும் பிங்க் கலர் பலூன்களை பறக்கவிட்டனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

  Next Story
  ×