ராதாபுரத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.பேரணியின் போது மாணவ- மாணவிகள் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
பேரணி நடந்தபோது எடுத்த படம்.
பேரணி நடந்தபோது எடுத்த படம்.
Published on

வள்ளியூர்:

ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் சுற்று சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியவதி பிளாரன்ஸ் தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படை அதிகாரி சகாய வியாகம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் சுபேதார் தசரதன், உதவி தலைமை ஆசிரியர் சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், வேளாண்மை உதவி இயக்குநர் ஜாஸ்மின்லதா, வேளாண்மை உதவி தொழில் நுட்ப மேலாளர் சரிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com