வண்ணார்பேட்டையில் வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணி

வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்.
பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள்.
Published on

நெல்லை:

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை தவறவிட்ட, கல்வி அறிவு பெறாத முதியவர்களுக்கு எழுத்தறிவை புகட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

வண்ணார்பேட்டை புதிய மாநகராட்சி பள்ளியில் தொடங்கிய வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் கஸ்தூரி பாய், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பகதேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வீரராகவன், எஸ்தர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com