search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் உலக கோப்பை ஆக்கி போட்டி விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியை கோவில்பட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    கோவில்பட்டியில் உலக கோப்பை ஆக்கி போட்டி விழிப்புணர்வு பேரணி

    • 15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகின்றது.
    • சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகின்றது.

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக கலந்து கொள்கின்றன. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 13-ந் தேதி ஸ்பெயினுடனும், 2-வது ஆட்டத்தில் 15-ந் தேதி இங்கிலாந்துடனும், கடைசி லீக் ஆட்டத்தில் 19-ந் தேதி வேல்ஸ் அணியுடனும் மோதுகிறது.

    இந்தியாவில் நடைபெறும் 15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கி போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ஆக்கி உலக கோப்பையின் மாதிரி மற்றும் இந்திய தேசிய கொடியுடன் கே.ஆர்.கல்வி குழுமங்களின் ஆக்கி வீரர்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆக்கி வீரர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கிளப் வீரர்கள் மற்றும் உலக கோப்பை இந்திய ஆக்கி வீரர்களுடன் பயிற்சி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த ஏழு ஆக்கி வீரர்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கே.வெங்கடேஷ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பேரணியின் முடிவில் உலக கோப்பை இந்திய ஆக்கி வீரர்களுடன் பயிற்சி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த 7 ஆக்கி வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கிளப் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×