search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 பேர் பலி"

    பாகிஸ்தான் நாட்டில் லாகூர் நகரின் அருகே உயிர் காக்கும் அரசு ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் வைத்து 15 வயது சீக்கிய சிறுமியை இருவர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #SikhGirl #Ambulance
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள நன்கானா சாகிப் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே 15 வயதுடைய சீக்கிய சிறுமி கடந்த சனிக்கிழமை மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அவரை தேடும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது நன்கானா பைபாஸ் சாலையில் நின்றிருந்த அரசு ஆம்புலன்சிலிருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டனர்.



    இதையடுத்து ஆம்புலன்ஸ் அருகே சென்றபோது, அதிலிருந்த 2 பேர் ஒரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
    கீழே விழுந்த பெண் தனது மகள் என்பதை அறிந்து அவர்கள் கதறினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஹசன் அலி, சமீன் ஹைதர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Pakistan #SikhGirl #Ambulance
    சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இவர் கடந்த 2016-ம் வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ராமநாதபுரம் போலீசார் 13 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பின்னர் சிறுவன் ஜாமீனில் வெளியே வந்தான்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிறுவர்களுக்கான விசாரணை ஆணையத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சிறுவன் மீண்டும் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    சுங்குவார்சத்திரம் அருகே விபத்தில் 15 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எளிமையாள் கோட்டூர், எடையார்பாக்கம், மதுரமங்கலம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் பூந்தமல்லியில் உள்ள ககலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் கம்பெனி வேனில் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை 15-க்குதத் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு வேன் எளிமையாள்கோட்டூர் வழியே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை உர வயல் வெளியில் கவிந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பெண்கள் மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 48) இவர் கள்ளிக்குடி ஊரக வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மனைவி திலகவதி மாசவநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அழகர் சாமி தன் மனைவியை வழக்கம்போல் பள்ளியில் இறக்கி விட்டு காலையில் வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் சென்று விட்டார்.

    மாலையில் வீட்டிற்கு வந்த அழகர்சாமி வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    மேலும் அனைத்து அறைகளிலும் உள்ள கதவுகளை உடைத்து எலக்ட்ரிக்கல் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்தனர். #Talibanattacks #Afghanpolicemen
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்ததாகவும், 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஜவ்ஸான் மாகாண காவல்துறை தலைவர் முஹம்மது ஜவுஸ்ஜான் இன்று தெரிவித்தார். #Talibanattacks  #Afghanpolicemen
    தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மயுங்-பாக் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #SouthKoreanLeader #LeeMyungBak
    சியோல்:

    தென்கொரியாவில் லீ மயுங்-பாக் அதிபராக இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சியோல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. லீ மயுங்-பாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால் லீ மயுங்-பாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதுதவிர 13 பில்லியன் வொன் (தென்கொரிய பணம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.



    அரசியல் நோக்கங்களுக்காக தன் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டதாக லீ தெரிவித்தார். அவருக்கு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்ட சாம்சங் கம்பெனியும் கூறியுள்ளது.

    தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெறும் 4-வது முன்னாள் தலைவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது. #SouthKoreanLeader #LeeMyungBak
    அளவுக்கு அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. #CO2Emissions
    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    பருவநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    மொத்தம் 200 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களின் மூலம் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் முதல் 3 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் சவுதி அரேபியா உள்ளன.

    சீனா முதல் 5 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கார்பன்-டை- ஆக் சைடை அதிக அளவில் வெளியேற்றுவதால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கையில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அளவுக்கு அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.15லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை ரூ.18 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுவதாக ஆய்வு குழுவின் தலைவரும் சாண்டியாகோ பல்கலைக் கழக உதவி பேராசிரியருமான காத்ரின் ரிக்கி தெரிவித்துள்ளார்.

    அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவதால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளத்தால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு புதுவித நோய்கள் உருவாகிறது.

    வெப்பம் அதிகரிப்பதால் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் வருகை குறைந்து பொருட்களின் உற்பத்தி திறன் பாதிக்கிறது. இதனால் நாடுகளின் பொருளாதரம் ஆண்டுதோறும் தொடர்ந்து சீரழிகிறது. எனவே உலக வெப்பமயமாதலை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என கூறப்பட்டுள்ளது. #CO2Emissions
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் மகாலிங்கம், பட்டு மற்றும் போலீசார் தேன்கனிக்கோட்டையில் உள்ள தர்கா மற்றும் தனியார் லாட்ஜ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி(வயது 29), மஞ்சுநாத்(29), இர்பானுல்லா (27), ராஜா(42), பாலாஜி (34), ஹரீஷ்(30), சரவணன்(34), ராஜவேல்(51), கிருஷ்ணமூர்த்தி(33), கணேஷ்(31) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500-ம், சீட்டுகட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சென்னப்பநாயக்கனூர் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர் களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த போஸ் என்கிற இளந்திரயன்(24), கணேஷ் (29), சேட்டு(41), வெங்கடா சலம்(31), இளங்கோ(26) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மற்றும் சீட்டுகட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 
    முழு அடைப்பால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    இது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

    இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்தக்கோரியும் நேற்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதேபோல், சில வணிக அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் தமிழ்நாட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அரசு - தனியார் அலுவலகங்களும், பள்ளி - கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கின. கடைகளும் அதிக அளவில் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    தலைநகர் சென்னையை பொறுத்தவரை, காலை முதலே வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. பஸ், ரெயில், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வணிகப் பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டையில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒரு சில பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி வியா பாரிகளை வற்புறுத்தினர். ஆனாலும், வியாபாரிகள் கடைகளை அடைக்க வில்லை. சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அந்த வகையில், சென்னையில் 430 பேரும், காஞ்சீபுரத்தில் 550 பேரும், திருவள்ளூரில் 400 பேரும் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை என்ற போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு அலைகள் இருந்ததையும் காண முடிந்தது.  #BharathBandh #PetrolDieselPriceHike
    முந்தைய நிதி குறைப்பை சீராய்வு செய்து தமிழகத்துக்கான நிதிஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும் என்று இன்று நடைபெற்ற 15-வது நிதிக்குழுவில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். #Edappadipalaniswami #FinanceCommission
    சென்னை:

    தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், நிதிக்குழு செயலாளர் அரவிந்த் மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்மானம் சமீபத்திய நிதிக்குழுக்களால் குறைக்கப்பட்டுள்ளது. 14-வது நிதிக்குழுவினால் மத்திய வரிகளின் பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்ட போதிலும் அது தமிழ்நாட்டிற்கு உதவாமல் போனதற்குக் காரணம், மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு அதிகமாக குறைக்கப்பட்டதேயாகும்.

    14-வது நிதிக்குழு பரிந்துரைக்காலத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழ்நாட்டிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அது ஒட்டுமொத்த நிதிக்குழு பரிமாற்ற அமைப்பின் மீது தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


    2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை நான் இங்கே வலியுறுத்துகிறேன்.

    மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப் படையில் நிதிப்பங்கீடு வழங்கவும் நான் நிதிக் குழுவை வேண்டுகிறேன். இக்குறியீட்டிற்கு மக்கள் தொகைக்கு வழங்கப்படும் அளவில் மதிப்பீடு அளித்து பரிந்துரைக்கப்பட வேண்டும். நிதிப்பங்கீட்டினைப் பொறுத்தமட்டில் 1971-ம் ஆண்டின் தரவுகளையே அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஊக்கத்தொகைகள் குறித்த குறிப்புகள் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, 280-க்கு அப்பாற்பட்டது என்பதனை குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம்.

    ‘கவர்ச்சி’ திட்டங்களுக்கான செலவினங்களை கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு வரம்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக எங்களது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கிறோம். கவர்ச்சி திட்டங்களுக்கும் மக்கள் நலத்திட்டத்திற்குமான இடைவெளி மிக மெல்லியதான ஒன்றாகும்.

    பள்ளிக் குழந்தைகளுக்கான ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்’ என்பது முந்தைய காலத்தில் ‘கவர்ச்சி திட்டம்’ என்று ஒரு சிலரால் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தினை தனது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு அங்கமாக்கியுள்ளது.

    தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைக் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் வெவ்வேறு நிலையில் உள்ள மக்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தகையத் திட்டங்கள் யாவும் தகுதிவாய்ந்த மக்களை சென்றடையுமாறு உள்ளன. எனவே, அத்தகைய திட்டங்களை கவர்ச்சித் திட்டங்கள் என்று குறிப்பிட இயலாது. நிதிக்குழுவானது பல்வேறு மாநில சட்டமன்றங்களின் ஒட்டுமொத்த முடிவுகளை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று கருதுகிறேன்.

    முந்தைய நிதிக் குழுக்களின் சில பரிந்துரைகள் மிகவும் மோசமான பின் விளைவை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா மிக விரைவாக வளர வேண்டுமானால் தமிழ்நாடு போன்ற வளர்ந்துவரும் மாநிலங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு நிதித் தேவைகள் அதிகமாக உள்ளன.

    மத்திய அரசு பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியை முழுமையாக மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என்று இந்திய தலைமைக் கணக்காயர் முன்னரே குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அளவு நிதியை மாநிலம் முன்பு இழந்துள்ளது. எனவே முந்தைய நிதிக் குழுக்களில் ஏற்பட்ட குறைபாடுகளை சீராய்வு செய்து நிதி பகிர்மானத்தில் ஏற்பட்டுள்ள குறைகளை சரி செய்யும் வகையில் அதற்கான நிதியினை உடனடியாக வழங்க 15-வது நிதிக் குழுவை நான் கேட்டுக் கொள்கிறேன்.

    நிலையான அரசு சொத்துக்களின் பராமரிப்புக்கு முக்கியத்துவம் வழங்கி பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த நிதிக்குழுவை நான் வலியுறுத்துகிறேன்.

    சுமார் 8 கோடி தமிழ்நாட்டு மக்கள் இந்த நிதிக்குழுவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிறந்த 15-வது நிதிக்குழு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalaniswami #FinanceCommission
    திருப்பூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் தோட்டத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி ரத்தின லட்சுமி (25). பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது மகள் கனிஷ்காவுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். திருமுருகன் பூண்டி - பூலுவப்பட்டி சாலையில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    அவர்கள் ரத்தினலட்சுமி மொபட் மீது மோதுவது போல் வந்தனர். இதனால் மொபட்டை நிறுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ரத்தின லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். நகையை பறி கொடுத்த ரத்தினலட்சுமி சத்தம் போட்டார். ஆனால் அந்த சமயத்தில் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் 3 பேரும் எளிதாக தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
    ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கூடம் நடத்துவதாக கூறி அதன் உரிமையாளரே 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நகரி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள கிளவ் பேட்டை என்ற இடத்தில் பள்ளிக்கூடம் நடத்துபவர் ஜோசப்.

    இவர், தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக தங்கும் விடுதி நடத்தி வந்தார். இதில் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள ஏழை மாணவிகள் தங்கி இருந்தனர்.

    2-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி அவர்களிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளி நிர்வாகி ஜோசப், இந்த மாணவிகளை தனது பாலியல் பசிக்கு பயன்படுத்திக் கொண்டது தெரிய வந்தது.

    இந்த விடுதியில் மொத்தம் 46 மாணவிகள் இருந்தனர். அவர்களை தினமும் 6 பேர் வீதம் தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு மாணவிகளை எழுந்து வர வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது உறுதியானது.

    இதையடுத்து பள்ளி நிர்வாகி ஜோசப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மதபோதகராக இருந்ததும் தெரிய வந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் கைதான இவர் மீது 2 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளிக்கூடம் நடத்துவதாக கூறி அதன் உரிமையாளரே 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பள்ளி நிர்வாகி நடத்தி வந்த தங்கும் விடுதியில் இருந்த 46 மாணவிகளும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீண்ட நாட்களாக இது போன்ற பாலியல் தொல்லை நடந்துள்ளது. இதை வெளியே சொன்னால் தங்கள் படிப்பு நின்று விடுமோ என்ற பயத்தில் மாணவிகள் இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஒரு மாணவி துணிச்சலுடன் போலீசாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகி ஜோசப்பை கைது செய்துள்ளனர்.
    ×