search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CO2"

    அளவுக்கு அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. #CO2Emissions
    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    பருவநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    மொத்தம் 200 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களின் மூலம் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் முதல் 3 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் சவுதி அரேபியா உள்ளன.

    சீனா முதல் 5 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கார்பன்-டை- ஆக் சைடை அதிக அளவில் வெளியேற்றுவதால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கையில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அளவுக்கு அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.15லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை ரூ.18 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுவதாக ஆய்வு குழுவின் தலைவரும் சாண்டியாகோ பல்கலைக் கழக உதவி பேராசிரியருமான காத்ரின் ரிக்கி தெரிவித்துள்ளார்.

    அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவதால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளத்தால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு புதுவித நோய்கள் உருவாகிறது.

    வெப்பம் அதிகரிப்பதால் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் வருகை குறைந்து பொருட்களின் உற்பத்தி திறன் பாதிக்கிறது. இதனால் நாடுகளின் பொருளாதரம் ஆண்டுதோறும் தொடர்ந்து சீரழிகிறது. எனவே உலக வெப்பமயமாதலை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என கூறப்பட்டுள்ளது. #CO2Emissions
    ×