search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாட்டம்"

    • கடன்தாரர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
    • தர்ஷன் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    கர்நாடக அரசு ஊழியர் தர்ஷன் பாபு. நீர்வளத்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார். பெங்களூருவை அடுத்த சித்ரதுர்கா என்ற பகுதியில் வசித்து வந்த தர்ஷனுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ரஞ்சிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தர்ஷன் - ரஞ்சிதா தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு.

    திருமணம் ஆன ஒருவருடத்தில் இருந்து தர்ஷன் பாபு ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மிக விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற ஆசையில் தர்ஷன் பாபு சூதாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக சூதாடியதில் தர்ஷன் அதிக பணத்தை இழந்துள்ளார்.

     


    சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் போது, மீண்டும் கடன் பெற்று சூதாடுவதை தர்ஷன் வழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் ரூ. 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை கடனாக பெற்று இருக்கிறார். கடனாக பெற்ற தொகையை சூதாட்டத்தில் இழந்த தர்ஷன், இழந்த தொகையில் ரூ. 1 கோடியை திரும்ப கொடுத்துள்ளார்.

    எனினும், கடனில் ரூ. 84 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். கணவர் தர்ஷன் பெற்ற கடன் தொகையை திரும்ப கேட்டு, மனைவி ரஞ்சிதாவிடம் கடன்தாரர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. கடன்தாரர்கள் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த மனைவி ரஞ்சிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கான காரணத்தை ரஞ்சிதா கடிதம் ஒன்றில் எழுதி வைத்திருக்கிறார். அதில் கடன்தாரர்கள் என்ன தொல்லை கொடுத்தனர் என்று விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.

    கணவனின் சூதாட்ட பழக்கம், கழுத்தை நெறித்த கடன், கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் மனைவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
    • திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம்.

    "லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

    ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

    மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம். யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார்.

    தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், 'முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு 'குற்றப்பட்டியல்' கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார்.

    மண்புழுவைப் போல ஊர்ந்து போய் நாற்காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோகம் செய்து, பின்னர் பாஜகவின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, இன்று பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கியதை உண்டா?

    திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான்.

    பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது கழக அரசுதான். அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி?

    இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி?. தனது எஜமானர்களான பாஜகவைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!

    அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக' என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?

    'பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

    நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! பழனிசாமி சொல்கிறார். அவர் கைக்கு அதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?" என்று அவர் தெரிவித்துள்ளார்

    • ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    மேலும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் கைது செய்து விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று பஜார் பகுதி, காந்தி ரோடு, ரெயில் நிலையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மணியக்கார தெருவில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அரக்கோணத்தை அடுத்த மூதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 46), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த வனத்தையன் (40) என்பதும், சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து ரூ.72 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின் பேரில் வடமதுரை, எரியோடு போலீசார் இதுகுறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று எரியோடு கோவிலூர் பகுதியில் பண்ணைக்குளம் என்ற இடத்தில் சேவல் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கோவிலூரை சேர்ந்த பெருமாள், திருமுருகன், குஜிலியம்பாறையை சேர்ந்த காளிமுத்து, நடராஜன், கோம்பையை சேர்ந்த தேவராஜ், தவசிமடையை சேர்ந்த தங்கபாண்டியன், மணப்பாறையை சேர்ந்த ரவிக்குமார் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.72 ஆயிரம் ரொக்கப்பணம், 2 சேவல்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதி பெறாமல் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.
    • பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது.

    உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெ்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை வெல்லப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. எந்த அணி உலக கோப்பையை வெல்லும்? என்பது தொடர்பாகவும், யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள், பந்து வீசுவார்கள், எவ்வளவு ஸ்கோர் குவிக்கப்படும் என்பது தொடர்பாக பெட் டிங் கட்டப்பட்டு வருகிறது.

    சுமார் 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.

    ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் இந்த தொகை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கடந்த மாதம் 14-ந் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரூ.40 ஆயிரம் கோடிக்கு பந்தயம் நடைபெற்றது. அதை மிஞ்சும் வகையில் இறுதிப் போட்டியில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது.

    பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன. மேலும் இவர்கள் உலக கோப்பை இறுதி ஆட்டம் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும் என்றே கருதுகின்றனா். 300 முதல் 400 ரன் வரை வரும் என்று சிறிய அளவிலான சூதாட்டதரகர்கள் பெட்டிங் கட்டி உள்ளனர்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் மீது பெரும்பாலானோர் பந்தயம் கட்டி உள்ளனர். பந்து வீச்சை பொறுத்த வரையில் முகமது ஷமி மீது அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பும்ரா, முகமது சிராஜ் மீதும் பந்தயம் கட்டப்பட்டுள்ளது.

    • பாலத்துறை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
    • 3 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து வழக்கு பதிவு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை சலவை காலனி அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலாயுதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பழனிசாமி (56) , பாலத்துறை சலவை காலனியை சேர்ந்த மாரிமுத்து( 64), வேலாயுதம்பாளையம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்( 50), பாலத்துறை பகுதியை சேர்ந்த விஜயன்( 48) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகராஜ், ராஜி, முரளி, மணிகண்டன் , ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
    • ரூ.100 அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, சுந்தராஜன், மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் விக்கிரவாண்டி அருகில் உள்ள கிராமங்களில் ரோந்து பணி மேற்கொண்ட போது ஆசூர் கிராமத்தில் சுடுகாடு அருகில் காசு வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகராஜ், ராஜி, முரளி, மணிகண்டன் , ஆகிய 4 பேரை கைது செய்தனர். பொன்னங்குப்பம் கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே காசு வைத்து சூதாடி கொண்டி ருந்த சிவகுமார், ராஜகோபால்,ராஜ்கிரன் ஆகிய 3 பேரை கைது செய்து 40 புள்ளி தாள் ரூ 100 அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் துர்கைசாமி மற்றும் போலீசார் காவிரி ஆறு பகுதிக்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்தவுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் மோகனூர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (48), மணிமாறன் (46), ஜெயபால் (38), விவேகானந்தன் (34), சிவக்குமார் (43), கார்த்திக் பார்த்தீபன் (32), வினோத் (23) ஆகிய 8 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ரூ.17 ஆயிரம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பிடிப்பட்ட 8 பேர் மற்றும் தப்பியோடிய கிஷோர், தேவராஜ், அரவிந்த், சேகர், ராகுல் ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    • கோழி சண்டை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பேய்க்காநத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்ததை பார்த்தனர்.

    கடலூர்:

    குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று இரவு சோர்ந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ரோந்து பணி நடந்தது. அப்போது பேய்க்காநத்தம் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்ததை பார்த்தனர். அங்கு சென்றபோது கோழி சண்டை நடத்தி சூதாட்டம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கோழிச்சண்டை சூதாட்டம் நடத்திய கருப்பன்சாவடி விஜய், தா. பாளையம் பாஸ்கர், பேய்க்கா நத்தம் மனோ மூர்த்தி, வெங்கடாம்பேட்டை சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேவபாண்டலம் சுடுகாடு அருகே பணம் வைத்து 7 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தேவபாண்டலம் சுடுகாடு அருகே பணம் வைத்து 7 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர்.

    விசாரணையில், தேவபாண்டலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34), பிரகாஷ் (30), தயாநிதி (33), பத்ரிநாத் (23), அன்பரசன் (34) மற்றும் வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (40), ராஜ்குமார் (28) என்பது தெரியவந்தது. 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சங்கராபுரம் போலீசார் அவர்களை கைது செய்தனர்.


    • ஜெயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல்

     ஜெய ங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் அடுத்து நாகல் குழி குறிசாலையில் தொடர்ந்து பணம் வைத்து பலர் சீட்டு விளையாடுவதாக ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நடேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த வீரமணி, ராஜா, சுரேஷ் ,மன்னார், என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.3500 பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×