என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேர் கைது

- பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே பணம் வைத்து சீட்டு விளையாடப்படுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த சிலர் தப்பிவிட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை இ.பி. காலனியை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 35), கரந்தை குமார் (45), காயிதே மில்லத் நகர் கார்த்தி (32), பூக்கார விளார் ரோடு ராஜா (42), ஜெகன் (30) என்பதும், பணம் வைத்து சீட்டு விளையாடியதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்நாதன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் தஞ்சை ரெயிலடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய விளார் ரோட்டை சேர்ந்த ரமேஷ் (40), கார்த்தி (40), எல்.ஐ.சி. காலனி சங்கர் (55), தெற்கு சக்கரசாமந்தம் மணிகண்டன் (40), முத்து (40) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.