பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி- டி.டி.வி.தினகரன்

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
டி.டி.வி.தினகரன்.
டி.டி.வி.தினகரன்.
Published on

மன்னார்குடி:

மன்னார்குடியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தல்களில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.

அதில் நாங்கள் அணில் போல் செயல்பட்டு வருகிறோம்.

தேசிய கட்சி ஒன்றுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று பலமுறை கூறி வருகிறோம்.

ஜெயலலிதாவை நேசிக்கிறவர்கள் ஒன்றிணைந்து, இதர கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்‌.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றது.

இதனால் மக்கள் அதிருப்தியுடனும், வேதனையுடனும் உள்ளனர்.

இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

அதற்கான முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது துணை பொதுச்செயலாளர் ெரங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்

மா. சேகர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, நகரக் செயலாளர், ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com