search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 பேர் பலி"

    • மேலூர் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்தனர்.
    • இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்

    நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை நாகர்கோவிலை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவர் ஓட்டி ெசனறார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பாராதவிதமாக திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சின் டிரைவர், பஸ் பயணிகளான நெல்லையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(52), மணிமாறன் (36), விஜயா (59) உட்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயம் பாண்டியன், ஜெய கஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.

    இன்று மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.



    மளமளவென பரவி வரும் தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு படையினர் போராடி வருகி்ன்றனர்.

    சூரத் நகரில் தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார். #AsianAthleticChampionships #Gomathi #ADMK
    சென்னை:
     
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அ.தி.மு.க. தலைமை இன்று அறிக்கை வெளியிட்டது.

    இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினர். #AsianAthleticChampionships #Gomathi #ADMK
    இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. #SriLankaAttacks #IS
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த வாரம் தேவாலயம் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகினர். இதையடுத்து, ராணுவமும் போலீசாரும் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
     
    இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் பலர்  கைது செய்யப்பட்டனர். 



    இதற்கிடையே, இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படை நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிறிது நேரத்தில் வீட்டில் குண்டு வெடித்து சிதறியது. அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்தவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகினர்.

    இந்நிலையில், இலங்கை கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்புக் கொண்டது. #SriLankaAttacks #IS
    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HeatstrokeinPakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லால் ஷாபாஸ் கலாந்தர் பகுதியில் நடைபெற்ற ஆண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    பாகிஸ்தானில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பலர் வெயிலின் தாக்குதலுக்கு ஆளாகினர்.



    சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல் கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. #HeatstrokeinPakistan 
    அசாம் மாநிலத்தில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் போடோலாந்து இயக்கத்தலைவர் உள்பட 15 பேரை குற்றவாளிகளாக சிபிஐ கோர்ட் இன்று அறிவித்துள்ளது. #CBICourt #Assamserialblast
    கவுகாத்தி:

    அசாம்  மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கைகவ்ன், பார்பேட்டா ஆகிய பகுதிகளில் கடந்த 30-10-2008 அன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 88 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பலர்மீது குற்றம்சாட்டி கவுகாத்தி நகரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி  அபரேஷ் சக்ரபர்த்தி இன்று தீர்ப்பளித்தார்.

    போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 15 பேரை இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விபரம் வரும் 30-ம் தேதி தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #CBICourt #Assamserialblast
    பொள்ளாச்சியில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-கோவை ரோடு சங்கம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தோடு மைசூர் சுற்றுலா சென்றார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஜெயக்குமாரின் உறவினர் சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் ஜெயக்குமாருக்கும் தகவல் கொடுத்தார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். #Indonesialandslide
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டன. அந்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.



    நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  #Indonesialandslide

    ஜம்மு காஷ்மீரில் உள்ள அக்னூர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். #Jammu#Akhnoor #BSF
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அக்னூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது சுமார் 3 கிலோ எடையிலான ஹெராயின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்றும், தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #Jammu#Akhnoor #BSF
    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் 15 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார். GajaCyclone #GajaCycloneRelief #AjithKumar
    சென்னை:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மாலை பார்வையிட்டு வருகின்றனர்.



    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் இன்று வழங்கியுள்ளார். #GajaCyclone #GajaCycloneRelief#AjithKumar
    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். #KarnatakaBusAccident #BusPlungedCanal
    மாண்டியா:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

    இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

    இந்த விபத்தில் 15 பேர் பலியானதாகவும், மேலும் சிலர் தண்ணீரில் தத்தளிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #KarnatakaBusAccident #BusPlungedCanal
    தென்கொரியாவில் 8 பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டு தொடர்பாக பாதிரியாருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார். #SouthKorea #Pastor #LeeJaerock
    சியோல்:

    தென் கொரியாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய தேவாலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75).

    1982-ம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

    அந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ள 3 பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களை பாதிரியார் லீ, தனது அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டுக்கு அழைத்து, வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டார் என புகார் செய்தனர்.

    அவர்களில் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அவர் அரசரை விட மேலானவர். அவர்தான் கடவுள். அதனால்தான் அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை” என்று கூறினார்.

    இந்த 3 பெண்களைப் போன்று மேலும் 5 பெண்கள், பாதிரியார் லீ மீது போலீசில் கற்பழிப்பு புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான கற்பழிப்பு புகார்களை மறுத்தார்.

    இருப்பினும் அவர் மீது சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் முறைப்படி வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், அவர் தனது ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ள பெண்களை நீண்ட காலமாக கற்பழித்து வந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என கருதி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார். 
    ×