search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunguvarchatram"

    சுங்குவார்சத்திரம் அருகே பஸ்-லாரி மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் கனரக வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு கம்பெனி பஸ் சுங்குவார்சத்திரம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது சுங்குவார் சத்திரம் கூட்டு சாலையில் சென்னை நோக்கி வந்த லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த தொழிலாளர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    சுங்குவார்சத்திரம் அருகே டேங்கர் லாரியில் ஆயிலை திருடி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த பர்பாங்குழி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சட்ட விரோதமாக ஆயில் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    போலீசார் மாந்தோப்பில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு டேங்கர் லாரியில் இருந்து கட்டுமான பணிக்கு உபயோகப்படுத்தும் ஆயிலை பேரல்களில் இறக்கி பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

    விசாரணையில் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு டேங்கர் லாரி மூலம் 16 ஆயிரம் லிட்டர் ஆயில் எடுத்து செல்லப்படுவதும், மாந்தோப்பில் உள்ள பேரல்களில் நிரப்பி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதையும் கண்டுபிடித்தனர்.

    இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து சட்டவிரோதமாக ஆயிலை திருடி விற்பனை செய்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்த ரஞ்சித், லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஜி.சி.கே.நகரை சேர்ந்த ஞானமகிமைதாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    மாந்தோப்பு உரிமையாளர் டில்லி கணேஷ், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பரமசிவன், ராஜா, சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சுங்குவார்சத்திரம் அருகே விபத்தில் 15 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எளிமையாள் கோட்டூர், எடையார்பாக்கம், மதுரமங்கலம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் பூந்தமல்லியில் உள்ள ககலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் கம்பெனி வேனில் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை 15-க்குதத் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு வேன் எளிமையாள்கோட்டூர் வழியே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை உர வயல் வெளியில் கவிந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பெண்கள் மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுங்குவார்சத்திரம் அருகே பயணிகள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து கவிழ்ந்ததில் தாய் மற்றும் மகள் உள்பட 3 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஷேர் ஆடடோவுக்காக ஏராளமானோர் காத்து நின்றனர். அப்போது சென்னையில் இருந்து வேலூரை நோக்கி ஊர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி வேகமாக சென்றது.

    சாலையின் குறுக்கே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க லாரிய டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்ற பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிங்காடிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி செண்பகவள்ளி (45), இவரது மகள் கனிமொழி (20), லாரி டிரைவர் அரவிந்தன் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை சுங்குவார்சந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மீட்டு சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    ×