என் மலர்
உலகம்
- உங்களின் லேப்-டாப் மற்றும் போன் வேண்டுமானால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஒரு எண்ணையும் எழுதி வைத்திருந்தார்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சில மணி நேரங்களிலேயே அந்த திருடனை கைது செய்தனர்.
திருட செல்வதை கூட போஸ்டர் அடித்து ஒட்டிய காட்சிகளை சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனால் சீனாவில் ஒரு திருடன், திருடிய வீட்டில் குறிப்பு எழுதி வைத்து வந்ததால் சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்-டாப் திருட்டு போனது. அலுவலகத்திற்குள் நுழைந்து அவற்றை திருடிய கொள்ளையன் புறப்படும் போது குறிப்பு ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளார். அதில், 'டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்-டாப்பை எடுத்துக் கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து நான் எல்லா போன்களையும், லேப்-டாப்களையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்-டாப் மற்றும் போன் வேண்டுமானால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்' என ஒரு எண்ணையும் எழுதி வைத்திருந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சில மணி நேரங்களிலேயே அந்த திருடனை கைது செய்தனர். அவரிடம் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த தகவல்கள் வலைதளங்களில் பரவிய நிலையில் பயனர்கள் சிலர், 'நல்ல திருடன்' என பதிவிட்டுள்ளனர்.
- திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது.
- ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.
அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.
பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.
மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.
அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.
ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் வழங்கறிஞர் டெட் க்ரூஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.
மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது.
- ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும்.
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின.
விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது. பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு முடிகிறது.
அதன்பின்னர் விண் வெளியில் இருந்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்காக பிரத்தியேக விண்கலம் உருவாக்கப்படுகிறது.
இந்த பணியை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது. இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.5 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக் கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது.
இதுதொடர்பாக நாசா கூறும்போது, யு.எஸ். டி.ஆர்.பிட் வாகனத்தை (விண் கலம்) உருவாக்கி வழங்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும். இது விண்கலம் தயாரிப்புக்கான தொகை மட்டுமே.
விண்வெளி நிலையத்தை வளிமண்டலத்திற்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆபத்தை தவிர்ப்பதையும் இந்த விண்கலம் உறுதி செய்யும். டிஆர்பிட் விண்கலத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.
அதன் பின்னர் அந்த விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்ட லத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும் என்று தெரிவித்தது. விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு இன்னும் நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்கால திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும் என்றும் எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து மக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன.
- சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. அதேசமயம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன. குறிப்பாக முதியவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
எனவே அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் டாக்டர், நர்சு உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
மேலும் வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தற்காலிக சிறப்பு மருத்துவ முகாம்களையும் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
- தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தைபே நகரம்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சீனா மற்றும் அதன் தன்னாட்சி பிராந்தியங்களான ஹாங்காங், மக்காவோ ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தைவான் நாட்டினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் சீனாவில் வசித்து வருகின்றனர். எனவே இரு நாடுகள் இடையே தினமும் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் தைவான் அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது.
- மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கொழும்பு:
இலங்கையில் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மூலமாக பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன.
இது தொடர்பாக இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது. இதில் அந்த மோசடி கும்பல் 'வாட்ஸ்-அப்' குழுவில் ஆட்களை சேர்த்து அதிக லாபம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து முதலீடு செய்ய வைத்தும், சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தியும் பணம் சுருட்டி வந்தது தெரியவந்தது. மேலும் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான மடிவெலா, பத்தரமுல்லை மற்றும் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து மோசடி கும்பல் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் குற்றப் புலனாய்வு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மோசடி கும்பலை சேர்ந்த 156 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 137 பேர் இந்தியர்கள் ஆவர். மற்ற 19 பேரும் ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அந்த மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் குற்றப் புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மகனின் பிறந்தநாளையொட்டி அவரது தாயார் மாயே மஸ்க், தனது மகனின் குழந்தைப் பருவ புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
- எலான் மஸ்க் 4 வயது குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் 53-வது பிறந்தநாள் நேற்று. தொழில்நுட்ப கோடீசுவரரான அவருக்கு, வாழ்த்து தெரிவித்து வலைத்தள பக்கங்கள் நிரம்பின. பலரும் அவரது சாதனைகளை பட்டியலிட்டனர். மகனின் பிறந்தநாளையொட்டி அவரது தாயார் மாயே மஸ்க், தனது மகனின் குழந்தைப் பருவ புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
Happy Birthday @elonmusk Thank you for 53 years of joy and excitement.
— Maye Musk (@mayemusk) June 28, 2024
Hoping you smile today as much as you did on your 4th birthday, after seeing the cake your Aunt Lynne made for you ??
Proud of you. ??? pic.twitter.com/FhI4ZgJ98h
அத்துடன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள். 53 வருட மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் நன்றி. உங்கள் 4-வது பிறந்தநாளில் உங்கள் அத்தை லின் உங்களுக்காக செய்த கேக்கைப் பார்த்து புன்னகைக்கிறீர்கள். அன்று செய்ததைப் போல இன்றும் நீங்கள் புன்னகையுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாழ்த்துகிறேன்" என்று எழுதி, எலான் மஸ்க் 4 வயது குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
30 years ago pic.twitter.com/y8MDRQYY32
— Elon Musk (@elonmusk) June 28, 2024
எலான் மஸ்கும், ஒரு புகைப்படத்தை தனது வலைத்தள பக்கத்தில், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்ற தலைப்பில் பகிர்ந்தார். அதில் பழுப்பு நிற சட்டையுடன், அமெரிக்க கொடியை பின்னணியாக கொண்ட 20 வயது இளம் எலான்மஸ்க் காணப்படுகிறார்.
- வீடியோ ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.
- 900க்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர்.
இந்தியாவை சேர்ந்த பல்லவி வெங்கடேஷ் தனது தாயாரை துபாய் அழைத்துச் சென்று புகழ்பெற்ற 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார். அங்கு வழக்கமான குடும்பப் பணிகளை கவனித்த தாயார், இந்தியாவில் செய்வதைப்போல நட்சத்திர ஓட்டலின் பால்கனி பகுதிக்கு சென்று கம்பியில் துணியை உலர வைக்கப் போனார். ஆனால் அங்கு அப்படி துணியை உலர்த்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சிறு குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தை பெற்றோர் ரசிப்பதுபோல, தாயார் அறியாமையால் செய்த இந்த செயலை ரசித்துப் பார்த்த பல்லவி, அதை வீடியோவாக பதிவு செய்துகொண்டார்.
இங்கே இப்படி துணியை உலர்த்தக்கூடாது என்று சொல்லியபடியே மற்ற தளங்களையும் காட்டி படம்பிடிக்கிறார். பலநூறு அறைகள் கொண்ட அந்த பிரமாண்ட ஓட்டலில் மற்றொரு தளத்திலும் யாரோ துணியை பால்கனியில் உலர்த்தி இருப்பது காட்டப்படுகிறது.
இந்த வீடியோவை பல்லவி வலைத்தளத்திலும் பகிர்ந்தார். அந்த வீடியோ ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். லட்சக்கணக்கானவர்கள் விருப்பப் பொத்தனை அழுத்தி இருந்தார்கள்.
- 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
- உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு.
மாஸ்கோ:
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இதனால் அவ்விரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.
அப்படி சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
அப்படி கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்படும் நபர்கள் உக்ரைன் நடத்தும் தாக்குதல்களில் பலியாவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அண்மையில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவுத்துறை இணை மந்திரி தாரக பாலசூரியா தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷிய அதிகாரிகளிடம் இதை பிரச்சினையாக எழுப்பியதாக இலங்கையில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் போரில் காயமடைந்த இலங்கையை சேர்ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தல், போர் முனையில் சிக்கி இருக்கும் இலங்கையை சேர்ந்தவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அனுப்பி வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் இலங்கை அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள கூடாரங்களின்மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது.
- சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ளது
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் ஓய்ந்தபாடலில்லை. இந்த போரில் இதுவரை 37,718 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காசா நகரம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. பாலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் மற்றொரு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தற்போது குறிவைத்து தாக்குதல்களை நடத்திவருகிறது. மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள் என வகைதொகை இன்றி கண்மூடித்தனமாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் ரஃபா நகரில் உள்ள கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள தற்காலிக கூடாரங்களின் மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்குள்ளான கூடாரங்களில் இருந்த 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இஸ்ரேலின் பீரங்கிகள் அப்பகுதியில் முன்னேறிவந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களிடம் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. இதற்கிடையில் போர் தொடங்கிய கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்றுவரை அதிக சேதத்தை ஏற்படுத்தும் சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

- வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
'கிரேஸி ரிச் ஏசியன்ஸ்' திரைப்படம் பார்த்துள்ளீர்களா? அதில் ஆடம்பரமான திருமண காட்சிகள் நினைவிருக்கிறதா? யதார்த்தம் ஒருபோதும் புனைகதைக்கு போட்டியாக முடியாது என்று சொல்வார்கள்... ஆனால் நிஜ வாழ்க்கையிஸ் 'கிரேஸி ரிச் ஏசியன்ஸ்' பட பாணியிலான திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டானாவாங் என்பவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ள திருமணத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சுவாரசியம் என்னவென்றால், மணமக்கள், தங்கள் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் வைக்கும்படியான மறக்க முடியாத அனுபவத்தை அளித்துள்ளனர்.
அதாவது, விருந்தினர்கள் அனைவரும் சீனாவில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் 5 நாட்கள் தங்குவதற்கும், அவர்கள் வெளியே சுற்றிப் பார்க்க ரோல்ஸ் ராய்ஸ் கார்களை ஏற்பாடு செய்திருந்தனர். இதுபோக திருமணத்திற்குவருகை வந்தவர்களுக்கு ரூ.66,000 பணம் நிரப்பிய சிவப்பு பெட்டியும் அளித்தனர். மேலும் விருந்தினர்கள் அவரவர் ஊர்களுக்கு தேவையான விமான டிக்கெட் தரப்பட்டு இருந்தது.
இவ்வளவு பரிசையும் அளித்த தம்பதிகள், விருந்தினர்களிடம் இருந்து எதையும் பெறவில்லை.
இதுதொடர்பான வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள், இது இந்த ஆண்டின் மிகவும் ஆடம்பரமான திருமணமா என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளனர்.






