என் மலர்tooltip icon

    உலகம்

    கிரேசி ரிச் ஏசியன் பாணியில் திருமணம் - விருந்தினர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
    X

    'கிரேசி ரிச் ஏசியன்' பாணியில் திருமணம் - விருந்தினர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

    • வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    'கிரேஸி ரிச் ஏசியன்ஸ்' திரைப்படம் பார்த்துள்ளீர்களா? அதில் ஆடம்பரமான திருமண காட்சிகள் நினைவிருக்கிறதா? யதார்த்தம் ஒருபோதும் புனைகதைக்கு போட்டியாக முடியாது என்று சொல்வார்கள்... ஆனால் நிஜ வாழ்க்கையிஸ் 'கிரேஸி ரிச் ஏசியன்ஸ்' பட பாணியிலான திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    டானாவாங் என்பவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ள திருமணத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சுவாரசியம் என்னவென்றால், மணமக்கள், தங்கள் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் வைக்கும்படியான மறக்க முடியாத அனுபவத்தை அளித்துள்ளனர்.

    அதாவது, விருந்தினர்கள் அனைவரும் சீனாவில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் 5 நாட்கள் தங்குவதற்கும், அவர்கள் வெளியே சுற்றிப் பார்க்க ரோல்ஸ் ராய்ஸ் கார்களை ஏற்பாடு செய்திருந்தனர். இதுபோக திருமணத்திற்குவருகை வந்தவர்களுக்கு ரூ.66,000 பணம் நிரப்பிய சிவப்பு பெட்டியும் அளித்தனர். மேலும் விருந்தினர்கள் அவரவர் ஊர்களுக்கு தேவையான விமான டிக்கெட் தரப்பட்டு இருந்தது.

    இவ்வளவு பரிசையும் அளித்த தம்பதிகள், விருந்தினர்களிடம் இருந்து எதையும் பெறவில்லை.

    இதுதொடர்பான வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள், இது இந்த ஆண்டின் மிகவும் ஆடம்பரமான திருமணமா என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளனர்.

    Next Story
    ×