என் மலர்
இந்தியா
- அனிதா மற்றும் அவரின் 5, 4 மற்றும் 3 வயதுடைய மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
- நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அனிதா (27) என்ற பெண் தனது கணவர் முன்சுன் கெவாட் மற்றும் 5, 4 மற்றும் 3 வயதுடைய மூன்று மகள்களுடன் டெல்லியில் வசித்து வந்தார்.
முன்சுன் கெவாட் ஆசாத்பூர் மண்டியில் காய்கறி வியாபாரியாகப் பணியாற்றி வந்தார். அனிதா 2 மாத கர்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 8:07 மணியளவில் காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அனிதா மற்றும் அவரின் 3 மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு பெண்ணின் கணவரான முன்சுன் கெவாட் தலைமறைவாகியுள்ளார். அவரே இந்த கொலையை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கொலை செய்வதற்கு முன்னதாக, மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கணவர் மது அருந்தச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆண் குழந்தை இல்லை என்ற ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் புலனாகி உள்ளது.
கொலை வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான முன்சுன் கெவாட்டை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பாஸ்ட் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.
- கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதை அடுத்து மின்சார ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் சேவைகளையும் தற்போது கூட்டி உள்ளது.
தாம்பரம்- கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த சேவை அளிக்கப்படுகிறது.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணி முதல் 8.43 மணி வரை 7 நிமிட இடைவெளியில் கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம், தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது. மாலையில் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்கு வசதியாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.
மேலும் மின்சார ரெயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. எக்ஸ்பிரஸ் பாதையில் இந்த ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் மின்சார ரெயில்களுடன் 5 பெட்டிகள் கூடுதலாக சேர்க்கும் போது பயணிகள் ஏறி இறங்குவதற்கு நடைமேடையில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.
பாஸ்ட் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் நிலையம் வரை இந்த சோதனை ஓட்டம் நடந்தது.
17 பெட்டிகளுடன் மின்சார ரெயில் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கி பிளாட்பாரம் வசதி உள்ள நிலையங்களில் நிறுத்தி சோதனை செய்தனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மின்சார ரெயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள். ஓரிரு நாட்களில் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
- தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
- ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.
புதுடெல்லி:
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், 'பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என்று ராஜேந்திர பாலாஜி கோரி இருந்தார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.
மேலும் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே போன்று அவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் ஏற்கனவே ஐகோர்ட்டில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் இனிமேல் அவர் மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று வெளிநாடு செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.
- விஜயை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். திமுகவின் மீது கடுமையாகந விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.
இதையடுத்து விஜயை அதிமுக அத்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அவ்வகையில் கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஜயை கடுமையாக தாக்கி பேசினார்.
கோவை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "விஜய் கரூர் செல்கிறார். 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதை கண்டுகொள்ளாமல் சென்னை சென்ற விஜய் திரும்பி வரவே இல்லை.." அவர் உடனே மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டாமா... காப்பாத்தியிருக்க வேண்டாமா... இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
விஜய்யின் பட ரிலீஸ் பிரச்னையின்போது அவர் என் வீட்டில் இருந்தார், நான்தான் அவரை காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து, படத்தை ரிலீஸ் செய்ய உதவினேன்" என்று தெரிவித்தார்.
- பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் தான் அவற்றின் ஆதிக்கத்தை அரசால் தடுக்க முடியவில்லை.
- மக்களைச் சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை தி.மு.க. அரசு நிறுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளின் பசி தீர்க்கும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் விருப்பம் போல உயர்த்தி வரும் நிலையில், அதை தடுக்க வேண்டிய தி.மு.க. அரசு, அதன் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் கொள்கைப்படி தனியார் நிறுவனங்களில் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் தான் அவற்றின் ஆதிக்கத்தை அரசால் தடுக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க உழவர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து, விற்பனையை அதிகரித்தால் பால் சந்தையில் 50 விழுக்காட்டை ஆவின் நிறுவனத்தால் கைப்பற்ற முடியும். அத்தகைய வலிமையான நிலைக்கு ஆவின் உயர்ந்தால் தான் பால் சந்தையில் தனியார் நிறுவனங்களின் விலைக் கொள்ளையை தடுக்க முடியும்.
மக்களைச் சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை தி.மு.க. அரசு நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் பேசி பால்விலை உயர்வை திரும்பப் பெற செய்ய வேண்டும். மக்கள் நலனை அடகு வைத்து விட்டு, தனியார் நிறுவனங்களுக்கு துணை போகும் தி.மு.க.வை மக்கள் தண்டிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.
- சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.
1917இல் முதலாம் உலகப் போர் சமயத்தில், மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு 35,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
பிரிட்டிஷ் அரசுக்கு கடன் கொடுத்த விஷயம் ருதியா குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கான ஆவணங்கள் யாரிடமும் இல்லை. இதனால் 109 ஆண்டுகளாக இந்த விஷயம் கிடைப்பில் இருந்துள்ளது.
ஜம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் ருதியா, தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு பழைய ஆவணங்களையும் உயிலையும் ஆய்வு செய்தபோது, இந்தக் கடனுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் கிடைத்துள்ளன.
முதலாம் உலகப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த 'போர்க் கடன்' வாங்கப்பட்டதாக அந்தப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.
1917-ல் 35,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். அன்றைய தங்கத்தின் விலையோடு ஒப்பிடும்போது, இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.
ஒரு இறையாண்மை கொண்ட நாடு, தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது சர்வதேச சட்டப்படி கட்டாயம் என்ற அடிப்படையில், கடனை திருப்பி கேட்டு பிரிட்டன் அரசுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப ருதியா குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.
ஒரு காலத்தில் சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.
இன்றும் சீஹோர் நகரின் 20 முதல் 30 சதவீத குடியிருப்புகள் இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களில்தான் அமைந்துள்ளன.
தற்போது இவர்கள் விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ளது
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
8ம் வகுப்பு NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நீதித்துறையின் தலைவராக தனது எதிர்ப்பை பதிவு செய்வதாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் இது ஒரு திட்டமிட்ட சதி போலத் தோன்றுவதாகவும் காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதில், "8ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மன்னிப்பு கோரியது. நீதித்துறை ஊழல் பாடத்தை புத்தகத்தில் சேர்ந்தவர் தண்டனையை ஏற்றுக் கொள்வார் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா விளக்கம் அளித்தார்.
பாடத்திட்டம் முழுமையாக மாற்றப்படும் என்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் இனி அந்த பணியில் தொடரமாட்டர் என்றும் துஷார் மேத்தா உறுதி அளித்தார்.
இதையடுத்து நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட NCERT-ன் எட்டாம் வகுப்பு பாடத்திற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
நீதித்துறை ஊழல் என்ற பாடம் மூலம் நீதித்துறை மீது துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் சொட்டுகிறது என்று காட்டமாக தெரிவித்த தலைமை நீதிபதி, பாடப்புத்தகம் தயாரித்தோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.
- பாலிடெக்னிக் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும்.
- 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்கள் 9646 பேருக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு வழங்கப்படும். அதாவது அவர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் பாலிடெக்னிக் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ரூ.5ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்துக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இங்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர். 25 ஆண்கள், 25 பெண்கள் என அவர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரியப்படி வேட்டி சட்டை அணிந்து புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் நடந்த யாகத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதன் பின் திருஆவினன்குடி கோவில், குழந்தை வேலாயுத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன் பின் பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொண்டு அக்னி சட்டி ஏந்தி ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
இதனை உள்ளூர் பக்தர்கள் மிகுந்த வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து இக்குழுவினர் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
- திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது.
- திருச்சியில் திரள்வோம் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம்.
தி.மு.க. முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மார்ச் 9-ல் திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து மிகப் பிரம்மாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட திக்கெட்டும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டப்பேரைவைத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திட வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு , என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி , வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைகள், கழக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-உறுப்பினர்கள் பயிற்சிக் கூட்டம், வெல்லும் தமிழ்ப்பெண்கள் மகளிரணி மாநாடுகள், வீடு வீடாகப் பரப்புரை என அசுர வேகத்தில் நம் கழகம் களப்பணியாற்றி வந்தாலும் கழகத்தலைவர் கூறியது போல திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது.
இந்த மாபெரும் மாநில மாநாட்டில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட மாநகர நகர-ஒன்றிய-பகுதி-பேரூர் வார்டு-கிளைக் கழக செய லாளர்கள்-நிர்வாகிகள் என கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.
சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள், அமைப்பாளர்களும் தங்கள் அணி சார்பில் அனைவரும் முழுமையாக கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இம்மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அனைத்து கழக மாவட்ட செயலாளர்களும் அந்தந்த மாவட்ட ஒன்றிய நகர-பேரூர் அளவில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை, வாகன வசதிகள், செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும் எனவும், வாகன நிறுத்தும் வசதி, போக்கு வரத்து வழித்தட ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து கிளம்பும் வாகன விவரங்களை மார்ச் 1-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோல ஒரு கழக நிர்வாகியும் விடுபடாமல் மாநாட்டில் கலந்து கொள்வதையும், மாண்புமிகு கழகத்தலைவர் உரையை முடிக்கும் வரையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கும் வழிகாட்டி, மாநாட்டு திடலுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுவதை யும் அந்தந்த மாவட்ட செய லாளர்கள் உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகு தான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கரை புரண்டு ஓடும் காவிரியாய் தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம் கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம். ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார்.
- திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் தொடர்ந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கூட்டணியில் சேருவோம் என அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். கடந்த சில தினங்களாக பா.ஜ.க. மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் டாக்டர் ராமதாசிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிர்வாக குழு கூட்டத்தை நடத்தி கூட்டணி சம்பந்தமாக கருத்து கேட்டார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் செல்லலாம் என கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சில உறுப்பினர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது. ஆனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்து விட்டது. அதில் தான் நாம் பயணிக்க போகிறோம். நாம் இலக்கை அடைந்து, லட்சியத்தை வெல்வோம் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று கூட்டணி குறித்து முடிவெடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள் மொழி, எம்.எம்.ஏ.க்கள் ஜி.கே .மணி, அருள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் நாளை கூட்டணி சம்பந்தமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறும் போது, சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார். அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்காமல் சென்றார்.
இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வருகிற 28-ந்தேதிக்குள் கூட்டணி சம்பந்தமாக அறிவிக்கப்படும் என்றார்.
அவரிடம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
- NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ளது
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
8ம் வகுப்பு NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நீதித்துறையின் தலைவராக தனது எதிர்ப்பை பதிவு செய்வதாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் இது ஒரு திட்டமிட்ட சதி போலத் தோன்றுவதாகவும் காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "8ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.






