என் மலர்
நீங்கள் தேடியது "கவுரவ விரிவுரையாளர்கள்"
- 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன.
- மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
சென்னை:
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (24-ந்தேதி) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 2025-26-ம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப் பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று முதல் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் 8.10.2025 ஆகும். மேலும், 21.7.2025-ம் செய்தி அறிவிப்பின்படி, ஏற்கனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும்போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.
தமிழ்நாடு அரசின் நெறி முறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீ டுகளின் அடிப்படையிலும் கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார்.
- வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.
- ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
கல்லூரிகளின் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.20,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு கடந்த 28.1.2019-ம் நாள் ஆணையிட்டது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி கவுரவ விரி வுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டிய தமிழக அரசு, அவர்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.
இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் சமூகநீதியை வழங்கும் வகையில், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்தவும் தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
- அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
- நேர்காணல் முறையை பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் ,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் பணி அனுபவ நேர்காணல் முறையை பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதித் தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வகுப்புகளை புறக்கணித்து 2வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர்.
- 4000 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயலாளர் தகவல்
சென்னை:
அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களை உடனடியாக பணி நியமனம் செய்யவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். வகுப்புகளை புறக்கணித்து 2வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கவுரவ விரிவுரையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் அந்த தகவலை உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் மறுத்து, விளக்கம் அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் உண்மைல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும் தமிழகம் முழுவதும் 4000 உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.






