search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • மாலையில் துளசிக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
    • துளசி இலை விஷங்களை முறிக்கக்கூடிய தன்மை படைத்தது.

    ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் கட்டாயம் இருக்க வேண்டும். துளசி செடியை வைத்து வளர்த்து வழிபட வேண்டும். குளித்து முடித்தபின் தூய நீரும், பாலும் விட்டு துளசியை வளர்க்க வேண்டும். தினமும் வலம் வந்து வழிபட வேண்டும். மாலையில் துளசிக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். விசேஷ நாட்களில் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

    இப்படியெல்லாம் பக்தியுடன் வழிபட்டால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள். உயர்ந்த நிலையை அடைவார்கள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் தாண்டவமாடும். துளசி இலை விஷங்களை முறிக்கக்கூடிய தன்மை படைத்தது. துளசிக்காற்றுப்படும் இடத்தில் விஷ ஜந்துக்களோ, விஷக் காற்றோ இருக்காது என்பது வைத்திய சாஸ்திரம்.

    • கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
    • அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சித்திரை மாத அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சித்திரை மாத அமாவாசையான இன்று (7-ந்தேதி) அதிகாலை சென்னை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்கள் மூலம் மலையடி வாரமான தாணிப்பாறைக்கு வந்து காத்திருந்தனர். காலை 6 மணிக்கு மலைப்பாதை திறக்கப்பட்டது. முன்னதாக பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

     

    சதுரகிரி மலையேற அடிவாரத்தில் திரண்டிருந்த பக்தர்களை காணலாம்.

    சதுரகிரி மலையேற அடிவாரத்தில் திரண்டிருந்த பக்தர்களை காணலாம்.

    மலைப்பாதை மற்றும் கோவில்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக மலைப் பாதைகளிலும் கோவில் பகுதியிலும் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்திருந்தனர்.

    பலர் முடி காணிக்கை செலுத்தினர். காலை 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் 10 மணிக்கே சாமி சரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து இறங்கினர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறையில் இருந்து மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    • 8-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.
    • 12-ந்தேதி திருநெல்வேலி புட்டபுரத்தி அம்மன் உற்சவம்.

    7-ந்தேதி (செவ்வாய்)

    * அமாவாசை.

    * நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சப்தாவர்ணம் சாற்று விழா.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (புதன்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கரி நைவேத்தியம்.

    * திருவரங்கம் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு.

    * காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

     

    9-ந்தேதி (வியாழன்)

    * வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப பல்லக்கில் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வெள்ளி)

    * திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம்.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகம் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (சனி)

    * காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு.

    * சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் உலா.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத உற்சவம்.

    * தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி புட்டபுரத்தி அம்மன் உற்சவம்.

    * சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியிலும், இரவு மேற்கு ரத வீதியிலும் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் வைகாசி விசாச உற்சவம்.

    * காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

    * சிவகாசி விஸ்வநாதர் புஷ்ப சப்பரம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீட்டில் எளிமையாக வழிபட விரும்புபவர்கள் ஸ்ரீ யோக நரசிம்மர் படத்தை வைத்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
    • தயிர் சாதமும், பானகமும் நிவேதனம் செய்து வைத்து வழிபடுவது மிகமிக சிறப்பாகும்.

    பவுமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய் கிரகத்துக்குப் பெயர். செவ்வாய் கிரகத்தின் கிழமையான செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பவுமாஸ்வினி புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று

    செவ்வாய்க்கிழமை பவுமா அஸ்வினி தினமாகும். மிகவும் அரிதான இந்த நாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான விரைவான நன்மைகளைத் தரும். குறிப்பாக கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரமும் ஸ்ரீ நரசிம்மரை தேவதையாகக் கொண்ட செவ்வாய் கிழமையும் ஒன்று சேரும் தினமான இன்று நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

    வீட்டில் எளிமையாக வழிபட விரும்புபவர்கள் இன்று காலை ஸ்ரீ யோக நரசிம்மர் படத்தை வைத்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அப்போது தயிர் சாதமும், பானகமும் நிவேதனம் செய்து வைத்து வழிபடுவது மிகமிக சிறப்பாகும்.

    பூஜை முடிந்ததும் அந்த நிவேதனத்தை சுமார் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குத் தந்து சாப்பிடச் செய்யலாம். மேலும் எப்போதும் ஆத்ம விசாரம் செய்துகொண்டு தியானம் செய்து கொண்டிருக்கும் ஞானிகளை அவரது சமாதியை வணங்கி அனுக்கிரகம் பெறலாம். இதனால் சிறந்த ஞாபக சக்தியும், படிப்பில் அறிவில் முன்னேற்றமும் கிடைக்கும்.

    • இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது.
    • காலை புனித நீராடி விட்டு கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி புண்ணியகால எமதர்ப்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்ய வேண்டும்.

    இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது.நமது பாவங்களை எளிதாக போக்கிக் கொள்ள நம் சாஸ்திரங்களில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் எமதர்ப்பணமும் ஒன்று. இந்த எமதர்ப்பணத்தை கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி திதி நாளில் செய்வது மிகவும் நல்லது.

    இன்று கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி தினமாகும். இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது. இன்று எம தர்ப்பணம் செய்வதால் நாம் பிறந்தது முதல் செய்துள்ள அனைத்து பாவங்களும் விலகும்.

    காலை புனித நீராடி விட்டு கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி புண்ணியகால எமதர்ப்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்ய வேண்டும். எமன் அனைத்து ஜீவனையும் அடக்குபவர். பித்ருக்களுக்கும் தர்மங்களுக்கும் அரசன். விவஸ்வான் என்னும் சூரியனின் மகன், கையில் தண்டத்தைப் பிடித்திருப்பவர், காலனின் வடிவம். பிரேதங்களுக்குத் தலைவன், மரணத்தை அளிப்பவன், பாவங்களை போக்குபவன், கிருதாந்தகனான எமன் எனக்கு மங்களத்தை அளிக்கட்டும்.

    கருப்புமலைக்கு ஒப்பானவரே ஸ்ரீ ருத்ரனின் கோபத்தில் இருந்து தோன்றியவரே! காலத்திற்குத் தகுந்தவாறு தண்டனையை அளிக்க கையில் தண்டத்தைத் தாங்கியவரே! செல்வங்களுக்கு அதிபதியே விவஸ்வானின் மகளான வைவஸ்வத மகாராஜ இவ்வாறு சொல்லி தர்ப்பணம் செய்வதால் அனைத்து நன்மைகளும் கிட்டும். நோய்கள் விலகி ஆயுள் அதிகரிக்கும்.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
    • வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-24 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தசி காலை 11.17 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம் : அசுவினி பிற்பகல் 3.18 மணி வரை பிறகு பரணி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் விழா. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் உற்சவம் ஆரம்பம், வெள்ளி சிம்ம வாகனத்தில் பவனி. உய்யக் கொண்டான் சிறுவயல், பொன்னழகியம்மன் சிறப்பு வழிபாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    மேஷம் - பிரீதி

    ரிஷபம் - நன்மை

    மிதுனம் - தெளிவு

    கடகம் - புகழ்

    சிம்மம் - ஓய்வு

    கன்னி - ஆர்வம்

    துலாம் - திறமை

    விருச்சிகம் - உறுதி

    தனுசு - இன்பம்

    மகரம் - ஆக்கம்

    கும்பம் - உற்சாகம்

    மீனம் - வரவு

    • மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.
    • அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு.

    அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.

    கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.

    நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

    முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு&லட்சுமி, சிவன்&பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    குசேலரின் கதையை படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.

    அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.


    உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை அடுத்து வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.

    அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது. பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.

    இல்லோதருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள்.

    • நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
    • தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது.

    நாம் வாழும் வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அது ஒருவரது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரி, வாஸ்து குறைபாடு உள்ள வீட்டை அறிவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

    நீங்கள் வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் இருந்தால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது, வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும், பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய பண பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால், வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் குடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஒருசில பரிகாரங்களை வீட்டில் செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். இப்போது அந்த பரிகாரங்கள் என்னவென்பதைக் கண்போம்.

    நீங்கள் செடி பிரியர் என்றால், வீட்டில் துளசி செடியை வாங்கி வளர்த்து வாருங்கள். குடியிருக்கும் வீட்டில் துளசி செடியை வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருக்கிறார். அதுவும் இந்த துளசி செடியை வீட்டில் பிரதான வாசலில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், வீட்டின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும்.


    பணப்பையை காலியாக வைத்திருக்காதீர் ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பை அல்லது பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருக்காதீர்கள். அப்படி வைத்தால், அது வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் பணம் வைக்கும் பையானது லட்சுமி தேவி இருக்கும் இடம். இந்த இடத்தை காலியாக வைத்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள். எனவே பணப்பையை காலியாக வைத்திருக்காதீர்கள்.

    ஜோதிடத்தின் படி, தினமும் வீட்டில் சாமி கும்பிடும் போது கற்பூரத்தை ஏற்றுவதால் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது. அதாவது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட்டு, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் நிரம்பிய வீட்டில் வாஸ்து தோஷம் எதுவும் இருக்காது. இதன் விளைவாக எவ்வித பணப் பற்றாக்குறையும் ஏற்படாது. எனவே வீட்டில் பணப் பிரச்சனை வரக்கூடாதெனில், தினமும் கற்பூரத்துடன், 1 கிராம்பை வைத்து ஏற்றி வீடு முழுவதும் அதன் புகையை காட்டுங்கள்.

    உங்கள் வீட்டில் பண பிரச்சனை அதிகமாக உள்ளதா? அப்படியானால் இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் ஒரு வெள்ளி நாணயத்தை வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், புதன் மற்றும் செவ்வாயினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இவ்விரு கிரகங்களின் தோஷங்களானது ஒருவருக்கு நிறைய கஷ்டத்தை தரும். முக்கியமாக பணப் பிரச்சனையால் அவதிப்பட வைக்கும். 

    • கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார்.
    • தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

    திருச்சி:

    கோவிந்தா. கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்க நாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

    இவ்வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 4.30 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


    பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழச்சித்திரைவீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

    சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர். நாளை(7-ந்தேதி) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும். நாளை மறுநாள் (8-ந்தேதி) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் , இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கீழ்த்திருப்பதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
    • சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-23 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திரயோதசி நண்பகல் 1.25 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : ரேவதி மாலை 4.30 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் தேரோட்டம். கீழ்த்திருப்பதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - முயற்சி

    ரிஷபம் - இன்பம்

    மிதுனம் - சுபம்

    கடகம் - சாந்தம்

    சிம்மம் - நலம்

    கன்னி - வெற்றி

    துலாம் - நட்பு

    விருச்சிகம் - உயர்வு

    தனுசு - புகழ்

    மகரம் - போட்டி

    கும்பம் - பெருமை

    மீனம் - ஊக்கம்

    • அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள்.
    • அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம்.

    இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. புதிய வணிகம், தொழில் தொடங்குவதற்கும், தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

    அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பண நெருக்கடி காரணமாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியாத நிலையில் அதற்கு மாற்றாக வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம்.


    தானியங்கள்:

    வெண் கடுகு, அதாவது மஞ்சள் நிற கடுகு, பார்லி போன்ற தானியங்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை வழிபட பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த பொருட்களை அன்றைய தினம் வாங்குவது நல்லது. அரிசி போன்ற தானியங்கள், வளத்தின் அடையாளமாக விளங்கும் பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான காய்கறிகள், புனிதப்பொருளான நெய் போன்றவற்றையும் வாங்கலாம்.

    சோழி:

    அட்சய திருதியை அன்று சோழி வாங்கலாம். லட்சுமி தேவியின் பாதங்களில் சோழிகளை காணிக்கை செலுத்தி வழிபடலாம். மறுநாள் அந்த சோழிகளை சிவப்பு துணியில் பொதிந்து பாதுகாப்பாக வைக்கவும். இது பொருளாதார வளர்ச்சி அடைய உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.


    மண்பானை:

    அட்சய திருதியை நாளில் வீட்டில் மண்பானை இருப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அன்றைய தினம் மண்பானை வாங்கி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

    சங்கு:

    அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் விஷ்ணுவும், லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைவார்கள், வீட்டில் மகிழ்ச்சி தங்குவதும் உறுதி செய்யப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.


    ஸ்ரீசக்கரம்:

    அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வரைபடமும் வாங்கலாம். அதனை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பிடம் உங்கள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

    • இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது.
    • அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களையொட்டி தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் தங்களை விரைவாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறியதையடுத்து காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகளை சோதனை செய்யப்பட்டது. அப்போது பாலித்தீன் கேரிபை, பீடி, சிகரெட், மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என வனத்துறையினர் சோதனை செய்த பின்பு பக்தர்கள் அனுமதித்தனர்.

    இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இன்று காலை வெயில் இல்லாத நிலையில் பக்தர்கள் வேகமாக மலையேறிச் சென்றனர். வெயில் தாக்கம் காரணமாக விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்த நிலையிலே காணப்பட்டது.

    வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை மறுநாள் சித்திரை மாத அமாவாசை தினத்தன்றும் பக்தர்கள் அதிகம் வர வாய்ப்பில்லை என்று வனத்துறையினர் கூறினர். கோவிலுக்கு செல்கின்ற வழியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்க சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    ×