என் மலர்
நீங்கள் தேடியது "sathuragiri temple."
- நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
- பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மழை காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மலைப் பகுதியில் மழை பெய்து திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்படும் என்ப தால், மழை பெய்யும் நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேறிச் சென்று கோவிலில் வழிபடுவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஐப்பசி மாத சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு நாளை (17-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனினும் இப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, பக்தர்கள் மலையேறிச் சென்று கோவிலில் வழிபட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.
- மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதனால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்கு பின் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
6.30 மணியளவில் நுழைவுவாயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.
பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். கடும் வெயிலை தவிர்க்க காலையிலேயே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதில் ஆர்வம் காட்டினர்.
இன்று ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்கா வலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.
ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவியில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (22-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப் பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் மலையேறினர்.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 25-ந் தேதி மதியம் 1.15 வரை அமாவாசை திதி இருப்பதால் 24-ந் தேதி ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. அபினோ குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையையும், வனத்துறை கேட்டில் இருந்து பக்தர்கள் செல்லக்கூடிய பாதையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ்.பி. ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மாலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
- அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாள்தோறும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சென்று வருகின்றனர். மாலை 4 மணிக்குள் திரும்பி வரவேண்டும். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை செய்தி குறிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று (25-ந்தேதி) மற்றும் நாளை (26-ந்தேதி) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நாள்தோறும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த 2-ந் தேதி அனுமதி அளித்தது. எனினும் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் செய்தி மக்களை சென்றடையாததாலும், தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து பக்தர்கள் இன்று மட்டும் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனால் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
- பாப்பனாத்தான் பெருமாள் கோவில் ஆறு, சதுரகிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- பாதுகாப்பு கருதி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாப்பனாத்தான் பெருமாள் கோவில் ஆறு, சதுரகிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து இருப்பதாலும், மாலை நேரங்களில் மழை பெய்வதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்தநிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- 10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது.
- கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
கடல் மட்டத்தில் இருந்து 3000 அடிக்கு மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி உள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் அதிக அளவில் திரளுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை (12-ந்தேதி) முதல் 17-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்குவார்கள் என்பதால் இந்தமுறை ஆடி அமாவாசைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள் என தெரிகிறது. இதையொட்டி வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சதுரகிரி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிகிறது.
- அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
- மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம்-சுந்தர மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் அடர் வனப்பகுதியில் உள்ளது.
இதனால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை 28-ந்தேதி பிரதோஷம் வருவதை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் தாணிப்பாறை கேட்டில் இருந்து மலையேறி சென்று தரிசிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பயணிகள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் கத்தி போன்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
- உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும்.
- வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம்.
மதுரை:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலைக்கு மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும். நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுத்து விட்டனர்.
எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பு வக்கீல் ஆஜராகி, மலைக்கோவிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளன. மூன்று பாதைகளிலும் 3 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும். ஒரு பிரிவினருக்கு கோவிலில் தங்க அனுமதி கொடுத்தால் மற்றவர்களும் நீதிமன்றத்தை அணுகுவார்கள். இதை அனுமதிக்க முடியாது.
வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். அந்த முடிவை வனத்துறை தான் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
- பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
- மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு நடந்து செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதியில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தாலோ, ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பிரதோஷம் மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாலித்தீன் பை, பீடி சிகரெட், மது மற்றும் போதைப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சித்திரை மாத அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு நாளை (5-ந்தேதி) முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
நாளை சித்திரை மாத பிரதோஷம் என்பதால் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பழம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வருகிற 7-ந்தேதி சித்திரை மாத அமாவாசை அன்று சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் நடைபெற உள்ளது.
பிரதோஷம் மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பாலித்தீன் பை, பீடி சிகரெட், மது மற்றும் போதைப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவக் குழுவினர் இந்த 4 நாட்களும் தாணிப்பாறை வனத்துறை கேட்பகுதியில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
- கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்திரை மாத அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை மாத அமாவாசையான இன்று (7-ந்தேதி) அதிகாலை சென்னை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்கள் மூலம் மலையடி வாரமான தாணிப்பாறைக்கு வந்து காத்திருந்தனர். காலை 6 மணிக்கு மலைப்பாதை திறக்கப்பட்டது. முன்னதாக பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சதுரகிரி மலையேற அடிவாரத்தில் திரண்டிருந்த பக்தர்களை காணலாம்.
மலைப்பாதை மற்றும் கோவில்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக மலைப் பாதைகளிலும் கோவில் பகுதியிலும் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்திருந்தனர்.
பலர் முடி காணிக்கை செலுத்தினர். காலை 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் 10 மணிக்கே சாமி சரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து இறங்கினர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறையில் இருந்து மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.






