search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்சய திருதியை"

    • தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.
    • வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

    அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.

    செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார்.

    இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது.

    இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது.

    அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

    கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்.

    ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

    சாலக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத்திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

    தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.

    தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.

    • பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
    • மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

    அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.

    ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

    இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள்) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.

    இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்,

    ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும்,

    வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ''அட்சய திருதியை யாகவும்'' (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது.

    சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.

    வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன.

    இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது.

    பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.

    மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

    விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர்.

    இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.

    • அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.
    • வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

    அட்சய திருதியை என்பது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.

    அது வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

    அட்சயம் என்றால் குறைவற்றது, வளர்வது எனப்பொருள். வைகாசி மாதம் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று அழைப்படுகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானங்கள் உதவிகள் ஆகிய அனைத்தும் அட்சயமாக வளர்ந்து பலனைத் தரும்.

    குறிப்பாக ஒரு சொம்பு அல்லது பாத்திரம் நிறைய தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

    இதற்கு தர்ம கட தானம் எனப்பெயர்.

    புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்காகவும், பித்ருக்களின் திருப்திக்காகவும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை தானம் செய்கிறேன் என சங்கல்பம் செய்து கொண்டு ஒரு சொம்பு அல்லது பாத்திரத்தில் ஏலக்காய் முதலிய வாசனை திரவியங்களுடன் கூடிய சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதை ஏழைகளுக்கு தந்துவிட வேண்டும்.

    அட்சய திருதியை தினத்தன்று வீட்டின் வாசலில் தண்ணீர் பந்தல் அமைத்தோ, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்தோ, அனைவருக்கும் குடிக்க தண்ணீர் தருவது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.

    பசியுடன் கூடிய அனைவருக்கும் அன்னதானம், தண்ணீர் தானம் செய்ய வேண்டும்.

    இதில் ஜாதி, மத, இன, கல்வி, பாகுபாடு பார்க்கக் கூடாது.

    தாகத்தோடு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவது புண்ணியத்தை தந்து, நமது விருப்பத்தை நிறைவேற்றும்.

    அது இறந்த முன்னோர்களுக்கு உண்டாகும் தாகத்தையும் தனித்து அவர்களுக்கும் நல்ல கதியை உண்டாக்கும்.

    மேலும் விசிறி, குடை, செருப்பு, பானகம், நீர் மோர் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானமாக அளிக்கலாம்.

    ஆகவே அட்சய திருதியை தினத்தன்று வெயிலில் தவிக்கும் 10 பேருக்காவது குடிக்க தண்ணீர் கொடுப்பதும்,

    காய்ந்து போன செடிகள், கொடிகள், மரங்களுக்கு தண்ணீர் விடுவதும் மிகவும் சிறந்தது.

    அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜை, ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்ப்பணம் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானம் உதவி, ஆகிய ஆறும் அட்சயமாக பலனைத்தரும்.

    இதனால் கிடைக்கும் பலன் நமக்கும் நம்மைத் தொடர்ந்து நம் சந்ததிகளுக்கும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் குறைவின்றி அட்சயமாக கிடைக்கும்.

    • மக்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கிச் சென்றனர்.
    • அதிகாலை முதல் இரவு வரை விற்பனை களைகட்டியது.

    சென்னை :

    வளங்களையும், நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை நாளில் வாங்கும் பொருள் அளவில்லாமல் சேரும் என்பது நம்பிக்கை. அதனாலேயே அட்சய திருதியை நாளன்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள், வீடு மனைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்குவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான அட்சய திருதியை நேற்று முன்தினம் காலை 7.49 மணிக்கு தொடங்கி நேற்று காலை 7.47 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கிச் சென்றனர். அதிகாலை முதல் இரவு வரை விற்பனை களைகட்டியது.

    சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான நகைக்கடைகளில் நல்ல விற்பனை நேற்று நடந்தது. தங்கத்தை போலவே வெள்ளி விற்பனையும் ஜோராக நடந்தது.

    அட்சய திருதியையொட்டி கடந்த ஆண்டை காட்டிலும் தங்க நகைகள் விற்பனை கூடுதலாக நடந்துள்ளது.

    இதுகுறித்து சென்னை தங்கம்-வெள்ளி நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறியதாவது:-

    3 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் நல்ல வியாபாரம் நடந்திருக்கிறது. மக்கள் ஊதிய ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும் நகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றிருக்கிறார்கள். நகைகள் முன்பதிவும் ஜோராக நடந்துள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று 18 டன் அளவில், அதாவது ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனை நடந்தது. இந்த ஆண்டு நகைகள் விற்பனை 20 சதவீதம் கூடுதலாக நடந்துள்ளது. முன்பதிவும் 25 சதவீதம் கூடுதலாகவே நடந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் விற்பனை என்பதால், இந்த ஆண்டு அட்சய திருதியை நகை விற்பனை ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விற்பனையான தங்க நகைகள் விவரம் குறித்து இன்றோ (திங்கட்கிழமை), நாளையோ (செவ்வாய்க்கிழமை) வெளிவர வாய்ப்புள்ளது.

    • அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
    • கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை சிறப்பாக உள்ளது.

    கோவை:

    பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அட்சயதிருதியை 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்றும், இன்று அட்சய திருதியை கொண்டாடப்பட்டது.

    அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளான நேற்றும், இன்றும் கோவையில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளிலும் தள்ளுபடி விற்பனை செய்யப்பட்து. நகைக்கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு அவர்கள் தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து, அதனை அணிந்து பார்த்து வாங்கி சென்றனர்.

    கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் 60 கிலோ எடை கொண்ட ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 2 நாட்கள் அட்சய திருதியை கொண்டாடப்படுவதாகவும், வியாபாரம் சிறப்பாக உள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை சிறப்பாக உள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனையானது.

    விலை அதிகரிப்பு காரணமாக மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான நகைகளை வாங்கவே மக்கள் ஆர்வம் காட்டினர். வளையல், பிரேஸ்லெட், தோடு, தொங்கல் உள்ளிட்ட நகைகள் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டன.

    கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் ரூ.36 கோடி மதிப்பிலான 60 கிலோ தங்க நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால் இந்த ஆண்டு மொத்த விற்பனை 100 கிலோவுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தங்க நகை கடையில் நகை வாங்க வந்த மக்கள் கூறியதாவது:-

    அட்சய திருதியை தினத்தில் விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    தங்கத்தில் முதலீடு செய்வது என்றும் பயன்தரக்கூடியது.

    தங்கம் சிறந்த முதலீடாகவே காலம் காலமாக கருதப்படுகிறது. அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவதால் தங்க நகை சேமிப்புக்கு வழிவகை செய்வதாகவே கருதுகிறோம்.

    எங்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப அரை கிராம், ஒரு கிராம் தங்க நகைகளை வாங்கி உள்ளோம். விலை அதிகம் என்ற போதும் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் நகைகள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மக்கள் ஆன்லைனில் தங்கத்தையும் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
    • இந்த சுபநிகழ்ச்சியில் தங்கம் வாங்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்து நாட்காட்டியில், அட்சய திரிதியை பண்டிகை மிகவும் ஆடம்பரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இது ஜைன மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த நாள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவரும் கட்டவிழ்த்துவிடும் பொதுவான நம்பிக்கை ஒன்று உள்ளது. இந்த புனித நாளில் தங்கம் அல்லது வெள்ளியை வாங்குவது அல்லது பரிசளிப்பது உங்கள் செல்வத்தை பெருக்க உதவுகிறது மற்றும் நித்திய செழிப்பை உறுதி செய்கிறது என்பது பொதுவான நம்பிக்கை. இந்த பண்டிகையை நம்புபவர்கள் இந்த நாளில் தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்வதற்கு இதுவே காரணம்.

    வெவ்வேறு குடும்பங்கள் தங்கம் அல்லது வெள்ளியில் வெவ்வேறு வழிகளில் முதலீடு செய்கின்றன. சிலர் உருகிய தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பதை விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் எதிர்காலத்தில் தேவைக்கேற்ப அதை அவர்கள் விரும்பும் வழியில் பயன்படுத்தலாம். இன்னும் சிலர் மென்மையான காதணி அல்லது வளையல் போன்ற சிறிய நுணுக்கமான நகைகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். முழு குடும்பமும் நகைக் கடைக்குச் சென்று, தங்க நகைகளை தேர்வுசெய்வது என்று இந்த அக்சய திருதியை நாளில் ஒரு முழு திட்டமிடப்பட்ட பயணமாக இருக்கும்.

    இருப்பினும், மிகவும் சுவாரஸ்யமாக, காலம் மாறிவிட்டதால், மக்கள் ஆன்லைனில் தங்கத்தையும் வாங்கத் தொடங்கியுள்ளனர்! தற்போது ஏராளமான தங்க நகைகள் ஆன்லைன் விற்பனையாளர்கள் தங்கள் சொந்த இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். தேவை அதிகரித்துள்ளதால் விற்பனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்த சுபநிகழ்ச்சியில் குடும்பங்கள் தங்கம் வாங்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிலர் இன்னும் பழைய பாரம்பரிய முறையை கடைப்பிடிக்க விரும்புகிறார்கள், சில குடும்பங்கள் ஆன்லைனில் வாங்குவதற்கு மாறிவிட்டன.

    இந்த நன்னாளில் எந்தெந்த வகை நகைகளை வாங்கலாம் என்று பார்ப்போம்.

    வளையல்கள் மற்றும் பிரேஸ்லெட்கள்

    மெல்லிய வளையல்கள்மற்றும் பிரேஸ்லெட்கள் மிகவும் நவீனமானவை, ஸ்டைலானவை. வீட்டில் ஒரு பண்டிகை இருக்கும் போது, நீங்கள் குறைந்த தோற்றம் மற்றும் அதிக எடை இல்லாத ஒன்றை இலக்காகக் கொண்டால், உங்கள் இந்திய உடைகளுடன் இவற்றை எளிதாக இணைக்க முடியும். ஒரு பார்ட்டி இருந்தால், நீங்கள் காக்டெய்ல் கவுன் அல்லது பார்ட்டி டிரஸ் அணிய திட்டமிட்டால், அதுனுடனும் இந்த பிரேஸ்லெட்கள் நன்றாக இணைகிறது. நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அந்த உடைகளிலும் சிறப்பாகச் செயல்படும்.வளையல்கள்மற்றும் பிரேஸ்லெட்கள் மிகவும் புதுப்பாணியானவை, நேர்த்தியானவை மற்றும் எந்தவொரு சாதாரண ஆடையையும் மிகவும் நவநாகரீகமாகவும் ஸ்டைலாகவும் மாற்றும்.

    காதணிகள்

    அனைத்து வயதினராலும் விரும்பப்படும் இந்திய நகைகளின் மிகவும் பிரபலமானது காதணிகள், அது எந்த ஆடையையும் ஒளிரச் செய்யும். ஜிமிக்கிகள், ஸ்டுட்கள், வளையங்கள் மற்றும் டிராப் டவுன்கள் போன்ற பல தங்கக் காதணி வடிவமைப்புகள் உள்ளன. நீங்கள் விருந்துக்குச் செல்லும் காக்டெய்ல் உடை அணிந்திருந்தால், அதனுடன் நீண்ட தொங்கும் காதணி அதிசயங்களைச் செய்து, உங்கள் முழு தோற்றத்தையும் மிகவும் அழகாக மாற்றும். நீங்கள் உயர் கழுத்து ரவிக்கையுடன் புடவையை அணிந்திருந்தால், ஜிமிக்கிகள் உங்கள் முகத்தில் ஒளிரும் என்பதால், முழு தோற்றத்தையும் உயர்த்தும். நீங்கள் குறைந்த கழுத்து ஆடையை அணிந்து, கனமான நெக்லஸுடன் இணைத்தால், ஒரு எளிய ஜோடி ஸ்டுட்கள் முழு தோற்றத்தையும் பூர்த்திசெய்து உங்களை தேவதையாய் மாற்றும்.

    மோதிரங்கள்

    குளிர்காலத்தில் நம்மில் பெரும்பாலோர் எதிர்கொள்ளும் குழப்பம் என்னவென்றால், ஆமை கழுத்து அல்லது ஸ்வெட்டரில் எப்படி நகைகளை ஸ்டைல் செய்வது என்பதுதான். அப்போதுதான் மோதிரம் மீட்புக்கு வருகிறது! மெல்லிய தங்க மோதிரங்களின் அடுக்கானது, முழு தோற்றத்தையும் மிகவும் அழகாக மாற்றுகிறது. அவை ஸ்டைல் செய்வதற்கு மிகவும் எளிதானது, மிகவும் அழகாக இருக்கும் மற்றும் எந்த அலங்காரத்திற்கும் புதுமையான அழகை சேர்க்கின்றன. குளிர்கால ஆடைகளுடன் மட்டுமல்லாமல், உங்களின் காக்டெய்ல் உடை, உங்கள் உறவினரின் திருமணத்திற்கு நீங்கள் கடைசியாக அணிந்திருந்த இந்திய ஆடைகள் அல்லது நண்பர்களுடன் சாதாரணமாக ஒரு நாள் பொழுது போகும் எளிய அன்றாட உடைகள் ஆகியவற்றிற்கும் மோதிரங்கள் அழகாக இருக்கும்.

    • அட்சய திருதியை அன்று நகை தான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
    • நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும், அது இரட்டிப்பாகும் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும்.

    இன்று தங்க நகை வாங்க முடியாதவர்களால், வாங்க வேண்டிய முக்கியமான இந்த 2 பொருட்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

    மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் இந்த 2 பொருளை அட்சய திருதியை நாளில் வாங்கினால் தன, தானியம் மட்டுமல்லாமல் ஆடை, ஆபரண சேர்க்கையும் பெருகும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே நகை வாங்க முடியவில்லையே என்கிற கவலையை விட்டுவிட்டு மறக்காமல் இந்த இரண்டு பொருளை மட்டும் காசு கொடுத்து நாளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    அட்சய திருதியை அன்று நகை கடைகளில் கூட்டம் அலை மோதுவதை பார்த்தாலே நமக்கு ஆச்சரியமாக இருக்கும். தங்கம் விற்கும் விலைக்கு நகை கடைகளில் எப்படித் தான் இவர்கள் சென்று நகையை வாங்குகின்றனர்? என்று வெளியிலிருந்து அங்கலாய்ப்பவர்களும் உண்டு. இப்படியானவர்களுக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்கிற ஏக்கத்தை துடைக்கும் இந்த இரண்டு பொருள் ரொம்பவே சக்தி நிறைந்தது.

    மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு மற்றும் குண்டு மஞ்சள் அந்த 2 பொருட்கள் ஆகும். முந்தைய காலங்களில் குண்டு மஞ்சளை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இன்று கடைகளில் விற்கும் பவுடரை பயன்படுத்தி கொள்கின்றோம். ஆனால் இந்த குண்டு மஞ்சளுக்கு நிறையவே விசேஷமான சக்திகள் உண்டு. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு குண்டு மஞ்சள் கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும் என்கிற சாஸ்திர குறிப்புகள் உண்டு.

    பணம் சம்பாதிப்பதில் இருக்கும் தடைகளை அகற்றி, நம்மை மேலும் மேலும் முன்னேற வைக்கக்கூடிய சக்தி குண்டு மஞ்சளுக்கு உண்டு. எனவே வீட்டில் எப்பொழுதும் குண்டு மஞ்சள் பூஜை அறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம். அட்சய திருதியை அன்று புதிதாக கடைக்கு சென்று உங்கள் கைகளால் கல் உப்பு வாங்கி வந்து உப்பு ஜாடியில் நிரப்பி வைக்க வேண்டும். மீதமிருக்கும் உப்பை ஒரு செம்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் கொண்டு போய் வையுங்கள்.

    அதே போல குண்டு மஞ்சளையும் உங்களால், உங்கள் தேவைக்கு ஏற்ப காசு கொடுத்து கடையில் அன்றைய தினம் சென்று புதிதாக வாங்கி வந்து இதே போல வேறொரு பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் வைக்க வேண்டும். கல் உப்பு மற்றும் குண்டு மஞ்சள் நிரம்பிய இந்த இரண்டு பாத்திரங்களையும் பூஜை அறையில் வைத்த பின்பு மகாலக்ஷ்மியை மனதார வழிபட வேண்டும். இவ்வாறு செய்ய தனம், தான்யம் மட்டுமல்லாமல் ஆடை, ஆபரணம், சொத்து சேர்க்கையும் ஏற்படும்.

    பொதுவாகவே அட்சய திருதியை அன்று நகை தான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும், அது இரட்டிப்பாகும் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும். எனவே உங்களுக்கு எந்த பொருட்கள் பல்கிப் பெருக வேண்டுமோ, அந்த பொருட்களை கடைக்கு சென்று நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதெல்லாம் ஒரு சாஸ்திரமே அன்றி இதற்காக ஏக்கம் கொள்ளவோ, வருத்தப்படவும் ஏதுமில்லை.

    • இந்த நாள் பல முக்கியமான சம்பவங்களைக் குறிக்கிறது.
    • இந்த நாளில் அன்னபூரணி தேவி பிறந்தாள்.

    அட்சய திருதியை நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் தொடங்கும் எதுவும் எப்போதும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாள் நல்ல அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் அதிர்ஷ்ட ஆதாயங்களின் அடையாளமாகும்.

    அட்சய திருதியை எப்போது கொண்டாடப்படுகிறது?

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாவது நாளில் அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இது ஏப்ரல்-மே மாதங்களில் வருகிறது. இந்த நாளில்தான் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் தங்கள் கிரகங்களில் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நாள் 'அகா தீஜ்' என்றும் அழைக்கப்படுகிறது.

    அட்சய திருதியை வரலாறு

    புராணங்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் படி, இந்த நாள் பல முக்கியமான சம்பவங்களைக் குறிக்கிறது.

    * விநாயகப் பெருமானும் வேத வியாசரும் இதிகாசமான மகாபாரதத்தை இந்த நாளில்தான் எழுதினார்கள்.

    * இந்த நாள் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

    * இந்த நாளில் அன்னபூரணி தேவி பிறந்தாள்.

    * இந்த நாளில், கிருஷ்ணர் தனது உதவிக்காக வந்த தனது ஏழை நண்பரான சுதாமாவுக்கு செல்வத்தையும் பண ஆதாயங்களையும் வழங்கினார்.

    * மகாபாரதத்தின்படி, இந்த நாளில் கிருஷ்ணர் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்களுக்கு 'அக்ஷய பாத்திரத்தை' வழங்கினார். அவர்களை ஒருபோதும் பசியடையச் செய்யாத வரம்பற்ற அளவிலான உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் இந்தக் கிண்ணத்தை அவர்களுக்கு அருளினார்.

    * இந்த நாளில் கங்கை நதி வானத்திலிருந்து பூமியில் இறங்கியது.

    * இந்த நாளில்தான் குபேரர் லட்சுமி தேவியை வழிபட்டார், இதனால் கடவுளின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.

    * சமண மதத்தில் இந்த நாள் அவர்களின் முதல் கடவுளான ஆதிநாதரை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

    அட்சய திருதியையின் போது சடங்குகள்

    விஷ்ணு பக்தர்கள் இந்நாளில் விரதம் இருந்து கடவுளை வழிபடுகின்றனர். பின்னர், ஏழைகளுக்கு அரிசி, உப்பு, நெய், காய்கறிகள், பழங்கள், ஆடைகள் வழங்கி தொண்டு செய்யப்படுகிறது. விஷ்ணுவின் அடையாளமாக துளசி நீர் சுற்றிலும் தெளிக்கப்படுகிறது.

    கிழக்கு இந்தியாவில், இந்த நாள் வரவிருக்கும் அறுவடை காலத்திற்கான முதல் உழவு நாளாகத் தொடங்குகிறது. மேலும், தொழிலதிபர்களுக்கு, அடுத்த நிதியாண்டுக்கான புதிய தணிக்கைப் புத்தகத்தைத் தொடங்கும் முன், விநாயகப் பெருமானையும், லட்சுமி தேவியையும் வழிபடுகின்றனர். இது 'ஹல்கத்தா' என்று அழைக்கப்படுகிறது.

    இந்நாளில் ஏராளமானோர் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குகின்றனர். தங்கம் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அடையாளமாக இருப்பதால், இந்த நாளில் இதை வாங்குவது புனிதமாக கருதப்படுகிறது.

    இந்த நாளில் புதிய தொழில் முயற்சிகள், கட்டுமானப் பணிகள் இந்நாளில் தொடங்கும்.

    மற்ற சடங்குகளில் கங்கையில் புனித நீராடுதல், புனித நெருப்பில் பார்லியை சமர்ப்பித்தல் மற்றும் இந்த நாளில் நன்கொடைகள் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

    ஜைனர்கள் தங்களின் ஒரு வருட தபஸ்யை இந்நாளில் முடித்து, கரும்புச்சாறு அருந்தி வழிபாட்டை முடிக்கின்றனர்.

    ஆன்மீக நடவடிக்கைகள், தியானம் மற்றும் புனித மந்திரங்களை உச்சரிப்பது எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை உறுதிப்படுத்த முக்கியமாக கருதப்படுகிறது.

    பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் இந்த நாளில் சந்தனத்தால் கடவுளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால், அந்த நபர் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவார் என்று நம்பப்படுகிறது.

    • சென்னையில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.
    • வாடிக்யைாளர்களும் காலையிலேயே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்க தொடங்கினார்கள்.

    சென்னை:

    அட்சய திருதியை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம்தான். அட்சய திருதியை என்பது மங்களகரமான தொடக்கத்திற்கு உகந்த நாள்.

    ஆனால் அதையும் தாண்டி தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.

    ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக சிலர் தங்க நாணயங்களை வாங்குகிறார்கள். நகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்குகிறார்கள்.

    இந்த ஆண்டில் திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. சூரிய உதய நேரத்தில் உள்ள திதியே அந்த நாளின் திதியாக கருதப்படும். இதன் அடிப்படையில் பார்த்தால் நாளை (23-ந்தேதி)தான் அட்சய திருதியை நாளாக கருதப்படுகிறது.

    ஆனால் நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை மட்டுமே திருதியை திதி உள்ளது. அதே நேரத்தில் இன்று காலை 7.49 மணிக்கே திருதியை திதி தொடங்கி விடுவதால் இன்றும் அடசய திருதியை நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த ஆண்டு இன்றும், நாளையும் என 2 நாட்கள் காலையில் திருதியை நாளாக கணக்கிடப்படுகிறது.

    இன்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்பதால் இன்று காலையிலேயே ஏராளமானோர் நகைக் கடைகளில் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கினார்கள்.

    ஆனால் அந்த நேரத்தில்தான் தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. நாள் முழுவதும் தங்கம் வாங்கலாம்.

    தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பு, மஞ்சள், மல்லிகைப்பூ மற்றும் மங்கள பொருட்களை வாங்கி வீட்டில் உள்ள சாமி படத்தின் முன்பு வைத்து பூஜை செய்து வழிபடலாம். தங்கமோ, மங்கள பொருளோ எதுவானாலும் சாமி படத்துக்கு முன்பு வைத்து வழிபட்ட பிறகு அன்றைய நாள் முழுவதும் அந்த பொருளை அங்கேயே வைத்து விட வேண்டும் மறுநாள் அந்த பொருட்களை எடுத்து நாம் பயன்படுத்தலாம்.

    சென்னையில் அட்சய திருதியை விற்பனை இன்று காலையிலேயே தொடங்கியது. இதையடுத்து சென்னையில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. வாடிக்யைாளர்களும் காலையிலேயே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்க தொடங்கினார்கள். இதனால் சென்னையில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் இன்று காலையிலேயே வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. தங்க நாணயம் வாங்க வந்தவர்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும் நகை வாங்க வந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு பிடித்த டிசைன்களில் நகைகளை வாங்கினார்கள்.

    இதுகுறித்து சென்னையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு அட்சய திருதியை இன்றும், நாளையும் என 2 நாட்கள் வருவதால் இன்று காலை 6 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டு நகை விற்பனை தொடங்கியது. காலை முதலே கூட்டம் அமோகமாக உள்ளது.

    வாடிக்கையாளர்களை கவருவதற்காக நகைக்கடைகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி சில நகைக்கடைகளில் தங்க நகைகளுக்கு பவுனுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    பெரும்பாலான நகைக்கடைகள் ஒரு மாதத்துக்கு முன்பே அட்சய திருதியை விற்பனைக்கான நகை முன்பதிவை தொடங்கின. அப்படி ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இன்று கடைகளுக்கு வந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.

    மேலும் கடைசி நேர நெருக்கடியை தவிர்ப்பதற்காக பலர் ஏற்கனவே சென்று நகைகளை தேர்வு செய்து வைத்திருந்தனர். அவர்களும் இன்று நகைக்கடைக்கு சென்று தாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை பணம் கொடுத்து வாங்கிச் சென்றனர்.

    ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு அன்றைய விலையிலேயே தங்க நகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேரம் செல்லச் செல்ல கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது.

    இன்று இரவு முழுவதும் அட்சய திருதியை உள்ளதால் இன்று இரவு வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கும் வரை கடைகள் திறந்திருக்கும். விற்பனை நேரமும் அதிகரிக்கப்படும். மேலும் நாளை (23-ந்தேதி) காலை 6 மணிக்கு மீண்டும் நகைக்கடகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெறும்.

    நாளையும் இரவில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை பொறுத்து விற்பனை நேரம் நீட்டிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
    • குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    அட்சய திருதியை யையொட்டி குழந்தை திருமண ங்கள் நடைபெறு வதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினீத் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரும் 22 ம் தேதி அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குழந்தை திருமணங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், அனைத்து மகளிர் போலீசார், சைல்டு லைன், ஹிந்து அறநிலையத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்கள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×