என் மலர்
நீங்கள் தேடியது "ராசிபலன்"
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி வரும் காட்சி.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-14 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி நள்ளிரவு 12.54 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : மிருகசீரிஷம் நண்பகல் 12.34 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம், ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி வரும் காட்சி. திருக்கச்சிநம்பி திருநட்சத்திர வைபவம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடியில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-பரிசு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-அனுகூலம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-உயர்வு
தனுசு- மேன்மை
மகரம்-உதவி
கும்பம்-லாபம்
மீனம்-புகழ்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
ரிஷபம்
சிக்கல்கள் விலகி சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். கட்டிய வீட்டைப் பராமரிக்கும் யோகம் உண்டு.
மிதுனம்
உற்சாகமாகப் பணிபுரியும் நாள். பிறர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
கடகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும்.
சிம்மம்
ஆதாயம் தரும் தகவல்களில் அக்கறை காட்டும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பங்குதாரர்களால் தொழில் வளர்ச்சி கூடும்.
கன்னி
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நடைபெறாது என நினைத்த காரியம் ஒன்று நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
துலாம்
மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தன லாபம் இல்லம் தேடி வரும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.
விருச்சிகம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டாம். உடல் நலனில் தொந்தரவு வரலாம்.
தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் சந்திப்பீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு உதவி செய்வர்.
மகரம்
யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட வெற்றி கிடைக்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்
பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.
மீனம்
நிதி நிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் புலி வாகனத்தில் பவனி.
- காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-13 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி பின்னிரவு 3.06 வரை பிறகு தசமி
நட்சத்திரம் : ரோகிணி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி 9.00 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்
கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் புலி வாகனத்தில் பவனி. திருவொற்றியூர், திருவெண்காடு, விருத்தாசலம் தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி. கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணிப் பெருமான் கருட வாகனத்தில புறப்பாடு. மருதமலை ஸ்ரீ முருகப் பெருமான் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சுத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்.
பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் தலங்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குழு வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-புகழ்
மிதுனம்-ஆசை
கடகம்-நேர்மை
சிம்மம்-நற்செய்தி
கன்னி-நன்மை
துலாம்- உயர்வு
விருச்சிகம்-லாபம்
தனுசு- வரவு
மகரம்-சிறப்பு
கும்பம்-வெற்றி
மீனம்-உழைப்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
குழப்பங்கள் தீரும் நாள். உதிரி வருமானம் உண்டு. மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் செய்வீர்கள். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.
ரிஷபம்
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்திப்பீர்கள்.
மிதுனம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
கடகம்
அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சி கைகூடும்.
சிம்மம்
போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வர். அரசாங்க வேலை வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கன்னி
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு பிற இனத்தாரின் உதவி கிடைக்கும். இடம், வாங்கும் யோகம் உண்டு.
துலாம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கையிருப்பு கரைகிறதே என்று கவலைப்படுவீர்கள். கூட்டாளிகளால் தொல்லை உண்டு.
விருச்சிகம்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். காலை நேரத்திலேயே காது இனிக்கும் செய்தி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
தனுசு
திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும் நாள். நீங்கள் தேடி செல்ல நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்
யோகமான நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். தன வரவு தாராளமாக வந்து சேரும். அலுவலகத்தில் மரியாதை உயரும்.
கும்பம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளமிடும் நாள். அன்பு நண்பர்களின ஆதரவு பெருகும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மீனம்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பண வரவு திருப்தி தரும். விவாகப் பேச்சுகள் முடிவடையும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
- வளர்பிறை அஷ்டமி.
- ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி காலை 7.49 மணி வரை பிறகு அஷ்டமி மறுநாள்
விடியற்காலை 4.10 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : கார்த்திகை பிற்பகல் 3.47 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
இன்று வளர்பிறை அஷ்டமி. வேலூர் கோட்டை துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கை கோவில்களில் காலை அபிஷேகம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம், திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை, திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-நிம்மதி
மிதுனம்-வெற்றி
கடகம்-ஆசை
சிம்மம்-செலவு
கன்னி-சுகம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-அமைதி
தனுசு- ஆதரவு
மகரம்-வரவு
கும்பம்-சுபம்
மீனம்-முயற்சி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். அன்னிய தேச பயணம் எண்ணியபடி வரலாம். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
ரிஷபம்
குடும்பச்சுமை கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
கடகம்
எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
சிம்மம்
தடைகள் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்தி வந்துசேரும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.
கன்னி
வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார நிலை உயரும்.
துலாம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடைபெறும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.
விருச்சிகம்
பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். நண்பர்களின் ஒத்து ழைப்போடு நல்ல காரியம் நடைபெறும் அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
தனுசு
பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள். திருமண வாய்ப்பு கைகூடிவரும்.
மகரம்
சுபவிரயம் ஏற்படும் நாள். பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண்பீர்கள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும்.
கும்பம்
உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
மீனம்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு நன்மை தரும். தொலைபேசி வழியில் தனவரவு தரும் செய்திகள் வந்து சேரும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
வாக்குவாதங்களால் வாட்டம் உருவாகும் நாள். வரவை விட இருமடங்கு செலவாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள்.
ரிஷபம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். கடினமான வேலைகளைக்கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
மிதுனம்
நண்பர்களால் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களைவிட்டு விலகுவர். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
சிம்மம்
யோகமான நாள். அன்பு நண்பர்கள் அருகில் இருந்து உதவி செய்வர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
கன்னி
அதிக விரயங்களால் அமைதி குறையும் நாள். கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
துலாம்
எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். இளைய சகோதர வகையில் இனிய செய்தி உண்டு. உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பற்றி சிந்திப்பீர்கள்.
விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாள் எதிர்பார்ப்பும் நிறைவேறும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
தனுசு
மனதில் தெளிவு பிறக்கும் நாள். பிறருக்காக வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும்.
மகரம்
மனதில் தெளிவு பிறக்கும் நாள். சுபச்செலவுகள் உண்டு. வரன்கள் முடிவாகும். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கும்பம்
வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வரவை விட செலவு கூடும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் சுபச்செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர்.
மீனம்
யோகமான நாள். எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
- கார்த்திகை விரதம்.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-11 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி காலை 10.08 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : பரணி மாலை 5.25 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று கார்த்திகை விரதம், சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம்
இன்று கார்த்திகை விரதம். திருவொற்றியூர், திருவெண்காடு, விருத்தாசலம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருவீதிஉலா. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பிரணவ உபதேசம் அருளிய காட்சி. கும்பகோணம் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள் சந்திர பிரபையில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-அமைதி
கடகம்-போட்டி
சிம்மம்-ஆதரவு
கன்னி-உற்சாகம்
துலாம்- நட்பு
விருச்சிகம்-பெருமை
தனுசு- ஆக்கம்
மகரம்-புகழ்
கும்பம்-அனுகூலம்
மீனம்-பக்தி
- ரிஷபம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம்.
- மிதுனம் பாக்கிய பலம் அதிகரிக்கும் வாரம்.
மேஷம்
அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். பண வரவு சிறப்பாக இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள், இன்னல்கள் மறையும். எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். குடும்ப குழப்பங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகி மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகமாகும்.
சகோதர, சகோதரிகளின் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை பலன் தரும். சிலருக்கு வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும். திருமண முயற்சி வெற்றி தரும். புதிய வீடு வாகன யோகம் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாழக்கிழமை வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபடவும்.
ரிஷபம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு செவ்வாயின் 4-ம் பார்வையும் சனியின் 3ம் பார்வையும் உள்ளது. இரு அசுபகிரகங்களின் பார்வை ராசிக்கு உள்ளதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களைக் எளிதாக சாதிப்பீர்கள். புதிய தொழில் துவங்க ஏற்ற காலம். அரியர்ஸ் ஓவர் டைம் ஊதியம் இப்பொழுது கிடைக்கும்.
சிலருக்கு வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திருமணம், குழந்தை பேறில் நிலவிய தடைகள் அகலும். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகத்திற்கு வந்து செல்வார். தாய் வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். திருமணத்திற்கான வரன்கள் தேடி வரும். வாராகி அம்மனை வழிபடவும்.
மிதுனம்
பாக்கிய பலம் அதிகரிக்கும் வாரம். இந்த வாரத்தில் ராசி அதிபதி புதன் வக்கிரகதியில் செல்ல இருக்கிறார். எனினும் ராசியில் நிற்கும் குருவின் பலத்தால் உங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். அடமான நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். குல தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
இஷ்ட தெய்வ அனுகிரகம் உண்டாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சிறு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சினைகள் கூட தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். புதன் கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை வழங்கவும்.
கடகம்
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் பார்வை உள்ளது. இதுவரை பாராமுகமாக இருந்த உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்தும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடைந்து வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வரக்கூடிய இடர்பாடுகளை உணரும் உள்ளுணர்வு அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.
உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. தொழில் சார்ந்த எண்ணம் ஈடேறும். பூர்வீகத் தொழிலால் கவுரவம் கூடும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். போட்டி பந்தயங்கள், கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. வெளிநாட்டு பயணம் சுமூகமாகும். பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். சுப பலன்களை அதிகரிக்க சனிக்கிழமை காளியை வழிபடவும்.
சிம்மம்
வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசி அதிபதி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், ராகுவுடன் இணைந்து தன் வீட்டை தானே பார்க்கிறார். பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். நல்ல வேகமும், விவேகமும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவருக்கும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
மூத்த சகோதரருடன் நல்லிணக்கம் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து விற்பனை முலம் பெரும் பணம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்தவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையக் கூடிய அற்புதமான காலம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நோய்கள் சாதாரண வைத்தியத்தில் குணமாகும். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடிப்பீர்கள். அம்பிகையை வழிபடவும்.
கன்னி
நிம்மதியான வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு ஆறில் வக்ரம் அடைகிறார். முக்கிய முடிவுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள். தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் ஆதரவு கிடைக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப்பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். குல தெய்வம், பூர்வீகம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள முயல்வீர்கள்.
உங்கள் முயற்சி புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம். தந்தையின் ஆரோக்கியத்திற்கு வைத்திய செலவு செய்ய நேரும். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் நிலவிய மனக்கசப்புகள் தீரும். 23.2.2026 அன்று இரவு 10.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். விநாயகருக்கு அருகம்புல் அணிவித்து வழிபட நல்லது நடக்கும்.
துலாம்
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். அதிர்ஷ்டத்தை கூறுமிடமான ஐந்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், ராகு சேர்க்கை உள்ளது. இது எதிர்பாராத பணவரவை அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம். பங்குச்சந்தை ஆதாயம் பல மடங்கு அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலக பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் நன்மைகள் உண்டு. 23.2.2026 அன்று இரவு 10.12 முதல் 26.2.2026 நள்ளிரவு 12.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் கொடுப்பதை வாங்குவதை தவிர்க்கவும். தினமும் லலிதா சகஸ்ரநாமம் கேட்கவும்.
விருச்சிகம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாமிடத்தில் இருந்து நான்காமிடமான சுகஸ்தானம் செல்கிறார். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும், ஆதாயம் அதிகரிக்கும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். மனத் தடுமாற்றம் குறையும். மாணவர்கள் ஆர்வமாக படிப்பார்கள். தான தர்மங்கள் செய்வதால் நிம்மதி அதிகமாகும்.
பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். காதல் திருமணம் கைகூடும். 26.2.2026 நள்ளிரவு 12.55 முதல் 28.2.2026 அதிகாலை 3.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் சொந்த பந்தங்களின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். சிவ வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.
தனுசு
இடப்பெயர்ச்சி பற்றிய சிந்தனை உதயமாகும் வாரம். ராசிக்கு சனியின் பத்தாம் பார்வை உள்ளது. இது அர்த்தாஷ்டம சனியின் காலம் என்பதால் வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடும். கணவன்-மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். திருமண முயற்சி சாதகமாகும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். தியானம், யோகா போன்ற ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்ப பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். ஸ்ரீ கால பைரவரை வழிபட நிம்மதி கூடும்.
மகரம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசியில் சஞ்சரித்த உச்ச செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயரும். திருமணத் தடை அகலும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். உயர் அதிகரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும்.
உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். குலதெய்வத்திடம் ஒரு முக்கிய கோரிக்கை வைப்பீர்கள். தினமும் சிவபுராணம் படிப்பதால் அமோகமான மாற்றங்கள் உண்டாகும்.
கும்பம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசியில் சில கிரகச் சேர்க்கை உள்ளது. சில பாதகங்கள் மற்றும் சாதகங்களும் இருக்கும் என்பதால் தெளிவான மனநிலையில் செயல்படுவது நல்லது. சில கும்பராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். தந்தைவழி உறவில் நல்ல விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடப்பெயர்ச்சி செய்ய நேரும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சாதகமாகும். குடும்ப உறவுகளுக்கு நண்பர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பல சாதகங்கள் நடந்தாலும் ஏழரைச் சனியின் காலம் என்பதால் மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். ராகுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.
மீனம்
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி குரு சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும். வீடு, வாகன முயற்சி சித்திக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். உபரி வருமானம் கிடைப்பதால் தாராளமாக செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பங்குச் சந்தை ஆதாயமும் சேமிப்பும் அதிகரிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். உத்தியோகத்தில் நினைத்த இடமாற்றம் கிடைப்பது உறுதி. புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். விண்ணப்பித்த அரசு உத்தியோகம் தொடர்பான நல்ல செய்தி தேடி வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் வாரிசு உருவாகும். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- வளர்பிறை சஷ்டி விரதம்.
- ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-10 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி நண்பகல் 12.17 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : அசுவினி இரவு 6.55 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சிபுரம், சமயபுரம், இருக்கன்குடி, தஞ்சை புன்னை நல்லூர் அம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்
இன்று வளர்பிறை சஷ்டி விரதம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருக்கோஷ்டி யூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். மரத்தோளுக்கினியானில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவகோட்டை ஸ்ரீசிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-சுபம்
கடகம்-உயர்வு
சிம்மம்-நட்பு
கன்னி-அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- புகழ்
மகரம்-ஆதரவு
கும்பம்-வரவு
மீனம்-கீர்த்தி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தொட்டது துலங்கும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து அனுகூல செய்தி கிடைக்கும்.
கடகம்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைபட்ட கல்யாண பேச்சு முடிவிற்கு வரும்.
சிம்மம்
வருமானம் திருப்தி தரும் நாள். எதிர்பார்த்த காரியம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
கன்னி
ஆதாயமில்லாத அலைச்சல் ஏற்படும் நாள். அரைகுறையாக வேலைகள் நிற்கலாம். பணப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.
துலாம்
முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து மகிழும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.
விருச்சிகம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நண்பர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
தனுசு
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வரலாம். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். தெய்வ நம்பிக்கை கூடும்.
மகரம்
பொன்னான நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். வீடு வாங்க போட்ட திட்டங்கள் கைகூடலாம்.
கும்பம்
எதிரிகளின் பலமறிந்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். பிறரை நம்பி செயல்பட முடியாது.
மீனம்
மனக்குழப்பம் மாறும் நாள். பொருளாதார விருத்தி உண்டு. மறைமுக போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
- மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-9 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி பிற்பகல் 2.12 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : ரேவதி இரவு 8.15 வரை பிறகு அசுவினி
யோகம் : மரண/சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
வளர்பிறை சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். பெரிய தங்கப் பல்லக்கில் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-உவகை
கடகம்-போட்டி
சிம்மம்-லாபம்
கன்னி-பெருமை
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-நட்பு
தனுசு- உண்மை
மகரம்-தேர்ச்சி
கும்பம்-கீர்த்தி
மீனம்-சாதனை






