search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் கடை"

    • கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது.
    • ரேஷன் கடை கட்டிடங்களையும் ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையை இன்று காலை கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் திடீரென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ரேஷன் கடை களில் இருந்த பொருட்களும், அரசு பதிவேட்டில் குறிப் பிடப்பட்டிருந்த பொருட் களின் விபரமும் சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார்.

    பின்னர் பொது மக்களுக்கு எந்தவித குறை களும் இல்லாமல் அரசு நிர்ணயித்தபடி அனைத்து பொருட்களும் சரியான முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ரேஷன் கடை கட்டி டங்களை ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து விவ சாயிகளின் இடுபொருட்கள் மற்றும் டிராக்டர்களை பார்வையிட்டார். அப்போது கடலூர் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், மேலாண்மை இயக்குனர் திலீப் குமார், துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி, அலுவலர் உதய குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    படம்கடலூர் சிங்கிரிகுடி ரேஷன் கடையை கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

    • விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் முயற்சியின் மூலம் புதிய ரேசன் கடை திறக்கப்பட்டது.
    • 3 மாதங்களுக்குள் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 33 வது வார்டு பாரப்பா ளையத்தில் புதிய நியாய விலை கடை வேண்டும் என திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் விஜயகு மாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் முயற்சியின் மூலம் புதிய ரேசன் இன்று கடை திறக்கப்பட்டது.

    இன்று நடந்த திறப்பு விழாவில் விஜயகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதும க்களுக்கு பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக 3 மாதங்களுக்குள் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    நிகழ்ச்சியில் கோல்டன் நகர் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன், கவுன்சிலர் தமிழ்ச்செல்வி முத்துக்கிருஷ்ணன், செட்டி பாளையம் சொசைட்டி தலைவர் ராமசாமி, துணை த்தலைவர் சுப்பிரமணியம், வட்ட செயலாளர் மாணி க்கம், நிர்வாகி விஸ்வநாதன் ,துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 1,185 பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
    • 3 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.

    தாராபுரம் :

    தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட 1,149, நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் 22, மகளிர் குழுக்கள் வாயிலாக 14 என மொத்தம் 1,185 பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளிலும், தமிழக அரசின் உத்தரவுபடி இம்மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    முதற்கட்டமாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.புதிய திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி பொருட்கள் பெறும் (பி.எச்.எச்-.,- ஏ.ஏ.ஒய்.,) கார்டு பயனாளிகளுக்கும் இந்த அரிசி வழங்கப்பட உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மட்டும் 3 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர் என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரேஷன் கடை பெண் ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறான்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த வர் மகாலிங்கம். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ராஜேஸ் வரி சமயநல்லூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறான். இந்த நிலையில் தோடனேரியை சேர்ந்த கதிரவன் மனைவி நாக ஜோதி என்பவர் தனது 83 செண்ட் நிலத்தை விற்க முன்வந்தார்.

    நாங்கள் அதனை பணம் கொடுத்து வாங்கி பத்திரப் பதிவு செய்து கொண்டோம். ஆண்டிப்பட்டி பங்களாவில் நாகஜோதி ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நாக ஜோதியின் மகன் சூரஜ் குமார், சரத்குமார், ஷர்மிளா தேவி, மணிகண்டன் ஆகி யோர் எங்களுக்கு சொந்த மான இடத்தில் 28 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு நாகஜோதி, அவரது மகள் சரண்யா மற்றும் தோடனேரி நடுத்தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது.
    • தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர்.

    திருப்பூர் :

    பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கியாஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண் ,முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனிடையே திருப்பூர், சென்னை ,கோவை போன்ற ஊர்களுக்கு வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர். அதே போல் வெளிமாநில தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயிலுடன் இணைந்து மினி சிலிண்டர் ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு நியாய விலை கடையில் இந்தத் திட்டமானது இன்று துவங்கப்பட்டது. இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில் , இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தியு ள்ளதாகவும் தெரிவித்தனர். ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதோ ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம் . தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இத்திட்டமானது இக்கடையில் அறிமுகப்ப டுத்தப்ப ட்டுள்ளதாகவும் , இதன் வரவேற்பு பொறுத்து விரைவில் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.
    • மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (வளர்மதி) கிளையின் நியாய விலைக்கடை பணியாளர் செல்வராணி விபத்தில் சிக்கினார்.

    அப்போது மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், அவரது வாகனத்திலேயே ஏற்றி சென்று டி.எம்.எப்.மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். அவரின் இந்த சிறப்பான செயலுக்கு வளர்மதி பண்டக பணியாளர்களின் சார்பாக அவரை பாராட்டி அவருக்கு நன்றி தெரி விக்கப்பட்டது. மேலும் மேயர், செல்வராணியின் உடல்நலத்தை பற்றி விசாரித்ததோடு மட்டும ல்லாமல் அவரே கோவை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு செல்வராணியின் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ததோடு மட்டுமின்றி மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்காமலும், ரேஷன் கடைகள் திறக்காமல் மூடியும் உள்ளது. இதனால், ரேஷன்கடை ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, பல்வேறுகஷ்ட நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்,
    • 5 ஆண்டு ஊதியத்தை ஊழியர்களுக்கு உடனே வழங்கவேண்டும் என ஊழியர்கள் முற்றுகையிட சென்றனர்

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் 70-க்கும மேற்பட்ட ரேஷன் கடைகளில், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.புதுச்சேரி அரசு இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்காமலும், ரேஷன் கடைகள் திறக்காமல் மூடியும் உள்ளது. இதனால், ரேஷன்கடை ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, பல்வேறுகஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் வேறு வழியின்றி, காய்கறி விற்றல், கொத்தனார், பல்வேறு தனியார் நிறுவனங்களில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர் இந்நிலையில், இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ்வதால், இந்த அவலநிலையை, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் கவனத்தில் கொண்டு, ரேஷன் கடையை உடனே திறக்கவும், நிலுவையில் உள்ள 5 ஆண்டு ஊதியத்தை ஊழியர்களுக்கு உடனே வழங்கவேண்டும். என வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, நேற்று ஊழியர்கள் முற்றுகையிட சென்றனர்.

    கலெக்டர் அலுவலக வாசலில், காரைக்கால் நகர போலீசார் ஊழியர்களை தடுத்து, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுப ட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வாயில் எதிரே உள்ள நேரு வீதியில், அப்பா பசிக்குது. அப்பா ஸ்கூல் பீஸ் கட்டு, அப்பா வீட்டு வாடகையை கட்டு, அப்பா மின்சார பில்லை கட்டு உள்ளிட்ட பதாதைதைகளுடன் பள்ளி மாணவர்களுடன்( குழந்தைகளோடு) குடும்பத்தோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தியும், அவர்கள் கலைந்துச் செல்லாததால், போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • செம்பாவள்ளத்தில் சுமார் 350- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • ஊத்துக்குளி ஆர்.எஸ்.நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பா வள்ளத்தில் சுமார் 350- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்துக்குளி ஆர்.எஸ்.நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள். ஆகவே இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ஒரு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் என்.பிரபுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தலைவர் பிரபு ரூ.4,80,000 மதிப்பீட்டில் பகுதி நேர புதிய ரேஷன் கடை கட்ட உத்தரவிட்டார்.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் பிரபு, ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கலைவாணி தங்கராஜ், செம்பாவள்ளம் பட்டக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?
    • ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 326 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கியதில் கிடைத்த கமிஷன் அடிப்படையில் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டு வந்தது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி, அரிசிக்கு பதில் பணம் வழங்க உத்தரவிட்டார்.

    இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனது. இதனிடையே, கொரோனா காலங்களில் மத்திய அரசு வழங்கிய அரிசியை கமிஷன் அடிப்படையில் விநியோகிக்கும் நடவடிக்கையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ஆனால் அந்த ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுவரை 55 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

    இவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எதிரொலித்தது.

    இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில், ரேஷன் கடைகளை மறுபடியும் திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோரி மேடு அப்பா பைத்தியசாமி கோவில் பின்புறம் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தை 100-க்கனக்கானோர் முற்றுகையிட்டனர்.

    ரேஷன் கடைகளை திறந்து நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி டென்னீஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஊழியர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர்.

    இதனிடையே விளையாட்டை முடித்து வீடு திரும்பிய முதலமைச்சரிடம் ஊழியர்கள், 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். தற்போது எங்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை சம்பளமும் வழங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களை நிரந்தரம் செய்தது போல் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர்.

    அப்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி 7 வருடங்களாக என்ன செய்தீர்கள்.? தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? என ஊழியரிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

    இதனையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர். அப்போது போலீசாருக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் அங்கிருந்தும் கலைந்து போகும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ஊழியர்கள் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    ஏற்கனவே இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மருத்துவமனை மேலே ஏறி நின்று தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர். அன்று மாலை அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்து அதற்கான உத்தரவை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    இதனால் பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்ற போராட்டங்கள் மூலம் பணி நிரந்தரம் பெற்று விடலாம் என்று எண்ணத்தால் புதுவை முழுவதுமே போராட்டக் களமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • நியாய விலை கடை மூலம் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • கன்கீரிட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி வெனசப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட நியாய விலை கடை மூலம் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது கட்டடத்தில் முக்கிய பகுதிகளான பல்வேறு இடங்களில் கம்பிகள் தெரியும் அளவிற்கு கன்கீரிட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. கட்டிடத்தின் உட்புறப் பகுதிகளில் மேற்கூரை அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் நீர் ஒழுகி உள்ளே வந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இடிந்து விழும் நிலை ஏற்படும். உடனடியாக ரேஷன் கடையை சீரமைக்கும் பணி செய்ய வேண்டும்.

    புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் தரப்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி இருந்ததாக பொதுமக்கள் கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.
    • அரிசியை வேக வைக்கும் போது பசை போல் பொங்கி வருவதாகவும், ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.

    கெலமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் குடும்ப அட்டைதாரருக்கு 20 முதல் 35 கிலோ வரை அரிசி வழங்கும் நிலையில் அதில் 5 கிலோ முதல் 8 கிலோ வரை பிளாஸ்டிக் அரிசி கலந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த அரிசியை அடுப்பில் வைத்து வேக வைக்கும் போது பசை போல் பொங்கி வருவதாகவும், இதனால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி இருந்ததாக பொதுமக்கள் கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அதிகாரி கூறியபோது மக்களுக்கு வழங்கப்படும் அரிசியானது பிளாஸ்டிக் அரிசி அல்ல.

    அவை செறிவூட்டப்பட்ட அரிசி. அந்த அரிசியில் இரும்பு சத்து, பி-12 மற்றும் போலிக ஆசிட் உள்ளடக்கிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

    இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

    • ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர்.
    • கடந்த ஆண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல் :

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.5 கோடி மதிப்பில், தலா 1,000 டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது. இதையொட்டி காணொலி காட்சி மூலம் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தமிழகத்தில் 3,504 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முதல்-அமைச்சர் அனுமதி தந்து உள்ளார். இந்த ஆண்டு 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

    ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ரேஷன் கடைகளில் யார் பொருட்கள் வாங்க வேண்டும் என, பரிந்துரை செய்கிறார்களோ? அவர்களுக்கு அனுமதி அளிக்க, மாவட்ட வழங்கல் அலுவலர்கள் முடிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பயோ மெட்ரிக் உடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

    தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ராகி உள்பட சிறுதானியங்கள் வழங்குவதற்காக, நேரடி ராகி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, ராகி கிலோ ஒன்றுக்கு ரூ.35.40 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக விரைவில் தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ராகி மாவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×