விபத்தில் சிக்கிய ரேஷன் கடை பணியாளரின் சிகிச்சைக்கு உதவிய மேயருக்கு பாராட்டு

மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.
மேயர்  தினேஷ்குமாரை பாராட்டி அவருக்கு நன்றி தெரி விக்கப்பட்ட காட்சி.
மேயர் தினேஷ்குமாரை பாராட்டி அவருக்கு நன்றி தெரி விக்கப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (வளர்மதி) கிளையின் நியாய விலைக்கடை பணியாளர் செல்வராணி விபத்தில் சிக்கினார்.

அப்போது மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், அவரது வாகனத்திலேயே ஏற்றி சென்று டி.எம்.எப்.மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். அவரின் இந்த சிறப்பான செயலுக்கு வளர்மதி பண்டக பணியாளர்களின் சார்பாக அவரை பாராட்டி அவருக்கு நன்றி தெரி விக்கப்பட்டது. மேலும் மேயர், செல்வராணியின் உடல்நலத்தை பற்றி விசாரித்ததோடு மட்டும ல்லாமல் அவரே கோவை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு செல்வராணியின் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ததோடு மட்டுமின்றி மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com