என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை பெண் ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- ரேஷன் கடை பெண் ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறான்.
மதுரை
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த வர் மகாலிங்கம். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ராஜேஸ் வரி சமயநல்லூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகன் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறான். இந்த நிலையில் தோடனேரியை சேர்ந்த கதிரவன் மனைவி நாக ஜோதி என்பவர் தனது 83 செண்ட் நிலத்தை விற்க முன்வந்தார்.
நாங்கள் அதனை பணம் கொடுத்து வாங்கி பத்திரப் பதிவு செய்து கொண்டோம். ஆண்டிப்பட்டி பங்களாவில் நாகஜோதி ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நாக ஜோதியின் மகன் சூரஜ் குமார், சரத்குமார், ஷர்மிளா தேவி, மணிகண்டன் ஆகி யோர் எங்களுக்கு சொந்த மான இடத்தில் 28 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு நாகஜோதி, அவரது மகள் சரண்யா மற்றும் தோடனேரி நடுத்தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






