search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fortified rice"

    • 1,185 பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
    • 3 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.

    தாராபுரம் :

    தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட 1,149, நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் 22, மகளிர் குழுக்கள் வாயிலாக 14 என மொத்தம் 1,185 பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளிலும், தமிழக அரசின் உத்தரவுபடி இம்மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    முதற்கட்டமாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.புதிய திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி பொருட்கள் பெறும் (பி.எச்.எச்-.,- ஏ.ஏ.ஒய்.,) கார்டு பயனாளிகளுக்கும் இந்த அரிசி வழங்கப்பட உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மட்டும் 3 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர் என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×