search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ரேஷன் கடையில் 5 கிலோ சிலிண்டர் விநியோகம் தொடக்கம்
    X

    சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட காட்சி.

    திருப்பூர் ரேஷன் கடையில் 5 கிலோ சிலிண்டர் விநியோகம் தொடக்கம்

    • இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது.
    • தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர்.

    திருப்பூர் :

    பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கியாஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண் ,முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதனிடையே திருப்பூர், சென்னை ,கோவை போன்ற ஊர்களுக்கு வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர். அதே போல் வெளிமாநில தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயிலுடன் இணைந்து மினி சிலிண்டர் ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு நியாய விலை கடையில் இந்தத் திட்டமானது இன்று துவங்கப்பட்டது. இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில் , இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தியு ள்ளதாகவும் தெரிவித்தனர். ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதோ ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம் . தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இத்திட்டமானது இக்கடையில் அறிமுகப்ப டுத்தப்ப ட்டுள்ளதாகவும் , இதன் வரவேற்பு பொறுத்து விரைவில் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×