என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடையை திறக்க வலியுறுத்திய ரேஷன் கடை ஊழியர்கள்.
ரேஷன் கடையை திறக்க வலியுறுத்திகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ரேஷன் கடை ஊழியர்கள் குடும்பத்தோடு கைது
- கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்காமலும், ரேஷன் கடைகள் திறக்காமல் மூடியும் உள்ளது. இதனால், ரேஷன்கடை ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, பல்வேறுகஷ்ட நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்,
- 5 ஆண்டு ஊதியத்தை ஊழியர்களுக்கு உடனே வழங்கவேண்டும் என ஊழியர்கள் முற்றுகையிட சென்றனர்
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் 70-க்கும மேற்பட்ட ரேஷன் கடைகளில், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.புதுச்சேரி அரசு இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்காமலும், ரேஷன் கடைகள் திறக்காமல் மூடியும் உள்ளது. இதனால், ரேஷன்கடை ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, பல்வேறுகஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் வேறு வழியின்றி, காய்கறி விற்றல், கொத்தனார், பல்வேறு தனியார் நிறுவனங்களில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர் இந்நிலையில், இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ்வதால், இந்த அவலநிலையை, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் கவனத்தில் கொண்டு, ரேஷன் கடையை உடனே திறக்கவும், நிலுவையில் உள்ள 5 ஆண்டு ஊதியத்தை ஊழியர்களுக்கு உடனே வழங்கவேண்டும். என வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, நேற்று ஊழியர்கள் முற்றுகையிட சென்றனர்.
கலெக்டர் அலுவலக வாசலில், காரைக்கால் நகர போலீசார் ஊழியர்களை தடுத்து, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுப ட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வாயில் எதிரே உள்ள நேரு வீதியில், அப்பா பசிக்குது. அப்பா ஸ்கூல் பீஸ் கட்டு, அப்பா வீட்டு வாடகையை கட்டு, அப்பா மின்சார பில்லை கட்டு உள்ளிட்ட பதாதைதைகளுடன் பள்ளி மாணவர்களுடன்( குழந்தைகளோடு) குடும்பத்தோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தியும், அவர்கள் கலைந்துச் செல்லாததால், போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






