search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாலம்"

    • நெடுஞ்சாலைத்துறையினர் இப்பாலத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.
    • ஒரு வழி பாதையாக மாற்றி இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் புறவழிச் சாலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வழியாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. முக்கிய மான ஊர்களுக்கு செல்ல வேண்டிய மேம்பாலமாக உள்ளதால் இதில் ஏராளமான கனரக வாகனங்களும், பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்த பாலம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. அவ்வப்போது நெடுஞ்சா லைத்துறையினர் இப்பா லத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மாலை இந்த பாலத்தில் திடீரென ஒரு அடி வட்டத்தில் குழி ஏற்பட்டது.

    மேலும் அந்த குழியை சுற்றி இரண்டு அடி தூரத்திற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் செல்வதும் வருவதும் என உள்ளது. ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து உள்ள பாலம் என்ற நிலையில், ஒரு வழி பாதையாக மாற்றி இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் பொது மக்கள் , வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனை போக்குவரத்து போலீசார் சரி செய்து வருகின்றனர்.

    -உடனடியாக இந்த பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 11, வார்டு - 143, நொளம்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மேயர் பிரியா ராஜன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணிகள் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, 11- வது மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் , ஒன்றிய செயலாளர் அ.ம. துரை வீரமணி, எஸ்.பத்மபிரியா, கவுன்சிலர் வ.செல்வகுமார் , வி. ராஜேஷ், எஸ்.மணி, கே.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
    • விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ெரயில்வே கேட் மூடப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.

    எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை பரிசீலித்து ெரயில்வே கேட் சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

    இந்த சாலை மேம்பாலம் மற்றும் அணுகு சாலை அமைப்பதற்காக சிவகாசி மற்றும் ஆனையூர் கிராமங்களில் 2818 ச.மீ. நிலங்களை கையகப்படுத்தும் பணி வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் நிலம் மற்றும் கட்டுமானங்களுக் குரிய இழப்பீட்டு தொகையை தொடர்புடைய நில உடைமையாளர்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ரூ.5 கோடியே 60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நில உடைமையாளர்க ளுக்கான இழப்பீட்டு தொகை இம்மாத இறுதிக் குள் உரிய நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப் படும் எனவும், விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

    • ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன.
    • பாலம் அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல்போய் விடும்.

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே மாநில நெடுஞ்சாலை, ரெயில்வே நிர்வாகம் இணைந்து ரூ.234 கோடி செலவில், மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு உள்ளன.

    ஜி.எஸ்.டி. சாலையில், செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதை சில நாட்களுக்கு முன்பு வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பால சாலை, சர்வீஸ் சாலை, ரவுண்டானா ஆகிய இடங்கள் தற்போது தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ஆரம்பத்திலேயே இதனை தடுக்க வேண்டும். இல்லையெனில், பாலம் அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல்போய் விடும். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியாது' என்றார்.

    • கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மேம்பாலம் விரைவில் கட்டப்படும்.
    • அமைச்சர் எ.வ.வேலு கூட்டத்தில் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை முனிச்சாலை பகுதியில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனி–வேல் தியாகராஜன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், மேயர் இந்தி–ராணி, பொன் வசந்த் ஆகி–யோர் ஆய்வு மேற்கொண் டனர்.

    அதனைத் தொடர்ந்து வருகிற (ஜூலை) 15-ந்தேதி தமிழக முதல்-அமைச்சரால் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிரு–பர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறி–யதாவது:-

    கடந்த 11.1.2022 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா–லின் ஆய்வு மேற்கொண்டு ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைப்ப–தற்காக ஆணை பிறப்பித் தார். பின்னர் இந்த நூலகம் அமையும் இடத்திற்கு ஒன் றுக்கு மூன்று முறை நேரில் முதல்வர் ஆய்வு செய்து இறுதியாக ரூ.134 கோடி மதிப்பீட்டில் இந்த கட்டிடம் அமைக்கப்படுகிறது.

    மேலும் இந்த நூலகத்தில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு பர்னிச்சர் கள், ரூ.5 கோடிக்கு கணினி வசதிகள் செய்யப்படுகிறது. ஆக மொத்தம் ரூ.215 கோடி மதிப்பீட்டில் தென் பகுதி மக்களின் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமைகிறது. அண்ணா நூற் றாண்டு விழாவின் போது சென்னை கோட்டூர்பு–ரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்ணா நூற் றாண்டு நூல–கத்தை திறந்து வைத்தார்.

    தற்போது முதல்வர் மு.க.–ஸ்டாலின் 5 முறை தமிழ–கத்தை ஆண்ட கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மது–ரையில் கலைஞர் நூற் றாண்டு நூலகத்தை வரும் ஜூலை 15-ந்தேதி திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மக்களை சந்திக் கும் வகையில், நிகழ்ச்சிகள் அனைத்தும் மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடை–பெறுகிறது.

    அதற்கான ஆயத்த பணி–களை ஆய்வு செய்வதற்காக தற்போது இறுதியாக வந்து உள்ளோம். இந்த கட்டிடப் பணிகள் ஜூலை 10-ந்தேதி–யுடன் நிறைவு பெற்று மீத–முள்ள ஐந்து நாட்கள் நிகழ்ச்சி நடத்துவது சம்பந்த–மான வேலைகள் நடைபெ–றும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசும் போது, சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையை பெருமைப்படுத்தும் வகை–யில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா–நிதி மதுரை மாநகராட்சியாக அறிவித்தார். மேலும் பல திட்டங்களை மதுரைக்கு கொண்டு வந்தார் என்றும், அதேபோல் மதுரைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை கொடையாக அளித் தார் என்று சொல்வதற்கு பதிலாக தவறான வார்த் தையை உபயோகப்படுத்தி விட்டேன், உணர்ச்சி வசப் பட்டு விட்டேன்.

    அதற்காக இப்பொழுது நான் வருந்துகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதுரை–யில் கோரிப்பாளையம் பகுதியில் ஒரு மேம்பாலமும், மதுரை அப்போலோ மருத்துவமனை அருகே ஒரு மேம்பாலமும் நிச்சயமாக வர இருக்கிறது. மதுரை நெல்பேட்டையில் இருந்து ஒரு மேம்பாலம் கட்ட முடிவு செய்தோம். ஆனால் அந்தப் பகுதி மிக குறுவலான பகுதியாக இருப்பதினால் அதிகமான கட்டிடங்களை எடுக்க நேரிடும் என்பதால் இப்பகுதியில் உள்ள மக்கள் வியாபாரிகள் பாலம் கட்டும் பணியினை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் சாலைகளை பெரிது படுத்த நடவடிக்கை–கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தொடர்ந்து மதுரை வைகை ஆற்றுச்சாலையை இணைக்கும் சாலைகள் விரைவில் நடைபெற இருக்கி–றது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, ஆன்மீகத் துக்குள் தான் திராவிடம் இருக்கிறது என்று கூறி–னேன். அது ஒன்றும் தவ–றில்லை, காரணம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி–யில் தான் தமிழகத்தில் அதி–கமான கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது என்றும் மேலும் பல கோவில் திருப்பணிகளை தி.மு.க. அரசு செய்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    முன்னதாக இந்த ஆய்வு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், மேயர் இந்தி–ராணி, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • பாலம் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
    • பாடி மேம்பாலம் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் பழுது அடைந்து வருகிறது.

    சென்னையின் மேற்கு பகுதியில் முக்கிய அடையாளமாக திகழும் பாடி மேம்பாலம் 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினை, பயண நேரத்தைக் குறைக்க, விபத்துகளைத் தவிர்க்க பாடி சந்திப்பு பகுதியில் இந்த பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலம் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில் பாடி மேம்பாலம் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் பழுது அடைந்து வருகிறது.

    மேலும் பாலத்தின் பல்வேறு பகுதிகளில் சரிவர மின்விளக்குகள் எரியாததால் இரவில் இருட்டாக உள்ளது. மேலும் பாலத்தின் பல்வேறு பகுதிகளில் பழுதுகள் ஏற்பட்டு உள்ளன.

    மேலும் பாலத்தின் அடியில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகிறது. அங்கு மாடுகள் கட்டப்பட்டு மாட்டுத்தொழுவமாக மாறிஉள்ளன.

    இப்பகுதியில் பழுதான கார், இருசக்கர வாகனங்கள் ஏராளம் நிறுத்தப்பட்டு உள்ளன. அங்கு குவியல், குவியலாக காணப்படும் இந்த வாகனங்களால் பாலத்தின் அடிப்பகுதி அலங்கோலமாக காணப்படுகிறது. அதில் மாடுகள் கட்டப்பட்டு பால் கறந்து சிலர் தொழில் செய்து வருகிறார்கள்.

    இதனால் அப்பகுதியில் மாடுகளின் சாணம், சிறுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு இதுவரை எந்தவித பராமரிப்பும் செய்யப்படவில்லை. பாலத்தின் அடியில் குப்பைகள் குவியல்களாக நிறைந்து உள்ளன.

    இப்பகுதியை கடந்து செல்பவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இதனை உடனடியாக கவனித்து பாலத்தின் அடிப்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பகுதியை சேர்ந்த செல்வம் கூறியதாவது:-

    பாடி மேம்பாலம் பகுதியில் இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

    பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து தொடர் வழிப்பறி சம்பவத்தால் இரவு பணிமுடிந்து வீடு திரும்புவோர் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    இப்பகுதியில் மோட்டார் பைக்குகள், செல்போன் பறிப்பு, செயின்பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே பாடிமேம்பாலம் பகுதியில் அடிக்கடி போலீஸ் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைக்க வேண்டும்.

    வேல்முருகன் கூறியதாவது:-

    பாடி மேம்பாலத்தின் அடியில் மாடுகள் கட்டப்பட்டு தொழுவமாக மாறி துர் நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியில் செல்ல பொது மக்கள் அச்சப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அப்பகுதி கும்மிருட்டாக காட்சி அளிக்கிறது. பகல், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இப்பகுதியில் நடமாடுகிறார்கள்.

    இதனால் இந்த பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. எனவே இந்த பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வாகன ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். குற்றசம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

    இப்பகுதியில் பாலத்தின் அடியில் உள்ள குப்பை-கூளங்களை அகற்ற வேண்டும். பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். பாலத்தின் அடிப்பகுதியை சுத்தம் செய்து அங்கு புதிதாக பூங்கா அமைக்க வேண்டும்.

    நிசார் கூறியதாவது:-

    பாடி மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தூய்மை பணிகள் செய்யாததால் குப்பை, கூளங்கள் நிறைந்து உள்ளன. எனவே இப்பகுதியை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும்.

    மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் அழகிய பூங்காக்கள் உருவாக்க வேண்டும். பாடி மேம்பாலத்திற்கு அழகிய வர்ணம்பூசி அழகுபடுத்த வேண்டும். கூடுதல் மின் விளக்கு வசதிகள் செய்ய வேண்டும். பாலத்தில் ஆங்காங்கே காணப்படும் சிறு சிறு பழுதுகளை சீரமைக்க வேண்டும்.

    • எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சஹாரன் பூர் மேம்பாலத்துக்காக சாலையை விரிவுபடுத்த கோவில் மற்றும் தர்கா அகற்ற வேண்டி இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பகுஜன் புராவில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து சாலையில் இருந்த கோவில் மற்றும் தர்கா கட்டிடங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று காலை பஜன்புரா மெயின் ரோட்டில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    இதில் அனுமன் கோவில் மற்றும் தர்கா உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார், துணை ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறையினர் கட்டிடங்களை அகற்றினர். எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக கட்டிடங்கள் இடிக்கப்பட்ட தாக போலீசார் தெரிவித்தனர்.

    கோவில் மற்றும் தர்காவை அகற்ற இரு தரப்பினரிடமும் பொதுப் பணித்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி சம்மதத்தை பெற்ற பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.

    இதுகுறித்து டெல்லி வட கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் ஜாய் டிர்கி கூறும்போது, 'பஜன்புரா பகுதியில் அமைதியான முறையில் கோவில் மற்றும் தர்கா அகற்றப்பட்டன. சஹாரன் பூர் மேம்பாலத்துக்காக சாலையை விரிவுபடுத்த கோவில் மற்றும் தர்கா அகற்ற வேண்டி இருந்தது.

    இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. உள்ளூர் தலைவர்கள் சிறிது கால அவகாசம் கேட்டனர்.

    அதன்பின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இரு மத கட்டமைப்புகளும் அனைவரின் ஒத்துழைப்போடு அகற்றப்பட்டன. அக்கட்டிடங்கள் அகற்றப்படுவதற்கு முன்பு பூஜைகள் செய்தனர்' என்றார்.

    • கொளத்தூரில் பல்வேறு திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • செங்கை சிவம் மேம்பாலத்தால் மக்கள் பெரும் பயனடைவார்கள்.

    சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்டீபன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் மேம்லாத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    இதைத் தவிர, கொளத்தூரில் பல்வேறு திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பூங்கா, நூலக கட்டடம், ஒருங்கிணைந்த வளர்ச்சி மையம் உள்ளிட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    செங்கை சிவம் மேம்பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. செங்கை சிவம் மேம்பாலத்தால் மக்கள் பெரும் பயனடைவார்கள். சென்னையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது திமுக ஆட்சியில் தான்.

    ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் செங்கை சிவம். இவர் இரு முறை எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணியாற்றினார்.

    கலைஞர் கருணாநிதி அண்ணா மேம்பாலத்தை கட்டினார். அது 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

    ஒமந்தூரார் மருத்துவமனை, கிண்டி மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், மெட்ரோ ரெயில் திட்டம் என பல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன.

    ஓமந்தூரார் மருத்துவமனை முதலில் சட்டப்பேரவை வளாகமாக கருணாநிதி பார்த்து பார்த்து கட்டினார். ஆனால் சூழல் காரணமாக அது மருத்துவமனையா மாறியது.

    மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி.

    கடந்த ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்தி்ல இருந்து காப்பாற்றப்பட்டது. மழைநீர் வடிகால் கால்வாய்களை அமைத்து அந்த நிலையை திராவிட மாடல் ஆட்சி மாற்றியது.

    மெட்ரோ திட்டங்களால் சில சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன, விரைந்து சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் உட்கட்டமைப்பு. மக்களின் நாளைய தேவைகளை கருதியும் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடபழஞ்சி பகுதியில் புதிய உயர்மட்ட ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்களிடம் அதிகாரி உறுதியளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை-போடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தபோது வடபழஞ்சி-நாகமலை புதூர் பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால் மழை காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் தண்ணீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ரெயில்வே சுரங்கப் பாதையை மூடிவிட்டு உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ரெயில்வே துறையிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வடபழஞ்சிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழக பகுதியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் அருகே ரெயில்வே துறை ஒப்புதல் பெற்று புதிய உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்ககப்படும் என பொதுமக்களிடம் வருவாய் அலுவலர் உறுதி யளித்தார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சர்மிளா, மதுரை மேற்கு தாசில்தார் நாகராஜன், மண்டல துணை வட்டாட்சியர் வீரக்குமார், சர்வேயர் பழனி, வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டி மற்றும் ரெயில்வே கோட்ட பொறியாளர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ., ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பி.ஆர்.சி. ராஜா சங்கங்கோட்டை சந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை வெங்கடேசன் எம்.எல்.ஏ., ரெயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் இரவில் ஆய்வு செய்தனர். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாளம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி நிஷா கவுதமராஜா, முத்துச்செல்வி சதீஷ், செல்வராணி, ஜெயராமச்சந்திரன், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பி.ஆர்.சி. ராஜா சங்கங்கோட்டை சந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும்.
    • தொடர் முயற்சி எடுத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி வழியாக வெம்பக்கோட்டை வரை செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இங்கு அடிக்கடி ரெயில்கள் கடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உரிய நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர்.

    எனவே ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அப்போதைய அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றது.

    அப்போது ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்கப் பாண்டியன் மேம்பாலத்தை கட்டிமுடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் எடுத்த முயற்சியால் மேம்பால பணிகள் வேகமெடுத்தன. பல இடையூறுகளுக்கு இடையே ராஜபாளையம்-சத்திரப்பட்டி மேம்பால பணிகள் தற்போது 99 சதவீதம் முடிந்ததுள்ளன.

    இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் பொது மக்கள் வாகனங்கள் ஓட்டி யும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். புதிய மேம்பா லத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். விரைவில் புதிய ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் முறையாக திறந்து வைப்பார் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிகளை முடிக்க தொடரும் முயற்சிகளை எடுத்த எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்திய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வருகிற 5-ந் தேதி திறக்க ஏற்பாடு செய்தார்.
    • வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகனுடன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டார்.

    இந்த நிகழ்வில் தலைமை பொறியாளரிடம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல ஏதுவாக ரெயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும்.

    அதன்பின்னர் 2 மாதத்தில் சர்வீஸ் ரோடு பணியை முடித்து முதல்-அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மூலம் முறையாக திறப்பு விழா நடத்த வேண்டும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியதுடன் பணிகளை விரைவு படுத்தினார். அதற்கு தலைமை பொறியாளர் கண்டிப்பாக மேம்பால பணியை விரைவு படுத்தி ஜூன் 5-ந்தேதி மேம்பாலம் மட்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

    இதில் கண்காணிப்பு பொறியாளர் ஜவகர்முத்து, கோட்டப்பொறியாளர் லிங்கசாமி, உதவிக்கோட்ட பொறியாளர்கள் ஜெகன்செல்வராஜ், காவு மைதீன், உதவிப்பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திக், குணா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×