search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padi"

    • பாலம் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
    • பாடி மேம்பாலம் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் பழுது அடைந்து வருகிறது.

    சென்னையின் மேற்கு பகுதியில் முக்கிய அடையாளமாக திகழும் பாடி மேம்பாலம் 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினை, பயண நேரத்தைக் குறைக்க, விபத்துகளைத் தவிர்க்க பாடி சந்திப்பு பகுதியில் இந்த பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலம் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில் பாடி மேம்பாலம் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் பழுது அடைந்து வருகிறது.

    மேலும் பாலத்தின் பல்வேறு பகுதிகளில் சரிவர மின்விளக்குகள் எரியாததால் இரவில் இருட்டாக உள்ளது. மேலும் பாலத்தின் பல்வேறு பகுதிகளில் பழுதுகள் ஏற்பட்டு உள்ளன.

    மேலும் பாலத்தின் அடியில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகிறது. அங்கு மாடுகள் கட்டப்பட்டு மாட்டுத்தொழுவமாக மாறிஉள்ளன.

    இப்பகுதியில் பழுதான கார், இருசக்கர வாகனங்கள் ஏராளம் நிறுத்தப்பட்டு உள்ளன. அங்கு குவியல், குவியலாக காணப்படும் இந்த வாகனங்களால் பாலத்தின் அடிப்பகுதி அலங்கோலமாக காணப்படுகிறது. அதில் மாடுகள் கட்டப்பட்டு பால் கறந்து சிலர் தொழில் செய்து வருகிறார்கள்.

    இதனால் அப்பகுதியில் மாடுகளின் சாணம், சிறுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு இதுவரை எந்தவித பராமரிப்பும் செய்யப்படவில்லை. பாலத்தின் அடியில் குப்பைகள் குவியல்களாக நிறைந்து உள்ளன.

    இப்பகுதியை கடந்து செல்பவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இதனை உடனடியாக கவனித்து பாலத்தின் அடிப்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பகுதியை சேர்ந்த செல்வம் கூறியதாவது:-

    பாடி மேம்பாலம் பகுதியில் இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

    பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து தொடர் வழிப்பறி சம்பவத்தால் இரவு பணிமுடிந்து வீடு திரும்புவோர் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    இப்பகுதியில் மோட்டார் பைக்குகள், செல்போன் பறிப்பு, செயின்பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே பாடிமேம்பாலம் பகுதியில் அடிக்கடி போலீஸ் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைக்க வேண்டும்.

    வேல்முருகன் கூறியதாவது:-

    பாடி மேம்பாலத்தின் அடியில் மாடுகள் கட்டப்பட்டு தொழுவமாக மாறி துர் நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியில் செல்ல பொது மக்கள் அச்சப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அப்பகுதி கும்மிருட்டாக காட்சி அளிக்கிறது. பகல், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இப்பகுதியில் நடமாடுகிறார்கள்.

    இதனால் இந்த பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. எனவே இந்த பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வாகன ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். குற்றசம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

    இப்பகுதியில் பாலத்தின் அடியில் உள்ள குப்பை-கூளங்களை அகற்ற வேண்டும். பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். பாலத்தின் அடிப்பகுதியை சுத்தம் செய்து அங்கு புதிதாக பூங்கா அமைக்க வேண்டும்.

    நிசார் கூறியதாவது:-

    பாடி மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தூய்மை பணிகள் செய்யாததால் குப்பை, கூளங்கள் நிறைந்து உள்ளன. எனவே இப்பகுதியை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும்.

    மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் அழகிய பூங்காக்கள் உருவாக்க வேண்டும். பாடி மேம்பாலத்திற்கு அழகிய வர்ணம்பூசி அழகுபடுத்த வேண்டும். கூடுதல் மின் விளக்கு வசதிகள் செய்ய வேண்டும். பாலத்தில் ஆங்காங்கே காணப்படும் சிறு சிறு பழுதுகளை சீரமைக்க வேண்டும்.

    பாடியில் முதியவரை ஆட்டோவில் கடத்தி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    பாடி வடக்கு மாடவீதியை சேர்ந்தவர் கோபிநாத் (71). இவர் நேற்று காலை அதே பகுதியில் நடைபயிற்சி சென்றார்.

    அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் கோபிநாத்தை கத்தி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர். பின்னர் அவரிடம் இருந்த 6 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் இறக்கிவிட்டு இருவரும் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபிநாத் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் கோபிநாத்தை கடத்தியது திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளியான மகேஷ், அவனது கூட்டாளி விஜய் என்பது தெரிந்தது.

    இதையடுத்து திருநின்றவூரில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான இருவரும் இதே போல் பல்வேறு இடங்களில் முதியவர்களையும், தனியாக நடந்து செல்பவர்களையும் ஆட்டோவில் கடத்திச் சென்று கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிந்தது.

    சென்னையை அடுத்த பாடி லூக்காஸ் மேம்பாலம் அருகில் உள்ள 20 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்த பாடி லூக்காஸ் மேம்பாலம் அருகில் 20 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 18 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

    தீயின் புகை வெளியேறியதால் வீடுகளில் இருந்து மக்கள் பதட்டத்துடன் வெளியேறினார்கள். தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மிக உயர்ந்த கட்டிடம் என்பதால் சாதாரன தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்க இயலாது என்பதால் ராட்சத தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

    அம்பத்தூர், வில்லிவாக்கம், ஜெ.ஜெ. நகர், கோயம்பேடு, எழும்பூர் ஆகிய பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்களில் உள்ள நவீன கருவிகள் மூலம் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    18 மாடி உயரத்திற்கு எழுப்பப்பட்ட ஏணியின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி கூறுகையில், அடுக்கு மாடியில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும். மிக உயர்ந்த கட்டிடம் என்பதால் அதற்கான வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது.

    தீ மேலும் அருகில் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதட்டம் அடைந்தனர். தீ கட்டுக்குள் வந்த பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
    ×