search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் முக ஸ்டாலின்"

    • ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சறற் நினைக்கிறது பாஜக அரசு.
    • ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி.

    கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக கூறுவது அப்பட்டமான பொய்க்கணக்கு எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு.

    இது அப்பட்டமான பொய்க்கணக்கு!

    இதில் இரண்டு கூறுகள் உள்ளன:

    1) மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.

    மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

    இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே! 

    2) மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

    இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?

    இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,

    ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,

    சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.

    இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

    இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!

    தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?

    எங்கள் காதுகள் பாவமில்லையா!

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
    • அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

    இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

    பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.

    அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.

    அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

    • மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியானது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியீடு.

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    நெற்றியில் ரத்த காயத்துடன் மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மம்தா விரைவில் குணம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.

    இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், " மேற்கு வங்க முதல்வரின் சாலை விபத்து பற்றிய செய்தி அதிர்ச்சியாக உள்ளது. அவள் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்றார்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
    • மூன்று நாடுகள் பயணத்தை இம்மாதம் துவங்குகிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 28-ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாடுகள் பயணமாக ஸ்பெயின் செல்லும் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் பிறகு அமெரிக்காவுக்கும் செல்ல இருக்கிறார். 

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து வெளிநாடு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக தகவல்.

    • நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
    • இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    • கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீரை முன் கூட்டியே திட்டமிட்டு திறந்த காரணத்தால் தான் இத்தகைய பெருமழையை சமாளித்து உள்ளோம்.
    • இத்தகைய பெருமழை பெய்த நிலையிலும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வெள்ளம் பாதித்த வடசென்னை பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் பார்வையிட்டார்.

    மழை நீர் தேங்கிய இடங்களுக்கு ஜீப்பில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது நேரு ஸ்டேடியம் வால்டாக்ஸ் சாலை அருகில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.

    பெரியமேடு ரிப்பன் மாளிகை பகுதிக்கும் சென்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. மீனம்பாக்கத்தில் 43 செ.மீட்டரும், பெருங்குடியில் 44 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நாங்கள் ஏற்கனவே எடுத்த நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளது.

    2015-ம் ஆண்டு கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அன்றைக்கு நுங்கம்பாக்கத்தில் 29.4 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ. மழை பதிவானது. இப்போது பெருங்குடியில் 46 செ.மீ. மழையும், மீனம்பாக்கம் பகுதியில் 43 செ.மீ. மழையும், 36 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது. இது மிக மிக அதிகம்.

    இந்த புயல் விரைந்து கடந்த செல்லாமல் நின்று மெதுவாக நகர்ந்து கடந்ததால் சென்னையில் அதிக மழை பெய்தது. அதனால்தான் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இத்தகைய மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இந்த அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

    2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்தனர். இன்று அதை விட அதிக மழை பெய்திருந்தாலும் கூட 7 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இதுவும் ஏற்பட்டிருக்ககூடாது. அதற்காக வருத்தப்படுகிறேன்.

    தற்போது 9 மாவட்டங்களில் உள்ள 61666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 லட்சம் உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கி உள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.காலையில் பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

    மழை நீர் வடிகால் நன்றாக செயல்பட்டாலும் இறுதியில் அந்த தண்ணீர் கடலில் கலக்க அடையார் மற்றும் கூவம் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அவை அதிகம் காணப்பட்டதால், இந்த நதிகளில் வெள்ளம் மெதுவாக வடிந்தது.

    ஆனாலும் அரசு எடுத்து வந்த பணிகளின் காரணமாக வெள்ள பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திட்டமிடாமல் அடையாறில் 1 லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் திடீரென திறந்து விடப்பட்டது. வெள்ளம் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணமாக இருந்தது. அது செயற்கை வெள்ளம். இப்போது இது இயற்கையாக ஏற்பட்டது. அதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீரை முன் கூட்டியே திட்டமிட்டு திறந்த காரணத்தால் தான் இத்தகைய பெருமழையை சமாளித்து உள்ளோம். இத்தகைய பெருமழை பெய்த நிலையிலும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.

     

    இதனால் சென்னையில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம், அடையார் ஆற்றில் தடையின்றி சென்று கடலில் கலக்க முடிந்தது. ஆனாலும் சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட மழை பாதிப்பை அவ்வப்போது நான் கேட்டறிந்தேன்.

    பெரும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானாலும், ஒரு ஆட்சியின் உண்மையான கடமை என்பது இந்த இன்னல்களின் தாக்கத்தை குறைப்பதோடு அதில் இருந்து மக்கள் வெளிவர தேவையான முயற்சி மேற்கொள்வதே ஆகும்.

    இந்த மழையிலும் அனைத்து தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் களத்தில் இயல்பு நிலை திரும்ப பணியாற்றி வருகின்றனர். அதனால் சென்னையில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது.

    ரூ.4 ஆயிரம் கோடிக்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் பெரிய குற்றச்சாட்டை கூறி வருகிறார். நான் சொல்கிற ஒரே பதில் என்னவென்றால் இதை அரசியலாக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதால் நான் சொல்ல விரும்புவது, ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணிகள் நடந்திருந்த காரணத்தால் தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத 47 வருடமாக பார்க்காத மழையை நாம் இப்போது பார்த்திருக்கிறோம்.

    அதில் இருந்து சென்னை தப்பியது என்றால் திட்டமிட்டு செலவு செய்து அந்த பணிகளை நிறைவேற்றிய காரணத்தால்தான் இன்று சென்னை தப்பி உள்ளது. அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

    அவர்கள் காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2 ஆண்டு காலத்தில் இந்த பணிகளை செய்துள்ளோம். வரலாறு காரணாத மழை வெள்ளத்தால் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ரோடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனால் மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய், உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் இன்று எழுத போகிறோம். இதுகுறித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களும் பேச இருக்கிறார்கள். மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர். முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை கொடுத்ததற்கு மக்கள் நன்றாக ஒத்துழைத்தனர்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் உடன் இருந்தனர்.

    • தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
    • தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் ‘டிரா’ செய்தாலே அரைஇறுதிக்கு நுழைந்துவிடும்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகள் பெற்றும், மலேசியா 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. சீனா 1 டிரா , 3 தோல்வியுடன் 1 புள்ளியுடன் வாய்ப்பை இழந்தது.

    நடப்பு சாம்பியன் தென்கொரியா 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஜப்பான் 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன அரை இறுதியில் நுழைவதற்கான எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் இந்த 3 அணிகளும் இருக்கின்றன.

    இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான்-சீனா( மாலை 4 மணி), மலேசியா-தென் கொரியா (மாலை 6.15 மணி), இந்தியா-பாகிஸ்தான் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்க்கிறார்.

    தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் 'டிரா' செய்தாலே அரைஇறுதிக்கு நுழைந்துவிடும். ஜப்பான் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தோற்றாக வேண்டும்.

    அப்படி நிகழ்ந்தால் 3 அணிகளும் 5 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். கோல்கள் அடிப்படையில் 2 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். கோல்கள் வித்தியாசத்தில் ஜப்பான் பின்தங்கி காணப்படுகிறது.

    ஜப்பான்-சீனா அணிகள் மோதும் போட்டிக்கு பிறகே கொரியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டம் நடக்கிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையில் இரு அணிகளும் விளையாடும். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    • செல்வ பிரபு கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.
    • ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    சென்னை:

    ஆசிய தடகள சம்மேளனத்தின் சிறந்த வீரராக (20 வயதுக்கு உட்பட்டோர்) தமிழகத்தை சேர்ந்த டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) வீரர் செல்வ பிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இந்த விருதை பெறும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

    மதுரையை சேர்ந்த 19 வயதான செல்வ பிரபு கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார். ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.

    ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வபிரபுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மென்மேலும் புதிய சாதனைகளை படைத்து தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபுக்கு பாராட்டுகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரியானா அணியை வென்று, முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
    • கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

    சென்னை:

    27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டி, பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரியானா அணியை வென்று, முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் டி.தேவி, என்.சவுமியா, பி. தனலட்சுமி, எஸ்.கவுசல்யா, என்.லாவண்யா, எம்.பவித்ரா, பி.துர்கா, எஸ்.சண்முகப்பிரியா, எம்.சுபாஷிணி, எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர். வினோதினி, எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா, பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி, என். அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் எஸ். கோகிலா மற்றும் வி. கலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த அணியில் உள்ள 12 வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர்கள்.

    தங்க கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று, முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என முக ஸ்டாலின் கூறினார்.
    • கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.

    சச்சின் டெண்டுல்கரின் 50-வது பிறந்தநாளன இன்று, அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வர் முக ஸ்டாலின் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர்.
    • கலைஞர் வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் நானும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைவரும் கிரிக்கெட் விளையாடினோம்.

    சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போதும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

    அவர் கூறியதாவது:-

    நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரோட இல்லத்தில் தான். எனது தந்தை முதல்வர் முக ஸ்டாலின் மேயர் ஆனதும் வேளச்சேரிக்கு சென்று விட்டோம். நான் சிறு வயதாக இருக்கும் போது கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் நானும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவோம்.

    கலைஞருடனும் கிரிக்கெட் விளையாடிருக்கிறேன். வருவாங்க பந்து வீசிட்டு பேட் செய்து விட்டு போயிருவாங்க. கலைஞர் மட்டும் இல்ல தற்போதைய முதல்வர் முக ஸ்டாலினுடனும் விளையாடி இருக்கிறேன். முதல்வர் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர். அவர் பந்து வீசினா யாராலும் அடிக்கமுடியாது.

    இங்க எப்படி சிக்சர் அடிக்கிறாரோ அதுபோலதான் பவுலிங்லயும் சிறப்பாக செயல்படுவார்.


    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்டையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது.

    ×