search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai chepauk stadium"

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
    • இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தேதி அறிவிகப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இடத்தில் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3, 4, 5-வது இடங்கள் முறையே சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிஎஸ்கே, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி காலை 10:40 மணிக்கு தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி சென்னை - மும்பை அணிகள் மோதுகிறது.
    • ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.

    • சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்டையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது.

    • சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்- அமைச்சர் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.
    • விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் 2011 உலக கோப்பை போட்டியையொட்டி புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலயன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டது.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். கலைஞர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ள ஸ்டாண்டை அவர் திறந்து வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்ட போது அதை கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது அவரது பெயரிலான பெவிலியனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் முதல் போட்டியாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.

    • சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம் எஸ் டோனியின் மிக பெரிய கட் அவுட் ஒன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    16-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கங்களில் சென்னை ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக அடிக்கடி தல டோனியின் பயிற்சி வீடியோ மற்றும் காமெடி, நடனம் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


    இதனை மிஞ்சும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்எஸ் டோனியின் மிக பெரிய கட் அவுட் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னை ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது.
    • இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை இந்திய பிரதமரும் ஆஸ்திரேலிய பிரதமரும் தொடங்கி வைத்தனர்.

    டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதியும் நேரடி டிக்கெட் விற்பனை 18-ந் தேதி காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.

    இதற்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1200-ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.10000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகள் திறக்கப்படாத பிரச்சனை காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் ‘லீக்’ ஆட்டத்திற்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டது. ‘பிளேஆப்’ சுற்றுக்கான தேதி, இடம் ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே மற்றும் கே ஆகிய 3 கேலரிகள் மூடப்பட்டு இருக்கிறது.

    இந்த கேலரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த 3 கேலரிகளில் 12 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம். இந்த பிரச்சினை காரணமாக இறுதிபோட்டி சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம்.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்ராய் மற்றும் உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவிதோக்டே, தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா உள்ளிட்டோர் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை செய்தனர். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    சென்னை, ஐதராபாத்தில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் நடத்தப்படலாம். #IPL2019
    கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக 8 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். #INDvWI #WIvIND #chennaichepaukstadium
    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கடைசி 20 ஒவர் போட்டி நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெங்களூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் நேற்று முன்தினம் பிடிபட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போக்குவரத்து போலீஸ்காரர் முத்துவே இந்த டிக்கெட்டுகளை விற்பனை செய்ய சொன்னார் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து போலீஸ்காரர் முத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளையும் சிலர் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அன்பளிப்பு டிக்கெட்டுகளை வாலிபர்கள் சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது போன்று 8 பேர் பிடிபட்டனர்.

    இவர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். தங்களுக்கு கிடைத்த அன்பளிப்பு டிக்கெட்டுகளையே இவர்கள் விற்பனை செய்ததது தெரிய வந்துள்ளது. #INDvWI #WIvIND #chennaichepaukstadium
    ×