search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டனம்"

    • ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சறற் நினைக்கிறது பாஜக அரசு.
    • ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி.

    கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக கூறுவது அப்பட்டமான பொய்க்கணக்கு எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு.

    இது அப்பட்டமான பொய்க்கணக்கு!

    இதில் இரண்டு கூறுகள் உள்ளன:

    1) மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.

    மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

    இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே! 

    2) மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

    இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?

    இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,

    ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,

    சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.

    இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

    இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!

    தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?

    எங்கள் காதுகள் பாவமில்லையா!

    • ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
    • உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கலாம் என்றும் ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சனா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்து வரும் அவர்கள் செங்கடல் பகுதியில் சமீபகாலமாக இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை உடனே நிறுத்துமாறு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கப்பல்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.

    ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து ஏமன் நாட்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் இணைந்து கடுமையான வான் வெளி தாக்குதலில் ஈடுபட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் இருநாட்டு படைகளின் போர் விமானங்கள், போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் ஈடுபட்டது. இதில் 5 பேர் பலியானதாகவும். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் 2-வது நாளாக மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுமனை சுற்றி வளைத்து இந்த தாக்குதல் நடந்தது. கடந்த 48 மணி நேரத்தில் 73 குண்டு வீச்சுகள் நிகழ்ந்ததாகவும், இதனால் உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கலாம் என்றும் ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் தாக்குதலால் ஏமனில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி கூறும் போது ஹவுதி கிளர்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்தி வரும் தாக்குதல் தன்னிச்சையான நடவடிக்கையாகும், இது சர்வதேச சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

    செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதலை தொடர்ந்தால் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஹவுதி மீதான தாக்குதலால் கச்சா எண்ணை விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்துவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
    • 2 கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்துவது அது உங்களுக்கே திரும்பிவிடும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கின்ற தி.மு.க. அரசை எதிர்த்து அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடியார் தினந்தோறும், அறிக்கை வாயிலாகவும், சட்டமன்றத்திலும் உரிமை குரலை எழுப்பி வருகிறார்.

    ஆனால் தி.மு.க.வை இன்றைக்கு சிலர் துதி பாடுகிற ஒரு நிலையை பார்க்கிறபோது நமக்கு வேதனையாக இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் திருநாமத்தை சொல்லி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சொல்லி வளர்ந்தவர்கள், அம்மாவின் அடையாளம் என்று வாழ்ந்தவர்கள், இன்றைக்கு அம்மாவின் மரணத்திற்கு காரணமாக அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை, கொடுக்கப்பட்டிருக்கிற அந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துதி பாடும் நிலையில் உள்ளனர் இதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும், தமிழக மக்களும் இன்றைக்கு எள்ளி நகையாடுகிறார்கள்.

    இன்றைக்கு மக்களால் கைவிடப்பட்டவர்கள், தொண்டர்களால் கைவிடப்பட்டவர்கள், கழக நிர்வாகிகளின் நம்பிக்கை இழந்தவர்கள், இந்த இயக்கத்திற்கு தொடர்ந்து இடையூறாக இருப்பவர்கள் ஏன் இன்னும் ஒரு படி மேலே, புரட்சித் தலைவர் மாளிகையை தன் காலால் எட்டி உதைத்த கயவர்கள், அம்மாவே தெய்வம் கழகமே கோயில் என்று வாழ்ந்து வருகிற தொண்டர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு குண்டர்களும் இருந்து நமக்கு வேதனை அளிக்கிறது.

    அரசியலிலே நிலை நிறுத்திக் கொள்வதற்காக எதிரிகளிடம் உண்மை தொண்டர்களை, விசுவாசத்தொண்டர்களை அடமானம் வைத்து, தங்கள் வாழ்வை உயர்த்தி கொள்வதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து, இன்றைக்கு கடைசி முயற்சியாக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்லுகிறார்கள்.

    எதற்காக இந்த போராட்டத்தை இன்றைக்கு நீங்கள் நடத்துகிறீர்கள் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? இந்த சம்பவத்தில் வழக்குகளை பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அதனு டைய குற்றவாளிகளை நீதிமன்றத்திலே அங்கே சமர்ப்பித்து அந்த சட்ட நடவடிக்கை எல்லாம் உங்களுக்கு தெரியாதா? அப்போதெல்லாம் நீங்கள் எங்கே அமெரிக்கா ஐக்கிய நாட்டுல இருந்தீர்களா? ஜப்பானில் இருந்தீர்களா? இன்றைக்கு போராட் டத்திற்கு தலைமை தாங்குகிற நீங்கள் (ஓ.பன்னீர் செல்வம்) தானே அன்றைக்கு இருந்த இத்தனை நடவடிக்கை களுக்கும் முக்கிய பொறுப் பாளராக இருந்து அன்றைக்கு நீங்கள் இதை வழிநடத்துவதையும் நீங்கள் வரலாற்றை மறைத்து விட முடியாது.

    எடப்பாடியாருக்கு எதிராக போராட தொண்டர்களை நீங்கள் பங்கேற்க செய்வதற்கு எடுக்கிற முயற்சி எல்லாம் தோல்வில்தான் முடியும்.

    8 கோடி தமிழர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கின்ற எடப்பாடியாரை நீங்கள் அவதூறு செய்யலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகும்.

    தி.மு.க.வின் ஊது குழலாக மாறி நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2 கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்துவது அது உங்களுக்கே திரும்பிவிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மணிப்பூர் பழங்குடியினர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்தனர்.
    • மனிதம் மரித்துப்போக செய்த இந்த கொடூர சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

    தொண்டி

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா–அத் பொதுச்செயலா–ளர் அப்துல்கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-

    மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. பல உயிர்கள் பறிக்கப்பட்டு, மக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்தியர்க–ளுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மணிப் பூர் மாநிலத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த வன்மு–றைக் கும்பல், குக்கி பழங்கு–டியினத்தை சேர்ந்த மூன்று பெண்களை நிர்வாணப்ப–டுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர–மான வீடியோ சமூக வலைத் தளங்களில் தற் போது பரவி வருகிறது.

    இந்த வீடியோவைப் பார்க்கும் போது காட்டு–மிராண்டிகள் வாழும் தேசத்தில் நாம் வாழ்கிறோமா என்று வெட்கப்படக்கூடிய அளவிற்கு அந்தப் பெண்க–ளைச் சித்திரவதை செய்து நிர்வாணமாக அழைத்துச் செல்கின்றனர். கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெறும் பாசிச அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்க வாய்ப் பில்லை.

    மனிதம் மரித்துப்போகச் செய்த இந்தக் கொடூர சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் என அனைத் துத் தரப்பு மக்களும் இதற்குத் தங்களது கண்ட–னங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

    மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவத்தைப் போன்று எத்தனை சம்பவம் நடந்தது என்றே தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.

    உலக அரங்கில் இந்தியர்க–ளைத் தலை குனிய செய்த–வர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண் டும். இனியும் தாமதிக்கா–மல் மணிப்பூர் கலவரம் முடி–வுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் குஜராத் மாநி–லத்தைச் சார்ந்த பல்கீஸ் பானுவிற்கு எதிரான குற்ற செயலில் ஈடுபட்டவர்க–ளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போன்று இல்லாமல் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லண்டனில் பென்னிகுயிக் சிலை மூடல்; தமிழகத்துக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று வயலூரில் அன்ன தானம் நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஜீவாதார உரிமையாக இருக்கிற முல்லைப் பெரியாறு அணையை கட்டிய, ஜான்பென்னிகுயிக் சிலை தமிழக அரசின் சார்பில் லண்டனில் அமைக்கப் பட்டது.

    லண்டன் கேம்பர்லியில் உள்ள பென்னிகுயிக் சிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். அப்போது இங்கிலாந்து ராணி இறந்து விட்டதால், அந்த விழாவை சம்பிரதாயமாக நடத்தினார்.

    இந்த சிலை அமைக்கவும், பராமரிக்கவும் அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ10.65 லட்சம் ஒதுக்கியது. ஆனால். கூடுத லாக ரூ.28 லட்சம் செலவாகி விட்டதாக கூறி பாக்கி தொகை கேட்டு சிலை மூடப்பட்டுள்ளது.

    அந்த தனியார் நிறுவ னத்திற்கு அரசு பாக்கி வைத்துள்ளதா? அரசு நிர்ணயித்ததை விட அந்த கூடுதல் செலவை தமிழக அரசு கொடுக்க முன் வந்ததா? கொடுத்ததா? இதில் தமிழக அரசு அவர்களை ஏமாற்றியதா? அல்லது தனியார் நிறுவனம் தமிழக அரசை ஏமாற்றி இருக்கிறார்களா? என்பதெல்லாம் இன்று விவாதமாக இருக்கிறது. இது தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக தன் சொத்து களை விற்று இன்றும் உறுதியாக, பாது காப்பாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்த ஜான் பென்னிகுயிக் சிலை யை மீண்டும் லண்டனில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • இத்தகையை நடவடிக்கைகள் மூலம் பா.ஜனதாவின் கனவு நனவாகாது என்றார்.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை ஏவி விடுவது ஒன்றிய பா.ஜனதா அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் மத்திய அரசு காலில்போட்டு மிதித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இது அமலாக்கத்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஒன்றிய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடாகவே இச்செயல் அமைந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பா.ஜனதாவின் கனவு நனவாகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேராயர் ஜோசப் பாம்பிளானியின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • ஜோசப் தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி. இவர் மத்திய அரசு ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

    இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஆளும்கட்சியினர் கொண்டாடும் தியாகிகள் தினத்தில், போலீசுக்கு பயந்து பாலத்தில் இருந்து விழுந்து இறந்தவரெல்லாம் தியாகிகள் ஆக கொண்டாடப்படுகிறார்கள், என்றார்.

    பேராயர் ஜோசப் பாம்பிளானியின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூத்த நிர்வாகி ஜெயராஜன் கூறும்போது, பேராயர் ஜோசப் பாம்பிளானி எப்போதுமே தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார்.

    • அ.தி.மு.க.வின் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்தி வருகிறார்.
    • இதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    கள்ளக்குறிச்சி:

    அ.தி.மு.க.வில் அடிப்ப டை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வின் சின்ன மான இரட்டை இலை சின்னத்தை பற்றி பேசி வருவதை கண்டித்து உளுந்தூ ர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்ட ப்பட்டுள்ளன.கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீ ர்செல்வத்தை கோமாளி போல சித்தரித்து அவரை கண்டித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை பொது மக்கள் நின்று கவனித்து சென்று வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை முதலே உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் இது குறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொழிலாளர்க ளுக்கு எதிரானது.
    • கம்யூனிஸ்ட்கள் ஆளும் கட்சியுடன் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர்.

    திருப்பூர் :

    பாரதிய மஸ்தூர் சங்கத்தின்தென்பாரத அமைப்பு செயலாளர் எஸ். துரைராஜ் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2023 ஏப்ரல் 21 ந் தேதி அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொழி லாளர்க ளுக்கு எதிரானது. இத்திருத்த த்திற்காகவெளி நடப்பு செய்த எதிர்க் கட்சிக ளின்நடவடிக்கை வெறும் நாடகம் மட்டும்தான். தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 65 A-ல் திருத்தம்கா ரணமாக 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். எந்த வொரு தொழி ற்சாலை அல்லது நிறு வனம் விரும்பி னால் இதை நடைமுறை படுத்த முடியும் .12 மணி நேரம் வேலை செய்ய சொன்னால் தொழிலா ளர்களால் மறுக்க இயலாது. அதிலும் குறிப்பாக பெரும்பான்மை யான வர்கள் ஒப்பந்த அடிப்ப டையில் தான் நியமிக்கப்ப ட்டுள்ள நிலை யில்தொழி லாளர்கள் விரும்பி னால் மட்டுமே என்பதெல்லாம் வெறும் வா ர்த்தைஜாலம் மட்டுமே. எனவே இதை பாரதிய மஸ்தூர் சங்கம்கடு மையாக எதிர்க்கிறது. இச்சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கம் வலியு றுத்து கிறது.இது ஒரு புறமிருக்க இச்சட்ட திருத்தத்திற்கு எதிராக வெளி நடப்பு செய்த கம்யூனிஸ்டுகள் ஆட்சிபுரியும் கேரள மாநில த்தில் பல துறைகளில் 12 மணி நேர வேலை நடைமுறை படுத்தப்ப ட்டுள்ளது. தனியார் மயம், தாராளமயம், உலக மயம், ஆகிய கொள்கை களை எதிர்ப்ப தாககூறும் கம்யுனி ஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஆளும், ஆண்ட மாநிலங்க ளில் நடைமுறைப் படுத்தி யுள்ளனர். காங்கிரஸ்க ட்சியும் அதற்கு துணை போகிறது.

    இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள் ஆளும் கட்சியுடன் சேர்ந்து நாட கம்நடத்துகின்றனர்.அல்லது பொது மக்களை ஏமாற்று கின்றனர்.கூடவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும்அனைத்து மாநிலங்க ளிலும் இச்சட்டம் அமலாகியுள்ளதுஎன்பது அப்பட்டமான பொய் என்பது மட்டுமல்ல மக்களைஏமாற்றும் கீழ்த்தரமான அரசியல் என்றார்.

    • ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • இதனால் ராகுல் காந்தியில் எம்.பி. பதவி பறிபோனது.

    விழுப்புரம்:

    விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணெநல்லூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தியில் எம்.பி. பதவி பறிபோனது.

    இதனை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி சீனிவாசகுமார் ஆலோசனைப்படி, திருவெண்ணெநல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் தலைவர் சேகர் தலைமையில் நகர தலைவர் குமரேசன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்
    • மாவட்ட கலெக்டரிடம் கண்டன மனு அளிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கொடுமைப்படுத்திய ராஜஸ்தான் அரசை கண்டித்தும், டாக்டர்களை பாதிக்கும் மசோதாவை உடனடியாக ராஜஸ்தான் மாநில அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். பின்னர் மாலை அந்த சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தனர்.

    • பத்திர பதிவு கட்டணம் குறைப்பு கண்துடைப்பு என்று ராமநாதபுரம் தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பயனடைய போவதில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பட்ஜெட்டில் பத்திர பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு ஆகும். காரணம், சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பயனடைய போவதில்லை. இந்த சலுகை உண்மையில் மக்களை சென்றடைய வேண்டும் என்று அரசு எண்ணியிருந்தால் வழிகாட்டு மதிப்பீட்டை உயர்த்தி இருக்கமாட்டார்கள். திராவிட கட்சிகளின் கை வந்த கலைகளில் இதுவும், இதுபோன்ற பலவும் உண்டு. மக்களை முட்டாளாக்கும் இத்தகைய முயற்சிகளை வாக்காளர்கள் அறிவார்கள் என்பதை காலம் நிச்சயம் உணர்த்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×