என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக நிர்வாகி"

    • பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
    • தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

    பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின் அவர்களைப் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய மர்ம நபர்கள் முயற்சித்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    பட்டப்பகலில் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மாநிலத்தைச் சீர்படுத்த வேண்டிய திமுக அரசு விளம்பரத்தில் ஒரு புறம் மூழ்கியுள்ளது என்றால், மறுபுறம் குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறி வேடிக்கை பார்த்து வருகிறது.

    மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் தலைவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத இந்த திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

    மாநிலத்தின் அமைதியிலும், மக்கள் பாதுகாப்பிலும் சிறிதும் அக்கறை இருந்தால், பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக சக்கரவர்த்தி செயல்பட்டு வந்தார்.
    • தலையில் காயத்துடன் சக்கரவர்த்தி உடல் மீட்கப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவராக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வழக்கறிஞர் சக்கரவர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    தலையில் காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில் சக்ரவர்த்தி இறப்பு கொலையா, விபத்தா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
    • ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் அன்புமணி கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்நிலையில், ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாமக நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பனையூர் அலுவலகத்தில் நாளை முதல் ஞாயிறு வரை பாமக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை பாமக தலைவர் அன்புமணி சந்திக்கிறார்.

    மாவட்டம் தோறும் புதிய உறுப்பினர் அட்டைகளை அன்புமணி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் அன்புமணி கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து போராட்டம்.
    • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு.

    செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    உடலை வைத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து போராட்டம்.
    • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு.

    செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலலவியது

    உடலை வைத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்நிலையில், பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    தப்பியோடிய கும்பலில் அஜய் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் காயமடைந்த அஜய் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
    • கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ்(வயது46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளராக இருந்தார். இவர் செங்கல்பட்டு நகரில், மணி கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் நாகராஜ் பூக் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நாகராஜை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து நாகராஜ் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் நாகராஜின் உறவினர்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். நாகராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்? கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

    அப்போது கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இதற்கிடையே இரவு 11.30 மணியளவில் கொலையாளிகளில் ஒருவன் செங்கல்பட்டு அடுத்த புலிபாக்கம் பகுதியில் ரெயில்வேபாதை அருகே தப்பி செல்வது தெரிந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜா மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.

    மேலும் பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் மீது கற்களை வீசியும் மற்றும் மறைத்து வைத்திருந்த கத்தியாலும் தாக்க முயன்றார்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த வாலிபர் மீது ஒரு ரவுண்டு சுட்டார். இதில் வாலிபரின் இடது காலில் குண்டு துளைத்து சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. அவரது காலில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. அவருக்கு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அங்கு டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வன், சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படுகிறது.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். பா.ம.க. பிரமுகர் கொலையில் இதுவரை 3 பேர் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ம.க. பிரமுகர் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் சுட்டுபிடித்து உள்ள சம்பவம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நாகராஜ் கொலையை கண்டித்து இன்று காலை வணிகர் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் மறியலில ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். செங்கல்பட்டு நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தனர்.
    • விஜிக்கு இடதுகை, கால் முறிந்தது. சூர்யாவுக்கு வலது கால் முறிந்து போனது.

    செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ்.பா.ம.க. நகர செயலாளராக இருந்த அவர் கடந்த 9-ந்தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அஜய் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மேலும் சூர்யா, காவூர் விஜி, கார்த்திக் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் சூர்யா, காவூர் விஜி ஆகியோரை தனிப்படை போலீசார் மாமண்டூர் பாலாற்று பாலத்தில் வைத்து சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் விஜிக்கு இடதுகை, கால் முறிந்தது. சூர்யாவுக்கு வலது கால் முறிந்து போனது. அவர்களை போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×