என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டில் பாமக நகர செயலாளர் நாகராஜ் வெட்டிக் கொலை
- செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து போராட்டம்.
- குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு.
செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
உடலை வைத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Next Story






