என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் இளைஞர் காங்கிரஸ் கூட்டம்: ஓசூர்-கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரெயில் திட்டத்தை கொண்டு வந்தவர் செல்லகுமார் எம்.பி. -தவறான தகவலை பரப்புவதா?-பா.ஜனதா செய்தி தொடர்பாளருக்கு கண்டனம்
- மாவட்ட இளைஞர்காங்கிரஸ் கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட இளைஞர்காங்கிரஸ் கூட்டம் மாவட்ட தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், தமிழ்நாடு இளைஞர்காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வருகிற 16-ந் தேதி மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்துவது, ஓசூர்-கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரெயில் திட்டம் வர கடுமையாக பாடுபட்ட காங்கிரஸ் எம்.பி., செல்லகுமாருக்கு பாராட்டு தெரிவிப்பது, இத்திட்டத்தை, தான்கொண்டு வந்ததாக கூறும் பா.ஜனதா செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நரசிம்மனுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜ்குமார், பர்கூர் சட்டசபை தொகுதி தலைவர் கார்த்திக், அஜித் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






