search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சேப்பாக்கம் மைதானம்"

    • நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 26-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • முதல் தகுதிச் சுற்று எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் கொண்ட விவரம் வெளியானது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து மீதமுள்ள அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 26-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    முதல் தகுதிச் சுற்று எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22-ம் தேதிகளிலும் 2-வது தகுதிச் சுற்றுப் போட்டி மே 24-ந் தேதி மற்றும் இறுதிப்போட்டி மே 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இரு போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி சென்னை - மும்பை அணிகள் மோதுகிறது.
    • ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.

    • சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்டையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது.

    • சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம் எஸ் டோனியின் மிக பெரிய கட் அவுட் ஒன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    16-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கங்களில் சென்னை ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக அடிக்கடி தல டோனியின் பயிற்சி வீடியோ மற்றும் காமெடி, நடனம் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


    இதனை மிஞ்சும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்எஸ் டோனியின் மிக பெரிய கட் அவுட் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னை ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது.
    • இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை இந்திய பிரதமரும் ஆஸ்திரேலிய பிரதமரும் தொடங்கி வைத்தனர்.

    டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதியும் நேரடி டிக்கெட் விற்பனை 18-ந் தேதி காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.

    இதற்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1200-ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.10000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ×