search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்கிறார் முதலமைச்சர்
    X

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்க்கிறார் முதலமைச்சர்

    • தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
    • தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் ‘டிரா’ செய்தாலே அரைஇறுதிக்கு நுழைந்துவிடும்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகள் பெற்றும், மலேசியா 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. சீனா 1 டிரா , 3 தோல்வியுடன் 1 புள்ளியுடன் வாய்ப்பை இழந்தது.

    நடப்பு சாம்பியன் தென்கொரியா 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஜப்பான் 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன அரை இறுதியில் நுழைவதற்கான எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் இந்த 3 அணிகளும் இருக்கின்றன.

    இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான்-சீனா( மாலை 4 மணி), மலேசியா-தென் கொரியா (மாலை 6.15 மணி), இந்தியா-பாகிஸ்தான் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்க்கிறார்.

    தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் 'டிரா' செய்தாலே அரைஇறுதிக்கு நுழைந்துவிடும். ஜப்பான் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தோற்றாக வேண்டும்.

    அப்படி நிகழ்ந்தால் 3 அணிகளும் 5 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். கோல்கள் அடிப்படையில் 2 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். கோல்கள் வித்தியாசத்தில் ஜப்பான் பின்தங்கி காணப்படுகிறது.

    ஜப்பான்-சீனா அணிகள் மோதும் போட்டிக்கு பிறகே கொரியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டம் நடக்கிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையில் இரு அணிகளும் விளையாடும். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    Next Story
    ×