search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • வாக்குப்பதிவு முடிந்து வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை அறிவிப்பதில் முரண்பாடு என விமர்சனம்.
    • தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை மாற்றியதாக கட்சிகள் விமர்சனம் செய்தன.

    மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும் தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதத்தை தெரிவிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு எவ்வளவு எனத் தெரியவந்தது. மேலும், முதலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் எனத் தெரிவித்தனர். பின்னர் பதிவான வாக்கு சதவீதம் அதிகரித்து வெளியிடப்பட்டது.

    இதனால் 48 மணி நேரத்திற்குள் பூத் வாரியாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என என்ஜிஓ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்த்ரா சர்மா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக் வந்தது. அப்போது நீதிபதிகள் "ஏற்கனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், நாங்கள் அதில் தலையிடமுடியாது. முக்கியமான ரிட் மனுவுடன் இந்த மனு சேர்ந்து விசாரிக்கப்படும்.

    தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நீதித்துறை அதில் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தால் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் செயல்முறையை பாதிக்கும். அமைப்பு (தேர்தல் ஆணையம்) மீது கொஞ்ச் நம்பிக்கை வைப்போம்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான தேர்தல்.
    • உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும். பணவீக்கத்தை குறைக்கும்.

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஏழு மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நாளை மறுதினம் 25-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு (ஆம் ஆத்மி) வாக்களித்து ஏழு தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என டெல்லி மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சோனியா காந்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தில் கூறியிருப்பதாவது:-

    இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதலை எதிர்த்து போரிடுவதாகும். இந்த போரில் உங்களுடைய பங்கை நீங்கள் ஆற்ற வேண்டும்.

    உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும். பணவீக்கத்தை குறைக்கும். பெண்களுக்கு அதிகாரத்தை வழங்கும். பிரகாசமான எதிர்காலத்தோடு சமநிலையை உருவாக்கும். டெல்லியில் உள்ள ஏழு தொகுதியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

    இவ்வாறு அந்த வீடியோவில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    • 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
    • இதில் ஆண்கள் 61.48 சதவீதமும் பெண்கள் 63 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிகளில் 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், 5ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 62.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஆண்கள் 61.48 சதவீதமும் பெண்கள் 63 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.

    மாநில வாரியாக விவரங்கள்:

    பீகார்- 56.76 சதவீதம்

    மகாராஷ்டிரா- 56.89 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 78.45 சதவீதம்

    ஒடிசா - 73.50 சதவீதம்

    ஜார்கண்ட்- 63.21 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர்- 59.10 சதவீதம்

    லடாக்- 71.82 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 58.02 சதவீதம்

    • நான் உயிரோடு இருக்கும் வரை தலித்கள் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.
    • காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை.

    பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் மகேந்திரகார்ஹில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    அரியானா என் மீது ஏராளமான அன்பை காண்பித்துள்ளது. உங்களுடன் ஆழமான உறவை நான் கொண்டுள்ளேன். நீங்கள் நாட்டின் பிரதமரை மட்டும் தேர்வு செய்யாமல், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பீர்கள்.

    ஒருபக்கம் நீங்கள் முயற்சி செய்து சோதித்த சேவகன் மோடி. மறுபக்கத்தில் தலைமை தாங்குவது யாரென்றே தெரியவில்லை.

    இந்தியா கூட்டணி வகுப்புவாதம், ஜாதி மற்றும் குடும்ப அரசியலை கொண்டுள்ளது. நான் உயிரோடு இருக்கும் வரை தலித்கள் மற்றம் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.

    இந்தியா கூட்டணி ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் பற்றி பேசி வருகிறது. இது பசு பால் கொடுக்கவில்லை. ஆனால், நெய்க்கு சண்டை தொடங்கிவிட்டது என்பதுபோது உள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அரியானா மாநிலத்தில் 10 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி (நாளைமறுதினம்) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • 8,337 வேட்பாளர்களில் 797 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.
    • முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் 135 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.

    மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. ஏழாம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த மக்களவை தேர்தலில் 8,337 வாக்காளர்கள் களம் காண்கிறார்கள். இதில் 9.55 சதவீத பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தரவுகளை பகிர்ந்துள்ளது.

    8,337 வேட்பாளர்களில் 797 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தலில் அதற்கான சாத்தியம் இல்லாமல் போனது. அதற்கு காரணம் மசோதா இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான்.

    முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் 135 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். இது 10 சதவீதத்திற்கும் குறைவு. இதேபோல்தான் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தலிலும் தொடர்ந்தது.

    2-வது கட்ட தேர்தலில் 1,198 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 100 பெண் வேட்பாளர்கள்.

    3-வது கட்ட தேர்தலில் 1,352 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 123 பெண் வேட்பாளர்கள்.

    4-வது கட்ட தேர்தலில் 1,717 பேரில் 1,710 வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்ததில் 170 பெண் வேட்பாளர்கள்.

    5-ம் கட்ட தேர்தலில் 695 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 82 பெண் வேட்பாளர்கள்.

    6-ம் கட்ட தேர்தலில் 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 92 பெண் வேட்பாளர்கள்.

    கடைசி கட்ட தேர்தலில் 904 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 95 பெண் வேட்பாளர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார்.
    • அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார்.

    பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது, சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனக் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பிரதமர் தனது நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார். உண்மை மீது அவருக்கு ஒருபோதும் பற்று இருந்ததில்லை.

    அவர் ஒரு பொய்யர் (jhoothjeevi). இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார். அவர் மங்களசூத்ரா பற்றி பேசுகிறார். அவர் முஸ்லிம் லீக் பற்றி பேசுகிறார். காங்கிரஸ் கட்சி மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கிறது என பேசுகிறார். இவை அனைத்தும் அவர் கூறிய பொய்யானவை.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால் மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள்.
    • ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை.

    தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்தார். அப்போது மக்களவை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து தனது பார்வையை தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜூன் 4-ந்தேதி முடிவு என்னதாக இருக்கும் என்பதை எதிர்காலம் காட்டும். ஆனால் பத்திரிகையாளரக்ள், நிபுணர்கள் போன்றோர் தங்களது கருத்துகளை கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்த வரையில், நிலைத்தன்மை (தொடர்ந்து விசயத்தை கூறுவது) சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன்.

    கடந்த ஐந்து மாதங்களாக நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்பது விசயம் இல்லை. பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறேன். கடந்த தேர்தலில் பிடித்த அதே இடங்களை பிடிக்கும் அல்லது கூடுதலாக சில இடங்களை பிடிக்கும்.

    அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை. ஏமாற்றங்கள், ஆசைகள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாடு தழுவிய கோபத்தை கேட்கவில்லை.

    இந்த நபர் ஆட்சிக்கு வந்தால் நம்முடைய நிலை முன்னேற்றம் அடையும் என மக்கள் உணர்வதாக வைத்துக் கொண்டால் ராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை. அவருடைய ஆதரவாளர்கள் சொல்லலாம். நான் நாடு தழுவிய அளவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

    பதவியில் இருப்பவருக்கு எதிராக பரவலான கோபமோ அல்லது சவாலாக இருக்கும் எதிர்ப்பு குரலோ இல்லை. அதனால் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.

    கிழக்கு மற்றும் தெற்கில் சுமார் 225 இடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பா.ஜனதா மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. 50-க்கும் குறைவான இடங்களைத்தான் தற்போது வைத்துள்ளது. அவர்கள் தோல்வியடைந்தால், அவர்கள் வடக்கு மற்றும் மேற்கில் சறுக்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது அவசியம். என்னுடைய மதிப்பிட்டின்படி அப்படி இல்லை. ஆனுால், கிழக்கு மற்றும் தெற்கில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

    இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    • பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
    • பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.

    பாலிவுட் நடிகர்களான சாரா அலிகான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.

    இந்நிலையில் இந்திய குடியுரிமை இல்லாததால் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.

    பிரிட்டிஷ் குடியுரிமை காரணமாக நடிகைகள் ஆலியா பட், கத்ரீனா கைஃப் மற்றும் அமெரிக்கா குடியுரிமை காரணமாக நடிகர் இம்ரான் கான், சன்னி லியோன் மற்றும் இலங்கை குடியுரிமை காரணமாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் போர்த்துகீசிய குடியுரிமை காரணமாக இலியானா ஆகியோர் வாக்களிக்க வில்லை.

    • பா.ஜனதா மெஜாரிட்டி பெற்றுவிட்டால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரஸ் பொய்யை பரப்பி வருகிறது.
    • நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில், மோடி ஜி 270 இடங்களை தாண்டிவிட்டார்.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா இன்று அரியானா மாநிலம் ஜாஜ்ஜரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அமித் ஷா பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜனதா மெஜாரிட்டி பெற்றுவிட்டால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரஸ் பொய்யை பரப்பி வருகிறது. இந்த நேரம் வரை பா.ஜனதா பாராளுமன்றத்தில் இருக்கும்வரை யாரும் இடஒதுக்கீட்டை தொட முடியாது. ராகுல் காந்தி தேர்தல் தொடங்குவதற்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். தேர்தல் முடிந்த பிறகு அது காங்கிரஸ் துண்டோ யாத்திரையாகும். தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் உதவியுடன் கூட காங்கிரரை பார்க்க முடியாது.

    நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில், மோடி ஜி 270 இடங்களை தாண்டிவிட்டார். 400-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் பாபா 40 இடங்களை கூட தாண்டாது. ஒரு பக்கம் பிரதமர் மோடி இடஒதுக்கீடடை பாதுக்கும் வேலையில், மறுபக்கம் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது.

    வாக்கு வங்கிக்காக சட்டப்பிரிவு 370-ஐ காங்கிரஸ் நீண்ட காலமாக அப்படியே வைத்திருந்தது. மோடி ஜி 370-ஐ நீக்கி பயங்கரவாதத்தில் இருந்து காஷ்மீரை விடுவிக்க வேலை செய்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. நம்முடையதாக இருக்கும். அதை திரும்பவும் எடுத்துக் கொள்வோம்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • மம்தா சகோதரர் ஹவுரா எம்.பி. மீது அதிருப்தியில் இருந்தார்.
    • பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவியது.

    மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று மேற்கு வங்காள மாநிலம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளது.

    இதில் மேற்கு வங்காளத்தின் ஹவுராவும் ஒன்று. இந்த தொகுதியில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஸ்வாபன் பானர்ஜிக்கு (பாபுன்) வாக்கு உள்ளது.

    இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக பாபுன் வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

    இது தொடர்பாக பாபுன் கூறுகையில் "நான் என்னுடைய வாக்கை செலுத்துவதற்காக சென்றேன். அப்போது என்னுடைய வாக்கு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. நான் பல ஆண்டுகளாக வாக்கு செலுத்தியிருக்கிறேன். இந்த வருடம் வாக்களிக்க முடியாததால் ஏமாற்றம் அடைகிறேன். ஜனநாயக நாட்டின் குடிமகனாக எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது" என்றார்.

    "தேர்தல் ஆணையம் முழு விவரத்தையும் கவனித்து வருகிறது. இது ஏன் நடந்தது என்பது குறித்து விளக்கம் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியும்" என திரிணாமுல் காங்கிரஸ் செய்து தொடர்பாளர் ஷாந்தனு சென் தெரிவித்துள்ளார்.

    ஹவுரா எம்.பி.யாக இருக்கும் பிரசுன் பானர்ஜி மீது தனது அதிருப்தியை பாபுன் தெரிவித்திருந்தார். இதனால் சுயேசட்சையாக போட்டியிடுவார் என செய்தி வெளியானது. மேலும், பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவியது.

    பாபுன் மேற்கு வங்காள மாநில ஒலிம்பிக் சங்க தலைவர், பெங்கால் ஹாக்கி சங்க தலைவர், பெங்கால் குத்துச்சண்டை சங்க செயலாளராக உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுப் பிரவு பொறுப்பாளராகவும் உள்ளார்.

    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.
    • இன்று மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

    5-ம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.

    இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு தொகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.

    இன்றைய தேர்தலில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    இன்று மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், 49 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

    • 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.

    இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பீகார்- 52.35 சதவீதம்

    மகாராஷ்டிரா- 48.66 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 73 சதவீதம்

    ஒடிசா - 60.55 சதவீதம்

    ஜார்கண்ட்- 61.90 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர்- 54.21 சதவீதம்

    லடாக்- 61.26 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 55.80 சதவீதம்

    ×