search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல்"

    • விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
    • தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எத்தனையோ இன்னல்களை சந்தித்த போதிலும் உலகுக்கே உணவளிப்பதை முதன்மை பணியாக செய்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வாய்ப்பாக பொங்கல் திருநாள் அமைந்திருக்கிறது.

    இயற்கையையும், உழைப்பையும் போற்றும் உழவர் திருநாளில், நிலத்தை உழுவதில் தொடங்கி சாகுபடி செய்யும் வரை இரவு பகல் பாராது அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

    அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் என வாழ்த்தி மீண்டும் ஒரு முறை எனது உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும்.
    • அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,

    உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

    உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்தும்; புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்தும், 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவார்கள்.

    பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். அத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.


    தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப்

    பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.
    • சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.

    புதுச்சேரி:

    தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.

    சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.



    தை 1-ந் தேதி (திங்கட்கிழமை) சுக்ல பட்சம், சதுர்த்தி, சதய நட்சத்திரம் 2-ம் பாதம் வியதி பாத் நாம யோகம் பத்திரை நாம கரணம் செவ்வாய் ஓரை கூடிய இந்த நாளில் காலை 9.12 மணிக்கு தனுசு லக்னத்தில் செவ்வாய் நவாம்சையில் சித்தயோகத்தில் சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    பொங்கல் திருநாளன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திரன் ஓரையில் மகர லக்னத்தில் புது பானையில் பொங்கல் வைக்க நல்ல நேரமாகும்.

    இந்த ஆண்டு சித்தயோகத்தில் பிரவேசிப்பதால் எங்கும் நன்மை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நேற்று நள்ளிரவு வரை 3,946 பேருந்துகளில் 2,17,030 பேர் பயணம்.
    • இதுவரை சொந்த ஊர் பயணம் செய்ய 1,96,310 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. பெங்கலுக்கு முந்தைய இரண்டு தினங்களான இன்றும் நாளையும் சனி மற்றும் ஞாயிறு என்பதால் நேற்றே (வெள்ளிகிழமை) பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர் புறப்பட்டனர்.

    முன்னதாகவே முன்பதிவு செய்த பயணிகள் சிரமமின்றி அவர்களுடைய ஊருக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும் இடத்திற்கு சென்று புறப்பட்டனர். சிறப்பு பேருந்துகளில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்து புறப்பட்டனர்.

    முன்பதிவு செய்த மக்களுடன், முன்பதிவு செய்யாத மக்கள் அதிக அளவில் பேருந்து நிலையத்தில் கூடினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன.

    சென்னையில் இருந்து அதிக அளவில் பேருந்து புறப்பட்டுச் சென்றதால் சென்னை- திருச்சி ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் ஊர்ந்த வண்ணம் சென்றன.

    நேற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் 1260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,946 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெிவித்துள்ளது.

    இன்றும் அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
    • பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம்

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு மகர ஜோதியை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி பதினெட்டாம் படி திறக்கப்பட்டது. இதையடுத்து விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

    வருகிற 15-ந்தேதி பொங்கல் அன்று மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

    மகர ஜோதி காலத்தில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர்
    • ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல் மற்றும் விசேஷ நாட்களில் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து அரசின் அனுமதியை பெற்றனர்.

    வார நாட்களில் ஆம்னி பஸ்கள் காலியாக ஓடுவதாகவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இடங்கள் நிரம்புவதாகவும் இதனால் ஏற்படுகின்ற இழப்பை ஈடு செய்து கட்டணத்தை நிர்ணயித்தனர். ஏ.சி. இருக்கை, படுக்கை, ஏசி இல்லாத பஸ்களில் இருக்கை, படுக்கை என கட்டணங்களை பஸ்சின் வசதிக்கேற்ப நிர்ணயித்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தேவை அதிகரித்து வருவதால் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். ஏற்கனவே கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் தேவையை அறிந்து மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    ஒரு சில ஆம்னிபஸ் ஆபரேட்டர்கள் தாங்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு புஷ்பேக் இருக்கை கட்டணம் ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலித்தனர். தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தினர். படுக்கை கட்டணம் ரூ.1,500 ஆக இருந்தது. அவை ரூ.2000 ரூ.2,500 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை ரூ.1,800 முதல் ரூ.2000 வரை வசூலித்த நிலையில் தற்போது ரூ.3000 வரை வசூலிக்கின்றனர்.


    ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.4000 வசூலிப்பதாக தென் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு அதை விட கூடுதலாக ரூ.4,500 வரை பெறப்படுகிறது.

    ஆனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.3,140 ஆகும். கூடுதலாக 1000 ரூபாய் வசூலிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதே போல திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ் ஆபரேட்டர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பண்டிகை காலங்களில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும்.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிப்பு, சோதனையை தீவிரப்படுத்தி பொதுமக்களிடம் பல மடங்கு கூடுதாக வசூலிக்கும் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    ஆம்னி பஸ்களில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வெளிப்படையாக நடக்கும் கட்டண கொள்ளையை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

    இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் பஸ்களை பறிமுதல் செய்வதோடு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    • இந்த உலகில் ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான்.
    • இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வர பகவானாக மாறினார்.

    இந்த உலகில் ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான்.

    இவருக்கு சுவர்க்கலா தேவி(உஷாதேவி), சாயாதேவி என்ற இரு மனைவிகள்.

    அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.

    மகன்களுக்கு வைவஸ்தமனு, இயம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.

    சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை.

    அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது.

    இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.

    சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தனிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு "சாயாதேவி" என்று பெயர் சூட்டினாள்.

    தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், "நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் முன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்" என்று கூறினாள்.

    அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, "சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன்.

    ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை" என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.

    தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள்.

    அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.

    அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

    இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள்.

    இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வர பகவானாக மாறினார்.

    அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

    சனி பகவான் கருமை நிறம் கொண்டவர். அவரது செயல்கள் எல்லாம் சூரியனுக்கு எதிராக இருந்ததால் இருவருக்கும் பகை உணர்வு ஏற்பட்டது.

    சனி பகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது.

    தான் ஒரு சர்வேஸ்வர நிலையை அடைய வேண்டும் என்று தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்கு சென்றார் சனி பகவான்.

    அவர் காசியில் லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து பல ஆண்டுகள் கடும் தவம் செய்தார்.

    அவரது பக்தியை கண்டு மெய்சிலிர்த்து போன சிவபெருமான் பார்வதி சமேதராக காட்சி அளித்தார்.

    அப்போது சிவபெருமான் சனிபகவானை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு சனி பகவான், "எனக்கு என் தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும்" என்றார்.

    மேலும், "உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்றுவிட்டனர்.

    நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் ஆக வேண்டும்" என்றும், "இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு அருள வேண்டும்" என்றும் வரம் கேட்டார் சனிபகவான்.

    அவரது வேண்டுகோளை ஏற்ற ஈஸ்வரன், அவருக்கு "சனீஸ்வரர்" என்ற பெயர் விளங்க அருள்பாலித்தார்.

    • ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    • எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது.

    ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின்,

    தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறையாகும்.

    அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு ஏழு எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள்,

    காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது.

    அருக்கன் என்றால் சூரியன்.

    இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது.

    எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்கன் இலை வைத்து குளிக்கும் வழிபாடு ஏற்பட்டது.

    • மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் அதற்கு மறுநாள் (17-ந் தேதி) காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பொழுதை போக்குவார்கள். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். மெரினாவில்

    சென்னையில் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

    இதன் படி வருகிற 17-ந் தேதி அன்று மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவை யான பாதுகாப்பு ஏற்பாடு களை போலீசார் செய்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை யோரங்களில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையும் தாண்டி மக்கள் கடலில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக போலீஸ் குதிரைப்படை வீரர்களை கொண்டும் கண்காணிக்கப்பட உள்ளது.

    மெரினாவில் கூட்ட நெரிசலின் போது குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவுக்கு பெற்றோருடன் வருகை தரும் குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு வளையம் ஒன்றை கட்டிவிட போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வளையத்தில் போலீஸ் உதவி மைய செல்போன் எண்களும், பெற்றோர்களின் செல்போன் எண்களும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக மாயமாகும் குழந்தைகளை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    டிரோன்கள் மூலமாகவும் வானில் வட்டமடித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மெரினாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும் போலீசார் பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம்.
    • தமிழக அரசுக்கு ரூ.167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு.

    2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.

    அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் எனவும் அறிவித்துள்ளது.

    • ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும்.
    • ஜல்லிக்கட்டு போட்டியின்போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது.

    2024 பொங்கல் பண்டிகைகைய முன்னிட்டு, மதுரை ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    தொடர்ந்து, ஜனவரி 16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

    மேலும், மாடு பிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

    இதற்கிடையே, ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

    மேலும், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது.

    போட்டிகள் தொடங்கும் முன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
    • பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.


    மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.

    விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

    இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×