search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arcot Panchangam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.
    • சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.

    புதுச்சேரி:

    தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார்.

    சோப கிருதான இந்த ஆண்டு மகா சங்கராந்தி புருஷர் நாம கரணம் துவாங்கினி என்ற பெயரில் ஆண் நாய் வாகனத்தில் வலம் வருகிறார்.



    தை 1-ந் தேதி (திங்கட்கிழமை) சுக்ல பட்சம், சதுர்த்தி, சதய நட்சத்திரம் 2-ம் பாதம் வியதி பாத் நாம யோகம் பத்திரை நாம கரணம் செவ்வாய் ஓரை கூடிய இந்த நாளில் காலை 9.12 மணிக்கு தனுசு லக்னத்தில் செவ்வாய் நவாம்சையில் சித்தயோகத்தில் சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    பொங்கல் திருநாளன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திரன் ஓரையில் மகர லக்னத்தில் புது பானையில் பொங்கல் வைக்க நல்ல நேரமாகும்.

    இந்த ஆண்டு சித்தயோகத்தில் பிரவேசிப்பதால் எங்கும் நன்மை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிப்புத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நடிகர் புதிய கட்சி தொடங்குவார்.
    • கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும்.

    ஆண்டுதோறும் நடக்கப் போகும் நிகழ்வுகளை நட்சத்திர, கிரக நிலைகளை ஆராய்ந்து, முன்கூட்டியே கணித்து பஞ்சாங்கம் வெளியிடப்படுகிறது.

    இதில் ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    தமிழ் ஆண்டுகள் வரிசையில், நடப்பு சோபகிருது ஆண்டுக்கு அடுத்து வரும் குரோதி ஆண்டுக்கான பலன்களாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர் கணித்து கூறியிருப்பதாவது:-

    இயற்கை நிகழ்வுகளில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக மும்பை, பீகார், ஒடிசா, காசி, கயா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படும்.

    தென்மேற்கு பருவமழை அதிகளவில் கொட்டும். 16 புயல்கள் உருவாகும். அதில் 4 புயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே வலுவிழந்து விடும். 10 புயல்களில் 4 புயல்கள் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வலுவிழந்துவிடும். 6 புயல்களால் கடும் சூறாவளி காற்றுடன் கனமழை பொழியும். வெள்ளம் அதிக அளவில் ஏற்படும்.

    அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். எதிர்க்கட்சிகளுக்கு போராட்டமான காலமாகும்.

    இந்த ஆண்டு ஜெக ஜாதகத்தில் அமலா யோகம் பெற்றிருப்பதால் வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ராஜயோக காலமாக இருக்கும்.

    அரசியல் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் வழக்குகளில் சிக்கும் அபாயநிலை உருவாகும். இந்த ஆண்டு தன்வந்தர்கள் ஏழைகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம். நடிப்புத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நடிகர் புதிய கட்சி தொடங்குவார்.


                                                                                ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர்

    பூண்டு, வெங்காயம், புளி, மாங்காய், கடுகு, அரிசி விலை உயரும். மின்சார உற்பத்தி பாதிப்பால் மின்வெட்டு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும்.

    கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும். புற்றுநோய்க்கு இந்தியா மருந்து கண்டு பிடிக்கும். வவ்வால்கள் தொல்லை அதிகமாக இருக்கும்.

    2024-ம் ஆண்டில் ஆதாயம் 47 ஆகவும் வருவாய் 71 ஆகவும் இருக்கும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

    கையில் பணம் வைத்திருப்பது குறையும். ஆன்லைன் வியாபாரம் சூடுபிடிக்கும். மோசடிகள் அதிகரிக்கும். பாக பிரச்சனைகள் சம்பந்தமாக அதிக வழக்குகள் ஏற்படும். போலீசார் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களால் திருட்டு கைவரிசைகள் தமிழகத்தில் அதிகரிக்கலாம்.

    பாரத திருநாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடான பாகிஸ்தான் அல்லது தெற்கு பகுதியில் உள்ள இலங்கை நமது நாட்டுடன் இணையும் சூழ்நிலை உருவாகலாம்.

    சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் எல்லை பிரச்சனைகள் உருவாகி போர் மூளும் சூழல் உருவாகலாம்.

    இவ்வாறு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலில் வாழும் ஜீவராசிகளுக்கு கெடு பலன்கள் உண்டாகும்.
    • இஸ்ரேல்-காசா இடையே நடந்து வரும் போரில் காசா நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

    ஆற்காடு கா.வெ.சீத்தாராமய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த சோபகிருது ஆண்டு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர் எதிர்கால பலன்கள் பற்றி கூறியிருப்பதாவது:-

    லக்கினாதிபதியான சூரிய பகவான் இந்த ஆண்டு எந்த பதவியும் வகிக்கவில்லை. ஆனால் லக்கினத்திற்கு 9-ம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், ராஜ கிரகமாகிய புதனுடன், சம்மந்தப்பட்டு இருப்பதாலும் ராகு சேர்க்கையுடன் இருப்பதாலும் தனது 7-ம் பார்வையாக கேது கிரகத்தை பார்ப்பதும் விசேஷம் ஆகும்.

    இதன் பலன்களாக இந்த ஆண்டு தோல் கம்பெனிகளுக்கு அதிக அளவு பாதிப்பும், மாசு கட்டுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீரடைந்து நற்பலன் தரும்.

    கடலில் வாழும் ஜீவராசிகளுக்கு கெடு பலன்கள் உண்டாகும். அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நற்பலன் கிடைக்கும்.

    உலக சரித்திரம் வாய்ந்த ஒரு பெரிய தேவாலயம் மற்றும் வெளிநாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் உண்ண உணவு இன்றி மின்சாரம் இன்றி இருளில் மூழ்கும். தொலைதொடர்பு கடுமையாக 5 நாட்கள் பாதிக்கும்.

    தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, அலுமினியம், கண்ணாடி, பாதரசம், விலை ஏறி இறங்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் 11-ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல்-காசா இடையே நடந்து வரும் போரில் காசா நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

    தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டது. பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உண்ண உணவின்றி திண்டாடி வருகின்றனர்.

    இதன் மூலம் உலகில் போர் நடக்கும் என்பதை ஆற்காடு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
    • ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது.

    ஆற்காடு:

    தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தக்காளி திருடு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    ஜூலை மாதம் தொடக்கத்தில் உயரத் தொடங்கிய தக்காளி விலை தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதனால், சமையலில் தக்காளி பயன் படுத்துவது குறைந்துள்ளது.

    இந்நிலையில் தக்காளி விலை உயரும் என்பதை ஆற்காடு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சீத்தா ராமய்யர் பஞ்சாங்க குறிப்பில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது.

    2023-2024-ம் ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் சோபகிருது தமிழ் ஆண்டின் 34, 35 பக்கங்களில் ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்க்காண கணிப்பில் இந்த தகவல் உள்ளது.

    அறிவியலை மீறி வாழ்வியல் சாஸ்திரமான பஞ்சாங்கத்தில் மழை, புயல், வானிலை, விளைச்சல் குறித்த தகவல்கள் துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆற்காடு ஜோதிடர் சுந்தர்ராஜன் கூறுகையில்:-

    ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறியபடி தற்போது தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் டெல்லி ஒரிசா மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மணல் பிரசனை தீரும். கட்டிட உபகரணங்கள் விலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி அனைத்தும் நடந்து வருகிறது என்றார்.

    • ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் நல்ல பலன்களும், மோசமான பலன்களும் நடக்கலாம்.
    • அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படலாம்.

    அமாவாசை தினத்தன்று தங்களது மூதாதையர்களுக்கு திதி வழங்கி வழிபடுவது வழக்கம். அதில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந்தேதி (ஆடி-1) அமாவாசையும், ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) ஒரு அமாவாசையும் என 2 அமாவாசை வருகிறது.

    இதனால் எந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி வழங்கலாம் என்பது குறித்து பொதுமக்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

    இதுகுறித்து ஆற்காடு பஞ்சாங்க ஜோதிடர் சுந்தரராஜன் அய்யரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. அதில் ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உரியதாகும். அந்த நாளிலேயே முன்னோர்களுக்கு திதி வழங்குவது நல்லது.

    ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் நல்ல பலன்களும், மோசமான பலன்களும் நடக்கலாம்.

    வங்கி பரிவர்த்தனைகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும். நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க தயாராக இருக்கும். ஆனால் வாங்குவதற்கு தான் வாடிக்கையாளர்கள் கிடைக்கமாட்டார்கள். வடமாநிலங்களில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும்.

    பெரிய தனவந்தர்கள், தொழில் அதிபர்கள் கஷ்டப்பட நேரலாம். பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருவார்கள். சோதனைகள் மூலம் கருப்பு பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்படும்.

    அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படலாம்.

    வடமாநிலங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கும். நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும். விமான போக்குவரத்து பயண டிக்கெட் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும். சோலார் உற்பத்தி அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×