search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் மோசடி"

    • மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.

    அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

    இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ‌.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    மதுரை ராமகிருஷ்ணா புரம் காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்த் (வயது 36). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனைவிக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது நண்பர்கள் மூலம் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே உள்ள பந்தல்குடி நெடுங்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜான் தேவபிரியம் என்பவர் அறிமுகமானார்.

    அவர் ஜெயகாந்த்திடம் மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஜெயகாந்த் 2018-ம் ஆண்டு ரூ.6 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. அப்போது ஜான் தேவ பிரியம் சுகாதா ரத்துறையில் அரசு வே லைக்கான ஆணை வீடு தேடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்ற மும் இல்லை.

    இதுகுறித்து ஜெயகாந்த் கேட்டபோது, கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் வேண்டுமென தெரி வித்துள்ளார்.

    அதையும் நம்பிய ஜெய காந்த் ஜான் தேவபிரிய னின் பெற்றோரிடம் ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரி கிறது. மொத்தம் ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அரசு வேலை வாங்கி தரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகாந்த் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பண த்தை தராமல் மோசடி செய்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து அவர் பந்தல்குடி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி ரூ.9 லட்சம் மோ சடி செய்த ஜான் தேவப்பிரியம், அவரது தந்தை பால்துரை சிங், தாயார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • டிப்-டாப் ஆசாமிகள் பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதுவரை பலருக்கு கடனுதவி வாங்கி தந்துள்ளதாகவும் கூறினர்.
    • பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டி ஏமாற்றம் அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள பெரியகோம்பை பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டிப்டாப் ஆசாமிகள் சிலர் காரில் வந்து இறங்கினர். அவர்கள் அங்குள்ள பெண்களிடம் தாங்கள் மகளிர் சுயஉதவி க்குழுவிற்கு கடனுதவி பெற்றுத் தருவதாகவும், இதுவரை பலருக்கு கடனுதவி வாங்கி தந்துள்ளதாகவும் கூறினர்.

    முன்பணமாக ரூ.2400 கட்டினால், ரூ.1 லட்சம் பணம் கிடைக்கும். அதனை சிறுசிறு தொகைகளாக வங்கியில் செலுத்தலாம் என கூறியுள்ளனர். மேலும் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாக த்தில் தங்கள் அலுவலகம் உள்ளது எனக்கூறி உள்ளனர். டேப்லெட்டில் கூகுள் மேப் வரைபடத்தை காட்டி தங்களது கிளை அலுவலகம் பல இடங்களில் உள்ளதாக அந்த கிராம மக்களை நம்ப வைத்தனர். அதனை நம்பி அந்த கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் ரூ.2400 பணம் கட்டினர்.

    சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர். 2 நாட்களில் பணம் கிடைக்கும் என்று நம்பியிருந்த பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஆசாமிகள் சொன்ன விலாசத்திற்கு வந்து பார்த்த போது அங்கு அப்படி ஒரு அலுவலகமே இல்லையென தெரியவந்தது.

    இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்டாப் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    இதேபோல கடந்த சில நாட்களாக கிராமப்புறங்க ளில் தாங்கள் ஆதரவ ற்றோருக்கு உதவிகள் செய்து வருவதாகக் கூறி உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு சில கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணம் மட்டுமின்றி அரிசி, பருப்பு, துணிகள் ஆகியவற்றையும் பெற்றுக் கொண்டு ஆதரவற்றோர் மையத்திற்கு உதவி செய்வதாக கூறி வருகின்றனர். எனவே இதுபோன்ற மோசடி கும்பலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என போலீசார் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாடகை வீட்டில் வசிப்பதால், மகன் திருமணத்துக்கு முன்பாக, சொந்த இடம் வாங்கி வீடு கட்ட கற்பகவள்ளி ஆசைபட்டார்.
    • மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கற்பக வள்ளி (50). கணவரை இழந்தவர். ஒரு மகனுடன் வசித்து வருகிறார்.

    கணவர் கன்டெய்னர் லாரி டிரைவராக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் காப்பீடு தொகையாக வந்த பணத்திலும், சேமிப்பு பணத்திலும், மகன் வேலைக்கு சென்றதால் வந்த ஊதியத்தில் செலவு போக மீதமுள்ள பணத்தையும் சேமித்து வைத்திருந்தார்.

    வாடகை வீட்டில் வசிப்பதால், மகன் திருமணத்துக்கு முன்பாக, சொந்த இடம் வாங்கி வீடு கட்ட கற்பகவள்ளி ஆசைபட்டார்.

    இதற்காக இவர் வில்லியனூர் என்.எஸ்.பி. போஸ் நகரில் ரூ.35 லட்சம் கொடுத்து வீட்டுமனை வாங்கினார்.

    அந்த இடத்தில் வீடு கட்ட பூஜை செய்ய கற்பகவள்ளி சென்றபோது அந்த இடம் வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு சொந்தமானது என்பதும் போலி பத்திரம் தயாரித்து தன்னை ஏமாற்றி வீட்டு மனையை விற்று விட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கற்பகவள்ளி, வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மனையை உருளையன்பேட்டை சரவணன் மனைவி அனிதா, உழவர்கரையை சேர்ந்த வீட்டுமனை தரகர் கோபி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து கற்பக வள்ளி விற்றது தெரியவந்தது. இதற்கு அவர்களுக்கு முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகரை சேர்ந்த வேணிமூர்த்தி, மற்றும் மூலகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிராமை தொடர்பு கொண்டு பின்பற்றினால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலை நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் நாகராசன் இவரது மகன் ஜெயக்குமார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இன்ஸ்டாகிராமை தொடர்பு கொண்டு பின்பற்றினால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம். மேலும் இதில் பகுதி நேரமாக வேலை பார்த்தாலும் அதிக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு ஜெயக்குமார் பேசியுள்ளார். அப்போது அதில் பேசிய மர்ம நபர் ஒரு்வர் வங்கி கணக்கை ஒன்றை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லியுள்ளார். அதன்படி ரூ. 14.50 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் ஜெயக்குமார் செலுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த சேல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    பின்னர் இதில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயக்குமார் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    அதே போன்று ஒசூர் ராயாக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் தேவி (வயது 26) இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 15-ந் தேதி வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியில் கூகுள் மேப்பில் ரேட்டிங் போடும் வேலையில் பணியாற்ற முதலீடு செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பி அதில் இருந்த செல்போன் எண்ணில் பேசிய தேவி பேசினார். அப்போது அவரிடம் பேசிய நபர் பணம் செலுத்த சொன்ன வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் படித்தவர்களை தான் குறி வைக்கிறார்கள். அதில் படித்து விவரம் தெரிந்தவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இது போன்ற மோசடிகளில் சிக்கி கொள்கிறார்கள். செயலிகள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் வரும் குறுஞ்செய்திகளை பார்ப்பதையும் டவுன்லோடு செய்வதையும் செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    கிருஷ்ணகிரியில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

    • கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
    • புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்(வயது39).

    இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எங்கள் கடைக்கு சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த செந்தில்மோகன் என்பவர் வந்தார்.

    அவர் தான் சென்னையில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், எனக்கு மொத்தமாக சிக்கன் சப்ளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி நாங்கள் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.

    இதுவரை சப்ளை செய்த சிக்கனுக்கு ரூ.47 லட்சத்து 37 ஆயிரத்து 999 செந்தில்மோகன் தர வேண்டும். ஆனால் அவர் இதுவரை பணத்தை தரவில்லை.

    இதுகுறித்து அவரிடம் கேட்டால் விரைவில் தருகிறேன் என்றார்.

    இந்நிலையில், கடந்த 10 மாதமாக செந்தில்மோகன் சிக்கன் வாங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் சென்னைக்கு சென்று அவர் கூறிய இடத்திற்கு சென்றேன்.

    அப்போது அங்கு அவர் சொல்லிய சிக்கன் கடை இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

    எனவே சிக்கன் வாங்கி விட்டு ரூ.47.37 லட்சம் மோசடி செய்த செந்தில்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு சிறிய தொகையை ராமகிருஷ்ணன் பெயரிலேயே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 5 சதவீதம் உடனடியாக லாபம் கிடைக்குமாறு செய்துள்ளனர்.
    • கடந்த 15 நாட்களாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தை பல தவணைகளாக அனுப்பியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கோலாஸ் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65) தொழிலதிபர்.

    பிரைவேட் கன்சல்டன்சி நடத்தி வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தற்போது கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நிறைய லாபம் வருகிறது.

    எனவே கிரிப்டோ கரன்சியில் நீங்கள் முதலீடு செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். மேலும், அவருக்கு கிரிப்டோ கரன்சி எப்படி முதலீடு செய்வது என்ற விவரத்தை சில வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பியுள்ளனர். தங்களுக்கு எந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விவரம் தெரியும் என்றும் கூறியுள்ளனர்.

    ஒரு சிறிய தொகையை ராமகிருஷ்ணன் பெயரிலேயே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 5 சதவீதம் உடனடியாக லாபம் கிடைக்குமாறு செய்துள்ளனர். இதனால் அவர்கள் மீது ராமகிருஷ்ணனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து கடந்த 15 நாட்களாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தை பல தவணைகளாக அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் எந்த லாபத்தையும் ராமகிருஷ்ணனுக்கு அவர்கள் அனுப்பவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸ் சூப்பிண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • கணேஷ்குமார் கடந்த 19 மற்றும் 25-ந்தேதிகளில் வங்கிகள் மூலமாக ரூ.56 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
    • எளையாவூரை சேர்ந்த சசிதரன் என்பவர், கே.ஒய்.சி. விவரங்களை புதுப்பிப்பு கட்டணம் கட்ட வந்த போன் அழைப்பை நம்பி ரூ.2 லட்சத்தை இழந்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 64). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை போலீசார் மற்றும் சி.பி.ஐ. அதிகாரி எனக்கூறி சிலர் சந்தித்துள்ளனர். அவர்கள் கணேஷ்குமாரிடம் உங்கள் சிம் கார்டு தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறி உள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தான் எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

    ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர்கள், உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்ளோம் என கூறி உள்ளனர். இதனால் பயந்துபோன கணேஷ்குமார் அவர்களிடம் பேசியபோது, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் பல லட்சங்கள் தரவேண்டும் என சி.பி.ஐ. அதிகாரி என கூறியவர் தெரிவித்துள்ளார்.

    அதனை ஏற்றுக்கொண்ட கணேஷ்குமார், கடந்த 19 மற்றும் 25-ந்தேதிகளில் வங்கிகள் மூலமாக ரூ.56 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார். மீண்டும் அந்த கும்பல் பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த கணேஷ்குமார், தளிபரம்பா போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கணேஷ் குமாரிடம் பணம் பறித்தவர்கள் போலியாக போலீசார் சி.பி.ஐ. எனக்கூறி ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் எளையாவூரை சேர்ந்த சசிதரன் என்பவர், கே.ஒய்.சி. விவரங்களை புதுப்பிப்பு கட்டணம் கட்ட வந்த போன் அழைப்பை நம்பி ரூ.2 லட்சத்தை இழந்துள்ளார். அவரிடம் பேசியவர்கள், கே.ஒய்.சி. புதுப்பிக்க ரூ.61 செலுத்த வேண்டும் என ஒரு லிங்க் கை அனுப்பி உள்ளனர். அதனை பதிவிறக்கம் பதிவு செய்தபோது தான் சசிதரன் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    கேரளாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் தேவையற்ற அழைப்புகள், மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கேரள சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32).
    • ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்

    நாகர்கோவில் :  தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(வயது32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அஜி, தனது குழந்தைகளுடன் ஊரில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தோழி வீட்டுக்கு செவ்வ தாக தனது தாயிடம் கூறிவிட்டு தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஜி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்பு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. குழந்தைகளுடன் தனது மகள் மாயமானது குறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் தாய் பிரேமா புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அஜி கொற்றிக்கோடு மற்றும் தக்கலை பகுதியில் பலரிடம் நகை-பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றி சென்றதாக பலர் புகார் கொடுத்தனர். அந்த புகாரை பெற்றுக்கொண்ட கொற்றிக்கோடு போலீசார், அஜியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் தங்கியி ருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந் தனர். அவர்கள் செல்வ தற்கு முன்பாகவே, புகார் கொடுத்த வர்கள் பாறசாலைக்கு சென்று அஜி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உடனே பாற சாலை போலீசார் அஜியை மீட்டு விசாரணை நடத்தி கொற்றிகோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில் முதலார் பகுதியை சேர்ந்த கிங்சிலி என்பவர் அஜி மீது போலீசில் புகார் செய்தார். தன்னிடம் ரூ.2லட்சத்து 43 ஆயிரம் வாங்கி ஏமாற்றி சென்ற அஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஜியை கைது செய்தனர். மோசடி புகார்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்பு தக்கலை கோர்ட் டில் அஜி ஆஜர்படுத்தப் பட்டார். அவரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அஜி தக்கலை பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.
    • அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளவர் சிவசங்கரன்.

    இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ளது. சிவசங்கரன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை அமலாக்கதுறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

    அதற்கு சிவசங்கரன் எம்.எல்.ஏ. தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

    அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.

    அந்த நபர் சிவசங்கரனிடம், போனில் பேசிய அமலாக்கதுறை அதிகாரி நான் தான் என கூறி வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சிவசங்கரன், அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அந்த நபர் அடையாள அட்டையை கையில் கொண்டு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சிவசங்கரன் எம்.எல்.ஏ., உங்களின் உயர் அதிகாரிகளிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.

    அதற்கு அவர், உயர் அதிகாரிகள் பேசமாட்டார்கள் என தெரிவித்தார். இதனால் அந்த ஆசாமி மீது சிவசங்கரன் எம்.எல்.ஏ.வுக்கு சந்தேகம் எழுந்தது உடனே ரெட்டியார்பாளையம் போலீசுக்கும், அவரின் அலுவலக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் போலீசாரும், சிவசங்கரன் எம்.எல்.ஏ.வின் அலுவலக ஊழியர்களும் வீட்டிற்கு வந்தனர். அதையடுத்து அந்த நபரிடம், போலீசாரும், ஊழியர்களும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

    அதையடுத்து அவர்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்தனர். இதில் பயந்து போன அந்த நபர் தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

    பின்னர் அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் வடக்குப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த நபர், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (வயது 35) என்பது தெரியவந்தது. வரதராஜன் ஆழ்வாரும், அவரது மனைவியும் வீட்டில் முறுக்கு, சோமாஸ் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தது.

    அதாவது சிவசங்கர் எம்.எல்.ஏ. வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்திடம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வைத்திய நாதனிடம் பணபரி வர்த்தனை மோசடி (மணி லாண்டரி) புகார் வந்ததாகவும் கூறி, அதனை மறைக்கவும் உயர் அதிகாரிகளை சரிகட்டவும் 2 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தர பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.

    ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறி பணம் தர மறுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை அமலாக்கதுறை அதிகாரி என கூறி பேசியதும் தெரியவந்தது.

    போலீசின் பிடியில் சிக்கியுள்ள திருவொற்றியூரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் கூகுலில் எம்.எல்.ஏ., எம்.பி.களின் செல் நெம்பரை எடுத்து தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

    இதுபோல் திருமாவளவன் எம்.பி. உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.க்களை செல்போனில் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என்று பேசியதும் தெரிய வந்தது.

    அதோடு வரதராஜன் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் தமிழக அமைச்சர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட ஏராளமான போட்டோக்கள் இருந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரதராஜன் ஆழ்வார் 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் புதுவைக்கு வந்து, உருளையன்பேட்டையில் ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    புதுவையில் இதுபோல் வேறு யாரிடமும் அமலாக்கதுறை அதிகாரி எனக்கூறி பணம் பறித்துள்ளாரா? இதில் அவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவசங்கர் எம்.எல்.ஏ. அளித்த புகாரின்பேரில் வரதராஜன் ஆழ்வார் மீது அரசு ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருச்சியில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடந்தது.
    • உரிமையாளர் மதன் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.

    திருச்சி:

    திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நகைக்கடை நிர்வாகம் வாடிக்கையாளர்களிடம் செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை என அறிவித்ததோடு ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்குவதோடு, 10 மாத முடிவில் 106 கிராம் தங்கம் வழங்குவதாக அறிவித்தனர்.

    இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி நூற்றுக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் வட்டித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டது. கடந்த 2 மாதமாக வங்கி நிர்வாகம் அனுப்பிய காசோலை பணமில்லாமல் திரும்பியது. இந்த வகையில் ரூ. 100 கோடி வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட முதலீட்டாளர்கள் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜூவல்லரி கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் 500-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்ய பிரபு பிரியா உத்தரவின் பேரில் திருச்சி, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    திருச்சியில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடந்தது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஜூவல்லரி கடை மற்றும் கோகினூர் தியேட்டர் பகுதியில் உள்ள மெயின் கடையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த 2 கடைகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் 9 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டது.

    தங்க நகை 6 பவுன் மட்டுமே கிடைத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். கடைகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் எங்கே போனது? மோசடி கும்பல் முன்கூட்டியே அவற்றை பதுக்கிவிட்டார்களா? என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் திருச்சி பாபு ரோடு பகுதியில் ஜூவல்லரி உரிமையாளர் மதனின் தந்தை வீடு மற்றும் ஐயப்பன் கோவில் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட்ஸ் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை.

    உறையூர் லிங்க நகரில் உள்ள பிரணவ் ஜூவல்லரி மேலாளர் நாராயணன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 50 ஆயிரம் ரொக்க பணம் சிக்கியது. கும்பகோணத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் வெள்ளி நகைகள் மட்டுமே கிடைத்துள்ளது.

    இதற்கிடையே திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது ஆசைவார்த்தை கூறி மோசடி செய்தல், ஏமாற்றுதல் கூட்டு சதி செய்தல் என்பன உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் மேலாளர் நாராயணனை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிமையாளர் மதன் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கைதான நாராயணனை மதுரையில் உள்ள முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். உரிமையாளர் மதன் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் சென்னை திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற பத்திரப்பதிவுத்துறை உதவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நாடி உள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மூலக் கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (61). இவர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந் தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெயர் முகவரி தெரியாத நபர் பணம் எடுத்து தருவதாக கூறியதையடுத்து கார்டை கொடுத்து பணம் ரூ.20,000 எடுத்து தருமாறு சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    அந்த நபர் கார்டை மெசினில் சொருகி விட்டு பணத்தை டைப் செய்ததாகவும், சுப்பிரமணியன் ரகசிய எண்ணை பதிவு செய்துள்ளார். அப்போது பணம் வரவில்லை எனக் கூறி அந்த நபர் ஏற்கனவே வைத்திருந்த ஒரு போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். பின்பு சுப்பிரமணியன் அரண்மனை பகுதியில் இருந்தபோது அவரது செல் போனிற்கு ரூ.42,000 பணம் எடுத்திருப்பதாக குறுந்தக வல் வந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

    ×